Monday, 30 November 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 30.11.2009

இலங்கை பங்குச்சந்தை திங்கட்கிழமை இன்று 1.20 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.20 சதவீதம் (34.43 புள்ளி) உயர்ந்து 2,913.39 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.31 சதவீதம் (43.12 புள்ளி) உயர்ந்து 3,326.08 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.80 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 30.11.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 30.11.2009

திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 1.44 பில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 230.4 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 1.67 பில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/30112009.html"

* ராஜ் ராஜரட்னத்தின் சிலோன் லேதர் பங்குகளும் விற்பனைக்கு

கடந்த வெள்ளிகிழமை அன்று ராஜ் ராஜரட்ணம் 3.6 மில்லியன்( வழங்கப்பட்ட மூலதனத்தில்-29%) சிலோன் லேதர் Products(CLPL) பங்குகளை 198 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்தார். இதனை ஒரு 55 ரூபாய் வீதம் Environmental Resources Investment PLC(GREG)ன் துணை நிறுவனமான DNH Financial (Pvt) Ltd வாங்கியுள்ளது.

மேலும் கடந்த வாரம் ராஜ் விற்பனை செய்த இலங்கை கொமேர்சியல் வங்கிப் பங்குகளை இலங்கை வங்கியே கொள்வனவு செய்ததாக பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog-post_1030.html"

Sunday, 29 November 2009

* மக்களின் ஏழ்மைக்குரிய காரணங்கள்

 1. சூழ்நிலைகள். (Environment)

 2. அறியாமை.(Ignorance)

 3. மூடிய மனது. (Closed Mind)

 4. தன் பலம் தெரிவதில்லை.

 5. தன் திறமைகளை விற்கத் தெரிவதில்லை. ( Marketing Ability)

 6. மாறுதலுக்குத் தயாராவதில்லை.

 7. ஒத்தி போடுதல்.(Procrastination)

 8. காலத்தை சரியாக உபயோகப்படுத்துவதில்லை.(No proper use of Time)

 9. குறிக்கோளின்மை.

 10. பயம்.

 11. தோல்வியில் துவண்டு போதல்.

 12. வதந்திகளை நம்புவது.

 13. விடாமுயற்சியுன்மை.

 14. செலவு செய்யும் மனப்பான்மை.

 15. உணர்ச்சியின் அடிப்படையில் முடிவெடுப்பது.

 16. நான் தவறு செய்துவிட்டேன்( I made mistake) என்று ஒப்புகொள்ளாத நிலை.

 17. அற்புதங்களில் நம்பிக்கை.

 18. எதிர்மறை எண்ணங்கள்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog-post_27.html"

Saturday, 28 November 2009

* இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனதத்தின் அதிரடி மாற்றங்கள்

2003 ஆண்டு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனதத்தின் 90 சதவீத பங்குகளை தனியாருக்கு வழங்கியமை சட்டவிரேதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின் அரசாங்கத்தினால் நியமிக்கபட்ட புதிய பணிப்பாளர் சபை பல அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.

முதலாவது LHCL இனால் நிர்வகிக்கப்பட்டு வந்த இலங்கையின் அப்பலோ ஹொஸ்பிடலை லங்கா ஹொஸ்பிடல் ஆக பெயரிட்டது. இவ் வைத்தியசாலை இதுவரை அப்பலோ என்ற பெயரை பயன்படுத்துவதற்கு ராயல்ட்டி அடிப்படையில் கட்டணம் செலுத்திவந்தது.

LHCL இன் பங்குதாரராக இந்திய அப்பலோ நிறுவனம் இருந்தபோதும் அப்பங்குகளை இலங்கையின் வர்த்தக பெரும்புள்ளியான ஹரி ஜயவர்தன இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனத்தினூடாக கொள்வனவு செய்திருந்தார்.

இரண்டாவது Distilleries Company of Sri Lanka (DCSL)ல் உள்ள முதலீட்டையும் வெகு விரைவில் விற்பனை செய்யவுள்ளதாக காப்புறுதி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மது ஓழிப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு அங்கமாகவே இதனை கொள்ள முடியும் என இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனதத்தின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.DCSLயின் 50% மேற்பட்ட் கட்டுப்பாட்டையும் வர்த்தக பெரும்புள்ளியான ஹரி ஜயவர்தன கொண்டுள்ளார்.

மேலும் காப்புறுதி கூட்டுத்தாபனம் DFCC,ASRI ஆகிய நிறுவனங்களிலும் முதலிட்டுள்ளது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog-post_636.html"

* கொமேர்சியல் வங்கியில் உள்ள ராஜ் ராஜரட்ணத்தின் பங்குகள் விற்பனை


ராஜ் ராஜரட்ணம் அவர்களின் இலங்கை கொமேர்சியல் வங்கியில் உள்ள அவரது 3.5 மில்லியன் பங்குகள் 670 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டன.

திரு ராஜ் அவர்களின் கலியோன் குழுமத்தின் நிதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு முதலீட்டாளர்களுக்கு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த பங்குகள் விற்கப்படுவதாக கூறப்பட்டது. மேலும் பங்குகள் விற்கப்படலாம் என்பதனால் பங்கு சந்தையில் தளம்பல் காணப்படுவதாக கூறப்படுகின்றது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog-post_28.html"

Friday, 27 November 2009

* ரேணுகா எக்ரி பூட்ஸ் பங்குகள் ஓவர் சப்ஸ்கிரைப்டு (Over subscribed)

ரேணுகா குழுமத்தின் ரேணுக்கா எக்ரி பூட்ஸ் ரூபா 270 மில்லியனை திரட்டும் முகமாக 120 மில்லியன் சாதாரண வாக்குரிமையுள்ள பங்குவழங்கல் இன்று ஓவர் சப்ஸ்கிரைப்டு (Over subscribed)ஆனது.


இன்று(27/11/2009) 161.5 மில்லியன் பங்குகள்கோரப்பட்டு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளது. திரட்டப்படும் நிதி இந்நிறுவனத்தின் கடன்களை அடைக்கவும் புதிய முதலீடுகளை செய்யவும் பயன்படுத்தப்படும்.. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/over-subscribed.html"

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 27.11.2009

இலங்கை பங்குச்சந்தை இன்று 1.01 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.01 சதவீதம் (28.73 புள்ளி) உயர்ந்து 2,878.96 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.10 சதவீதம் (35.74 புள்ளி) உயர்ந்து 3,282.96 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 368.9 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 27.11.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 27.11.2009

வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 151.5 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 10.9 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 231.5 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் :- 23-11-2009 முதல் 27.11.2009 வரை

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- 23-11-2009 முதல் 27.11.2009 வரை

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/27112009.html"

* சர்வதேச நாணய நிதியத்திடம் 10 மெட்ரிக் டன் தங்கம் வாங்கியது இலங்கை மத்திய வங்கி

ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை மத்திய வங்கி 10 மெட்ரிக் டன் தங்கம் வாங்கியுள்ளது. இதன் மதிப்பு 375 மில்லியன் அமெரிக்க டொலர். அமெரிக்காவின் வாஷிங்டனில் சர்வதேச நாடுகளுக்கு நிதி உதவிகள் வழங்கி வரும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகம் உள்ளது. இந்த சர்வதேச நாணய நிதியத்திடம் 3 ஆயிரத்து 217 டன் தங்கம் இருப்புள்ளது.

இலங்கை மத்திய வங்கிக்கு இந்த தங்கங்கள் நவம்பர் 23 ம் திகதி உலக தங்க மார்க்கெட்டில் விற்கும் விலையில் விற்பனை செய்யப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.இலங்கையிடம் ஏற்கெனவே 5.3 டன்கள் தங்கம் இருந்தது,இப்பொழுது அது 15.3 டன்களாக உயர்ந்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்று 1170 டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த மாதங்களில் இலங்கை மத்திய வங்கி, தங்கக் கொள்வனவு/விற்பனை என்ற விடயங்களை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/10.html"

Thursday, 26 November 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 26.11.2009

இலங்கை பங்கு சந்தை வியாழக்கிழமை இன்று 0.29 சதவீதம் சரிவை கண்டுள்ளது.


பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.29 சதவீதம் (08.31 புள்ளி) உயர்ந்து 2,850.23 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.31 சதவீதம் (10.26 புள்ளி) சரிந்து 3,247.22 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 267.5 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 26.11.2009


மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 26.11.2009


வியாழக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 188.9 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 7.4 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 196.3 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/26112009.html"

* பங்குகளின் விலை மாறுபடுவதற்கு காரணம் என்ன? (What Causes Stock Prices To Change?)

சந்தையின் நிலையை பொறுத்து பங்குகளின் விலை மாறுபடும். உதாரணமாக, அதிக மக்கள் ஒரு பங்கை (stock) வாங்க முன்வருகிறார்கள் என்றால் அப்பங்கின் விலை அதிகரிக்கும். அதாவது, வாங்குவது அதிகரித்து விற்பது குறைகிறது. (What causes stock prices to change)

அதிக மக்கள் ஒரு பங்கை வாங்குவதற்கு பதிலாக விற்கிறார்கள் என்றால், அப்பங்கின் விலை குறையும். அதாவது வாங்குவது குறைவு, விற்பது அதிகம். (When the selling is more, price falls down)

சற்று எளிமையாக சொல்லப்போனால், மக்கள் அதிகளவில் வெங்காயம் வாங்குகிறார்கள் என்றால் அதன் தேவை அதிகரித்து, விலை ஏறும். அதே வெங்காயத்தின் தேவை குறைந்தால், விலையும் குறையும். அதே கதைதான் பங்குச்சந்தையிலும்.

சரி, முதலீட்டாளர்கள் ஒரு பங்கை வாங்க வேண்டுமென்றும், வேண்டாமென்றும் எவ்வாறு முடிவெடுக்கிறார்கள். (How investor decides to buy/not to buy particular stock) இதற்கு பல காரணங்கள் உண்டு. பெறும்பாலும் அது முதலீட்டாளரின் மன நிலையை பொறுத்து.

சரி சில காரணங்களைத்தான் பார்ப்போமே !

ஒரு கம்பனி மேல் கூறப்படும் செய்தி (what news is positive for a company and what news is negative). அது நல்ல செய்தியாகவும் இருக்கலாம், கெட்ட செய்தியாகவும் இருக்கலாம். பொதுவாக முதலீட்டாளர்கள் ஒரு கம்பனியின் மேல் வைத்துள்ள நம்பிக்கையை பொறுத்தே, அக்கம்பனியின் பங்கு ஏற்றத்தையோ, வீழ்ச்சியையோ சந்திக்கும்.

ஒரு கம்பனியின் சந்தை மதிப்பு. (Market capitalization)

ஒரு கம்பனியின் சொத்து, அதன் சந்தை மதிப்பை பொறுத்து. அதாவது ஒரு பங்கின் விலை * மொத்த பங்குகள். (price per share * no of shares)

உதாரணமாக, ஒரு கம்பனி (Company A) பங்கின் விலை $100 என்று வைத்துக்கொள்வோம். மொத்தம் 1 Million பங்குகள் (shares) என்றால் அக்கம்பனியின் மதிப்பு என்பது $100 * 1 million shares = $100 millionஆகும்.

அதே மற்றொரு கம்பனி (Company S) பங்கின் விலை $50 என்று வைத்துக்கொள்வோம். மொத்த 5 million பங்குகள் என்றால், அக்கம்பனியின் மதிப்பு $50 * 5 million shares = $250 million ஆகும். அதாவது முன்பு கூறப்பட்ட (Company A) கம்பனியை வீட இதற்கு (Company S) சந்தையில் மவுசு அதிகம்.

கம்பனியின் ஆண்டு வருமானம். (Company Earnings)
ஒரு கம்பனி லாபகரமாகவும், அதிக வருமானம் ஈட்டுகிறது என்றால் சந்தையில் நீண்ட காலம் நிலைக்க கூடியது என்று அர்த்தம்.

அதே ஒரு கம்பனி நட்டத்தில் ஓடுகிறது என்றால், அக்கம்பனியின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் தயங்குவார்கள். அவ்வறான நிறுவனங்கள் சந்தையில் நிலைக்க முடியாது.

இதற்காகத்தான் பொது நிறுவனங்கள் ஒவ்வொரு காலண்டிற்கும் லாபம்/நட்டங்களை வெளியிடுவார்கள். அவ்வாறான முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கு வகையில் இருந்தால், அக்கம்பனி பங்குகளின் விலை ஏறும். அதே எதிர்பார்த்த அளவிற்கு முடிவுகள் இல்லாமல் அதிர்ச்சியை கொடுக்கும் என்றால் பங்குகளின் விலை இறங்கும்.

பங்குகளின் விலை ஏற்றத்திற்கும் வீழ்ச்சிக்கும் கம்பனியின் காலாண்டு முடிவுகளை (Quarterly results) மட்டும் சாராது, வேறு நிறைய காரணங்களும் அடங்கும். அவ்வாறான சில காரணங்கள் பின்வருமாறு,

-நாட்டின் பொருளாதார நிலையை பொறுத்து.

-பணவீக்க விகிதத்தை பொறுத்து. (Inflation).

-நிதி அமைச்சகத்தின் பொருளாதார கொள்கைகள்.

-அந்நிய முதலீடுகள். (Foreign Investments).

-மசகுஎண்ணெய் விலையில் ஏற்றம், இறக்கத்தை பொறுத்து. (Oil prices).

-பருவ மழை பெய்ய வில்லை என்றால் தானிய உற்பத்தி குறைந்து, அதை சார்ந்த பங்குகள் பாதிப்படையும்.

-மத்திய வங்கி வெளியிடும் செய்திகள். (Central Bank news).

-புயல், சுனாமி, வெள்ளம் போன்ற பேரழிவுகள். (Natural disaster).

-அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள். (American economical status).

-அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை.

என்று எவறுமே கனிக்க முடியாத நிறைய விசயங்கள் பங்குச்சந்தை பாதிக்கும். மேலே குறிப்பிட்டது போல இவை சில காரணங்களே. பங்குச்சந்தையின் நிலை கனிப்பது சற்று கடினமான விசயம் என்று நிறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/what-causes-stock-prices-to-change.html"

Wednesday, 25 November 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 25.11.2009

இலங்கை பங்கு சந்தை புதன்கிழமை இன்று 0.59 சதவீதம் சரிவை கண்டுள்ளது.


பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.59 சதவீதம் (16.85 புள்ளி) உயர்ந்து 2,858.54 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.48 சதவீதம் (15.63 புள்ளி) சரிந்து 3,257.48 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 293.6 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 25.11.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 25.11.2009

புதன்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 16.1 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 179.1 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 163.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/25112009.html"

Tuesday, 24 November 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 24.11.2009

இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 1.90 சதவீதம் சரிவை கண்டுள்ளது.


பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.90 சதவீதம் (55.68 புள்ளி) உயர்ந்து 2,875.39 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 2.15 சதவீதம் (71.89 புள்ளி) சரிந்து 3,273.11 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 253.4 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 24.11.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 24.11.2009செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 100.2.9 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 107.8 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 7.6 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/24112009.html"

Monday, 23 November 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 23.11.2009

இலங்கை பங்கு சந்தை திங்கட்கிழமை இன்று 0.08சதவீதம் சரிவை கண்டுள்ளது.


பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.08 சதவீதம் (02.27 புள்ளி) சரிந்து 2,931.07 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.34 சதவீதம் (11.44 புள்ளி) உயர்ந்து 3,345.00 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 254.1 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 23.11.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 23.11.2009


திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 43.0 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 85.6 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 128.6 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/23112009.html"

Sunday, 22 November 2009

* இலங்கை பங்குச்சந்தையில் ராஜ் ராஜரட்னத்தின் முதலீடுகள் விற்பனை????????????????

அமெரிக்காவில் உட்சந்தை மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ராஜ் ராஜரட்ணம், தமது பிணைத்தொகையை திரட்டுவதற்காக தமது பங்குகளின் ஒருபகுதியை இலங்கையில் விற்பனை செய்யவுள்ளார்.

Source Sunday Times


இந்த நிலையில் கொழும்பு பங்குச்சந்தையில் அவரது 105 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பங்குகளை விற்பனை செய்யவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் 100 மில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு, இலங்கையின் நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் இலங்கை பங்கு விற்பனையில் சிக்கல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜ் ராஜரட்ணம் கைது செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு நெருக்கடி நிலைமைகளை சந்திக்க நேர்ந்திருந்தது.


submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog-post_22.html"

Friday, 20 November 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 20.11.2009


இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமை இன்று 0.93 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.93 சதவீதம் (27.23 புள்ளி)சரிந்து 2,933.34 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.83 சதவீதம் (27.88 புள்ளி) சரிந்து 3,333.56 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 580.9 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 20.11.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 20.11.2009

வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 214.7 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 148.6 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 363.3 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் :- 16-11-2009 முதல் 20.11.2009 வரை

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :-16-11-2009 முதல் 20.11.2009 வரை

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/20112009.html"

Thursday, 19 November 2009

* 'பங்குச்சந்தை ஆலோசனை'

'பங்குச்சந்தை ஆலோசனை' என்று என் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பங்கு சந்தை விழுந்திருக்கும் இச்சமயத்தில் பெரிய யோசனை சொல்ல போகிறார் என்று ஆர்வமாக மின்னஞ்சலை படித்தேன்.

அதில்....

ஒரு வருடம் முன்பு $1000 Delta Airlines பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $33.

ஒரு வருடம் முன்பு $1000 AIG பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $46.

ஒரு வருடம் முன்பு $1000 Lehmann Brothers பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $0.

ஆனால்,

ஒரு வருடம் முன்பு $1000 டின் பீர் ( Tin Beer) வாங்கி இருந்தால் , அதை குடித்ததோடு இல்லாமல், ரீசைக்கில் செய்ய பழைய கடையில் போட்டிருந்தால் $214 கிடைக்கும் என்று இருந்தது.

'எது சிறந்த முதலீட்டு என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்?' என்று இருந்தது.

பழைய பேப்பர் கடைக்காரன் கொடுக்கும் பணம் கூட பங்கு சந்தையில் கிடைப்பதில்லை என்று நகைச்சுவையாக அந்த மின்னஞ்சில் கூறியிருந்தார்கள். அந்த நண்பருக்கு நன்றி.

இப்போது இலங்கை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது சரியான நேரம் என்று ஒரு சிலர் கூறிகிறார்கள். என்னை பொருத்த வரையில் இப்போது வேடிக்கை பார்ப்பது தான் நல்லது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog-post_19.html"

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 19.11.2009


இலங்கை பங்கு சந்தை வியாழக்கிழமை இன்று 0.34 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.34 சதவீதம் (10.13 புள்ளி)சரிந்து 2,960.77 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.44 சதவீதம் (15.00 புள்ளி) சரிந்து 3,361.44 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 711.1 மில்லியன் ரூபாய்.

வியாழக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 224.2 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 168.0 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 392.2 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/19112009.html"

Wednesday, 18 November 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 18.11.2009

இலங்கை பங்கு சந்தை புதன்கிழமை இன்று 0.41 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.41 சதவீதம் (12.35 புள்ளி)சரிந்து 2,970.90 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.12 சதவீதம் (4.04 புள்ளி) சரிந்து 3,376.44 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 844.4 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 18.11.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 18.11.2009

புதன்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 7.9 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 283.2 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 275.3 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/18112009.html"

Tuesday, 17 November 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 17.11.2009


இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 0.14 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.


பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.14 சதவீதம் (4.04 புள்ளி) உயர்ந்து 2,983.25 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.40 சதவீதம் (13.60 புள்ளி) சரிந்து 3,380.48 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 958.0 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 17.11.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 17.11.2009

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 381.9 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 335.1 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 717.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/17112009.html"

Monday, 16 November 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 16.11.2009

இலங்கை பங்கு சந்தை திங்கட்கிழமை இன்று 0.01 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.01 சதவீதம் (0.20 புள்ளி)சரிந்து 2,979.21 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.05 சதவீதம் (1.84 புள்ளி) சரிந்து 3,394.08 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 589.0 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 16.11.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 16.11.2009

திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 8.2 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 306.9 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 315.1 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/16112009.html"

Sunday, 15 November 2009

* Blogல் வரவு-செலவு கணக்குகள்

இலங்கையை பொறுத்தவரை வருமானத்தைப் பற்றிய விபரங்களை கேட்பது தப்பு. இலங்கையர்கள் மட்டுமல்ல பெரும்பாலனவர்கள் தங்கள் வருமானத்தைப் பற்றி பேசுவதில்லை. பல காரணங்கள்… திருஷ்டி பற்றிய பயத்திலிருந்து தாழ்வு மனப்பான்மை வரை.

சிலர் தங்களது வரவு செலவு கணக்குகளை உலகம் முழுதும் தெரியும்படி வலைத்தளங்களில் போடுகிறார்கள். இது ஒரு விதமான Public Relations Stunt. இது போல புதிதாக ஏதாவது செய்வதால் இலவசமாக விளம்பரம் கிடைக்கிறது. நிறைய விசிட்டர்கள் வருவதால் இந்த தளங்களின் விளம்பர வருமானங்களும் கூடுகின்றது.

இப்படிப்பட்ட வலைத்தளங்களில் சில:

http://www.mymoneyblog.com/

http://www.2millionblog.com/

இந்த வலைத்தளங்களை நடத்துபவர்களின் வரவு செலவு கணக்குகளை உங்களின் கணக்குகளோடு ஒப்பிட்டு பாருங்கள். Just for fun, also for some insights. பிறரின் தவறுகளிலிருந்து நாம் சில பாடங்களை கற்றுக் கொள்ளலாம். அந்த மாதிரி பாடங்கள் வலி அதிகம் இல்லாதவை! இவர்களின் சாமர்த்தியமான முடிவுகளிலிருந்து நல்ல விஷயங்களையும் கற்றுக் கொள்ளலாம். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog.html"

Saturday, 14 November 2009

* கேளுங்கள்… கட்டாயம் கொடுக்கப்படும்

நீங்கள் எப்போதாவது பேரம் பேசி பொருள்களின் விலையை குறைத்திருக்கிறீர்களா? அது ஒரு தனி திறமை, சிலருக்கு அது கை வந்த கலை. முன்பெல்லாம் அடிக்கடி பேரம் பேசுவோம். இப்போது நிலைமை மாறிவிட்டது.

எல்லா நாடுகளிலும் சூப்பர் மார்க்கெட்டுகள் பல வந்து விட்டதால், அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விடுவதால் முன்பை போல பேரம் பேசுவதற்கு அவ்வளவு வழியில்லை. இருந்தாலும், பேரம் பேசி விலைகளை குறைப்பதற்கு சில வழிகள் உள்ளன.


விடுமுறைக்காக ஹோட்டல்களில் தங்கும் போது 10%லிருந்து 25% வரை தள்ளுபடி செய்வதற்கு பெரும்பாலான ஹோட்டல்களின் கிளர்க்குகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் மேனேஜரை பார்த்து பேச வேண்டும் என்ற அவசியமில்லை. விளம்பரம் செய்யப்பட்ட கட்டணத்திலிருந்து குறைந்தது 10% தள்ளுபடி வேண்டும் என்று கேட்டுப்பாருங்கள், கொடுக்கப்படும்.சூப்பர் மார்க்கெட்டுகளில் ஷாப்பிங் செய்யும்போது “என்னிடம் HSBC கார்டு இருக்கிறது, அதற்கு 10% தள்ளுபடி கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன்” என்று எடுத்து விடுங்கள். HSBC போன்ற கார்டுகளை அவர்கள் எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும், அப்படியே பேச்சுவாக்கில் குறைந்தது 10% தள்ளுபடி கேளுங்கள். இப்படி பேசினால் விலையை குறைக்கலாம் என்று அனுபவஸ்தர்கள் கூறுகிறார்கள்.

உங்கள் போன் கம்பெனி பில் கட்டணத்தை குறைப்பதற்கு ஒரு வழி: அவர்களை கூப்பிட்டு வேறு கம்பெனிக்கு மாறுவது பற்றி யோசித்து கொண்டிருப்பதாக கூறுங்கள், பெரும்பாலான நேரங்களில் அலுவலர் உங்களிடம் பேசி புதிதாக சில தள்ளுபடிகள் கொடுக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. Don’t over do it! “வேறு கம்பெனிக்கு மாறுவதாக இருந்தால் பரவாயில்லை, எப்போது போன் கனெக்ஷனை துண்டிக்க வேண்டும்?” என்று கேட்டு விடுவார்கள்.

இந்த உத்தி இலங்கையில் உதவாது. Dialog ஆட்களை கூப்பிட்டு Airtelக்கு மாறப்போவதாக சொன்னால், கொஞ்சம் கூட அசர மாட்டார்கள்!

எந்த ஹோட்டலுக்கு போனாலும், சூப்பர் மார்க்கெட்டுக்கு போனாலும் “இப்போது நிச்சயமாக ஏதாவது promotional offer உங்களிடம் இருக்குமே?" என்று விசாரியுங்கள். பெரும்பாலான நேரங்களில் நிச்சயமாக விலை தள்ளுபடி கிடைக்கும் என்று டோபிள் என்ற நிபுணர் கூறுகிறார். இவர் “Savvy Discounts” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் முழுதும் பேரம் பேசும் உத்திகள் பற்றி தான்! http://www.savvy-discounts.com/ submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog-post.html"

Friday, 13 November 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 13.11.2009


இலங்கை பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை இன்று 1.77 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.77 சதவீதம் (51.85 புள்ளி) உயர்ந்து 2,979.41 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 2.47 சதவீதம் (82.00 புள்ளி) உயர்ந்து 3,395.92 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 576.4 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 13.11.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 13.11.2009

வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 54.5 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 123.5 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 69.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/13112009.html"

Thursday, 12 November 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 12.11.2009


இலங்கை பங்குச்சந்தை இன்று 2.57 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 2.57 சதவீதம் (73.32 புள்ளி) உயர்ந்து 2,927.56 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 3.95 சதவீதம் (95.04 புள்ளி) உயர்ந்து 3,313.92 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 283.6 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 12.11.2009

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 12.11.2009

வியாழக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 5.8 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 28.5 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 34.4 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/12112009.html"