Friday 30 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 30.10.2009

இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமை இன்று 0.01 சதவீதம் சரிவை கண்டுள்ளது

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.01 சதவீதம் (0.23 புள்ளி)சரிந்து 2,976.93 புள்ளியிலும் , மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.34 சதவீதம் (11.30 புள்ளி)சரிந்து 3,333.84 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 325.6 பில்லியன் ரூபாய்.

வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 28.2 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 59.7 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 31.5 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/30102009.html"

Thursday 29 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 29.10.2009

இலங்கை பங்கு சந்தை வியாழக்கிழமை இன்று 0.95 சதவீதம் சரிவை கண்டுள்ளது

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.95 சதவீதம் (28.56 புள்ளி)சரிந்து 2,997.16 புள்ளியிலும் , மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.82 சதவீதம் (27.54 புள்ளி)சரிந்து 3,345.14 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 353.3 பில்லியன் ரூபாய்.

வியாழக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 49.3 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 29.6 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 78.9 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/29102009.html"

Wednesday 28 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 28.10.2009

இலங்கை பங்கு சந்தை புதன்கிழமை இன்று 0.29 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.29 சதவீதம் (8.65 புள்ளி)உயர்ந்து 3,005.72 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.15 சதவீதம் (4.93 புள்ளி)சரிந்து 3,372.68 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 318.2 மில்லியன் ரூபாய்.

புதன்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 5.6 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 36.0 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 30.4 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/28102009.html"

* பங்கு வர்த்தகம் சூதாட்டமா? என் பார்வையில்











submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/blog-post_28.html"

Tuesday 27 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 27.10.2009

இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 0.89 சதவீதம் சரிவை கண்டுள்ளது.


பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.89 சதவீதம் (26.95 புள்ளி)சரிந்து 2,997.07 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.64 சதவீதம் (21.75 புள்ளி)சரிந்து 3,377.61 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 318.0 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 27.10.2009


மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 27.10.2009


செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 7.1 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 26.5 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 33.6 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/27102009.html"

Monday 26 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 26.10.2009

இலங்கை பங்கு சந்தை திங்கட்கிழமை இன்று 1.07 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.07 சதவீதம் (32.60 புள்ளி)சரிந்து 3,024.02 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.01 சதவீதம் (34.64 புள்ளி)சரிந்து 3,399.36 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 330.0 மில்லியன் ரூபாய்.

திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 28.3 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 56.0 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 27.7 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/16102009_26.html"

Friday 23 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 23.10.2009

இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமையும் 2.13 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 2.13 சதவீதம் (63.75 புள்ளி) உயர்ந்து 3,056.6 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 2.02 சதவீதம் (68.13 புள்ளி) உயர்ந்து 3,434.00 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 398.3 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 23.10.2009



மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 21.10.2009


வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 28.2 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 23.0 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 51.2 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/23102009.html"

Wednesday 21 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 21.10.2009

இலங்கை பங்குச்சந்தை இன்று புதன்கிழமை 1.19 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.19 சதவீதம் (35.43 புள்ளி) உயர்ந்து 3,018.60 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.92 சதவீதம் (63.91 புள்ளி) உயர்ந்து 3,391.26 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 951.3 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 21.10.2009



மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 21.10.2009



சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/21102009.html"

Tuesday 20 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 20.10.2009

இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 3.24 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 3.24 சதவீதம் (99.74 புள்ளி)சரிந்து 2,983.17 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 4.34 சதவீதம் (150.98 புள்ளி)சரிந்து 3,478.33 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 763.6 மில்லியன் ரூபாய்.

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 56.1 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 138.9 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 195.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/20102009.html"

Monday 19 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 19.10.2009

உலகில் அதிகம் அறியப்பட்ட கெலோன் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்தர்கள் வரிசையில் 559ம் இடத்தை தக்கவைத்து கொள்பவருமான ராஜ் ராஜரட்ணத்தின் கைதினை அடுத்து இலங்கை பங்கு சந்தை திங்கட்கிழமை இன்று 1.56 சதவீதம் சரிவை கண்டுள்ளது.சந்தை நடவடிக்கை - 19.10-2009

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.56 சதவீதம் (49.00 புள்ளி)சரிந்து 3,082.91 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.93 சதவீதம் (68.60 புள்ளி)சரிந்து 3,478.33 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 885.2 மில்லியன் ரூபாய்.

திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 2.8 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 99.9 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 97.1 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/19102009.html"

* சந்தை நடவடிக்கை - 19.10-2009

சந்தை நடவடிக்கை - 02.30 பி..

பங்குகளின் எண்ணிக்கை| 47,863,300
மொத்த புரள்வு | 885,271,382.25
ASI | 3,082.91 | -49.00 | -1.56%
MPI | 3,478.33 | -68.60 | -1.93%

சந்தை நடவடிக்கை - 02.00 பி..

பங்குகளின் எண்ணிக்கை | 45,608,509
மொத்த புரள்வு | 844,614,419.50
ASI | 3,089.28 | -42.63 | -1.36%
MPI | 3,479.27 | -67.66 | -1.91%

சந்தை நடவடிக்கை - 01.30 பி..

பங்குகளின் எண்ணிக்கை | 43,022,885
மொத்த புரள்வு | 805,172,087.50
ASI | 3,095.32 | -36.59 | -1.17%
MPI | 3,497.91 | -49.02 | -1.38%

சந்தை நடவடிக்கை - 01.00 பி..

பங்குகளின் எண்ணிக்கை | 40,604,004
மொத்த புரள்வு| 726,805,966.50
ASI | 3,096.06 | -35.85 | -1.14%
MPI | 3,498.06 | -48.87 | -1.38%

சந்தை நடவடிக்கை
- 12.30 பி..

பங்குகளின் எண்ணிக்கை | 37,883,967
மொத்த புரள்வு | 677,744,513.75
ASI | 3,088.85 | -43.06 | -1.37%
MPI | 3,493.87 | -53.06 | -1.50%

சந்தை நடவடிக்கை - 12.00 பி..

பங்குகளின் எண்ணிக்கை | 33,280,351
மொத்த புரள்வு | 613,942,729.75
ASI | 3,068.72 | -63.19 | -2.02%
MPI | 3,466.63 | -80.30 | -2.26%

சந்தை நடவடிக்கை - 11.30 மு..

பங்குகளின் எண்ணிக்கை | 28,542,522
மொத்த புரள்வு | 523,837,886.25
ASI | 3,030.19 | -101.72 | -3.25%
MPI | 3,415.67 | -131.26 | -3.70%

சந்தை நடவடிக்கை - 1.00 மு..

பங்குகளின் எண்ணிக்கை | 21,486,876
மொத்த புரள்வு | 416,023,171.25
ASI | 3,014.82 | -117.09 | -3.74%
MPI | 3,400.76 | -146.17 | -4.12%

சந்தை நடவடிக்கை - 10.30 மு..

பங்குகளின் எண்ணிக்கை | 13,099,170
மொத்த புரள்வு | 265,447,806.50
ASI | 3,060.74 | -71.17 | -2.27%
MPI | 3,445.74 | -101.19 | -2.85%

சந்தை நடவடிக்கை - 10.00 மு..

பங்குகளின் எண்ணிக்கை | 8,092,446
மொத்த புரள்வு | 147,757,614.00
ASI | 3,071.57 | -60.34 | -1.93%
MPI | 3,466.38 | -80.55 | -2.27%
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/1910-2009.html"

Sunday 18 October 2009

* இலங்கை தரகர்கள் ராஜ் அவர்களின் கைதினை அடுத்து அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர்

வர்த்தக மோசடியில் ஈடுபட்டதன் குற்றச்சாட்டில் ராஜ் ராஜரட்ணம் என்பவர் அமெரிக்காவின் எவ்.பி.ஜ. புலனாய்வுதுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரபலமான வர்த்தகரென இவர் அடையாளப்படுத்தப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட அமெரிக்க உளவுப்பிரிவினர் (F.B.I) அவரின் வருவாய்க்கான காரணிகளை கண்டறிந்தனர்.

உலகில் அதிகம் அறியப்பட்ட கெலோன் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்தர்கள் வரிசையில் 559ம் இடத்தை தக்கவைத்து கொள்பவருமான ராஜ் ராஜரட்ணம் அவரவது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்குசந்தை மற்றும் நிதிசந்தை கொடுக்கல் வாங்கல்களின்போது மோசடியான முறையில் இலாப மீட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. இவர் 2006-2007ம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற இவ்வாறான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் ஏராளமான பணம் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் DFCC,NDB,Dialog,SLT and Hayleys முதலிடப்பட்டு இருக்கிறது. இலங்கை பங்கு சந்தையில் அதிகம் முதலிட்ட தனி நபர் இவர் தான் எண்டு சில தகவல்களும் உண்டு.

John Keells Holding (JKH) - 9.2%

People Merchant Bank (PMB) - 13%

Commercial Bank (COMB) - 3.2%

நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறையவே ஆதிக்கம் உள்ள இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் முன்னணி வியாபார இதழின்(LMD) முன் அட்டையை அலங்கரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கவர்.




தன்னுடைய முதலீடுகளுக்கு என்றே தனி பங்கு தரகர் நிறுவனம் தொடங்கும் அளவுக்கு ஆதிக்கம் நிறைந்தவர் கைது செய்யப்பட்டு இருப்பது இலங்கை பங்குச்சந்தையை ஒரு உலுக்கு உலுக்கும் என்றே கருதப்படுகிறது.

submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/blog-post_18.html"

Saturday 17 October 2009

* அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அனைத்து நண்பர்களுக்கும் பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா சார்பாக இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!




ஏற்றுக தீபம் எழிலொளி சூழ்கவே
இன்பம் பெருக எல்லோரும் வாழ்கவே
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/blog-post_17.html"

Friday 16 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 16.10.2009

இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமை இன்று 0.10 சதவீதம் சரிவை கண்டுள்ளது

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.10 சதவீதம் (3.22 புள்ளி)சரிந்து 3,131.91 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.26 சதவீதம் (9.08 புள்ளி)சரிந்து 3,546.93 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 836.7 மில்லியன் ரூபாய்.

வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 10.7 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 184.3 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 195.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/16102009.html"

Thursday 15 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 15.10.2009

இலங்கை பங்கு சந்தை வியாழக்கிழமை இன்று 0.13 சதவீதம் சரிவை கண்டுள்ளது

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.13 சதவீதம் (4.08 புள்ளி)சரிந்து 3,135.13 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.05 சதவீதம் (1.61 புள்ளி)சரிந்து 3,556.01 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.16 பில்லியன் ரூபாய்.

வியாழக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 94.9 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 474.2 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 379.3 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/15102009.html"

Wednesday 14 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 14.10.2009

இலங்கை பங்குச்சந்தை இன்று 0.02 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.02 சதவீதம் (0.52 புள்ளி) சரிந்து 3,139.21 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.36 சதவீதம் (12.89 புள்ளி)அளவுக்கு உயர்ந்து 3,557.62 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.2 பில்லியன் ரூபாய்.

புதன்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 67.8 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 276.9 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 209.1 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/14102009.html"

Tuesday 13 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 13.10.2009

இலங்கை பங்குச்சந்தை இன்று 0.27 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.27 சதவீதம் (8.44 புள்ளி) உயர்ந்து 3,139.73 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.50 சதவீதம் (17.57 புள்ளி) உயர்ந்து 3,544.73 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.26 பில்லியன் ரூபாய்.

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 151.5 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 246.7 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 95.2 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/13102009.html"

Monday 12 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 12.10.2009

இலங்கை பங்கு சந்தை திங்கட்கிழமையும் 0.5 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.5 சதவீதம் (15.95 புள்ளி) உயர்ந்து 3,131.29 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.65 சதவீதம் (22.92 புள்ளி) உயர்ந்து 3,527.16 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.9 பில்லியன் ரூபாய்.

திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 1445.2.2 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 1695.9 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 250.7 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/12102009.html"

Saturday 10 October 2009

* இலங்கை பங்குச்சந்தையில் காளையும் கரடியும் சந்தித்தால்?

வருகின்ற வாரம், காளைக்கும் கரடிக்கும் ஏற்படவுள்ள மோதல் ஆக்ரோஷமானதாகவும் பரபரப்பானதாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இப்போதைக்கு காளையின் கை சற்று ஓங்கியிருப்பது போல் தோன்றினாலும், கரடி தனது முழு பலத்தையும் அடுத்த வாரம் காட்டும் என்றே கருதப் படுகிறது.

சட்டென்று குறைந்த பணவீக்கமும், மேலும் வட்டி வீத குறைப்புகள் இருக்கும் என்ற புதிய நம்பிக்கையை உருவாக்கியதும் சென்ற வார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

உலக சந்தைகள் பலவும் (முக்கியமாக அமெரிக்கா சந்தைகள்) சரிந்த நிலையிலும் நமது பங்குச்சந்தை மேலே சென்றதும்,சந்தையின் சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருவாரியாக முன்னேற்றமடைந்தது சந்தையின் வலுவான மனநிலையையே காட்டுகின்றது.

முந்தைய வாரங்களில் கடுமையாக வீழ்ச்சியுற்ற வங்கித் துறை, உற்பத்தித் துறை, வாகனத் துறை பங்குகள் தீவிர "விற்ற பின் வாங்குதல்" (Short Covering) காரணமாக மேல் சென்றதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்றாலும், வெளிநாட்டு நிறுவனங்கள் பெருவாரியாக பங்குகளை வாங்கியது குறிப்பிடத் தக்கது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

Bonus படங்கள்:-




submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/blog-post_10.html"

Friday 9 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 09.10.2009

இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமை இன்று 0.17 சதவீதம் சரிவை கண்டுள்ளது

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.17 சதவீதம் (5.39 புள்ளி)சரிந்து 3,115.34 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.67 சதவீதம் (23.46 புள்ளி)சரிந்து 3,504.24 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 491.3 மில்லியன் ரூபாய்.

வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 1.4 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 45.3 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 46.7 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/09102009.html"

Thursday 8 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 08.10.2009

இலங்கை பங்குச்சந்தை இன்று 0.13 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.13 சதவீதம் (4.17 புள்ளி) உயர்ந்து 3,120.73புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.04 சதவீதம் (1.32 புள்ளி)அளவுக்குச் சரிந்து 3,527.70 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.63 பில்லியன் ரூபாய்.

வியாழக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 40.3 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 703.4 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 663.1 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/08102009.html"

Wednesday 7 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 07.10.2009

இலங்கை பங்குச்சந்தை இன்று 0.35 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.35 சதவீதம் (11.00 புள்ளி) சரிந்து 3,116.56 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.52 சதவீதம் (18.36 புள்ளி)அளவுக்குச் சரிந்து 3,529.02 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.17 பில்லியன் ரூபாய்.

புதன்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 448.9 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 534.6 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 85.7 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/07102009.html"

Tuesday 6 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 06.10.2009

இலங்கை பங்குச்சந்தை இன்று 0.95 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.95 சதவீதம் (29.32 புள்ளி) உயர்ந்து 3,127.56 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.10 சதவீதம் (38.61 புள்ளி) உயர்ந்து 3,547.38 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.18 பில்லியன் ரூபாய்.

இன்று பங்கு வர்த்தகத்தின் முடிவில் Market capitalization 1,003.1 பில்லியன் ரூபாய், இலங்கை பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக 1,000 பில்லியன் இலக்கைத் தாண்டியுள்ள சந்தர்ப்பமாகும்.

இன்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அவர்கள் பங்கு பரிவர்த்தனை நிலையத்துக்கு திடீர் விஐயம் மேற்கொண்டார்.

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 82.5 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 146.5 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 64.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/06102009.html"

Monday 5 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 05.10.2009

இலங்கை பங்கு சந்தை திங்கட்கிழமையும் உயர்வைக் கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 2.66 சதவீதம் (80.23 புள்ளி) உயர்ந்து 3,098.24 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 3.36 சதவீதம் (113.91 புள்ளி) உயர்ந்து 3,508.77 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.06 பில்லியன் ரூபாய்.

திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 92.2 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 138.2 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 230.4 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/05102009.html"

* நல்ல நிறுவனப்பங்குகளின் குணங்கள்-01

பங்குகளை வாங்க வேண்டும்............ ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளையே வாங்க வேண்டும் என்ற கருத்தை என் முந்தையப் பலப் பதிவுகளில் முன்வைத்துள்ளேன். ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது ?

நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன்பு, அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்த்திருக்கிறீர்களா ? பங்குகளில் முதலீடு செய்யும் எத்தனைப் பேர் ஆண்டறிக்கையைப் பார்த்து, ஆய்வு செய்து பங்குகளை வாங்கியிருக்கிறீர்கள் ? நமக்குக் கிடைக்கும் ஏதோ ஒரு டிப்ஸ், ஏதோ ஒரு தினசரியில் "Buy" என்று முத்திரைக் குத்தப்பட்டப் பங்குகள். இவைகளைக் கண்டு தானே சிறிதளவுக் கூட யோசிக்காமல், பங்குகளை வாங்குகிறோம். ஏன் இத்தகைய மனநிலை ?


"நம்மால் ஆய்வு செய்ய முடியாது. இது ஒரு சிக்கலான கணக்கு வழக்கு" என்ற எண்ணமே நம்மை ஆட்டிப் படைக்கிறது. வணிக நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் Technical Analysis, Resistance Level, Support Level,Relative Strength Index என்று பலப் புரியாத வார்த்தைகளைச் சொல்லி நம்மை மிரட்டி வைத்துள்ளன. அனலிஸ்டுகள் நன்றாக ஆய்வு செய்து தான் சொல்வார்கள் என்ற எண்ணத்தில், கடவுளின் மேல் பாரத்தை போட்டு விட்டு நாமும் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்வோம்.

அதுவும் நமக்கு இது வரை தெரியாதப் பங்குகளை சொன்னால் தான் நாம் வாங்குவோம். "SAVS" நல்ல லாபமடையும் என்று அனலிஸ்டுகள் ஆருடம் சொல்வார்கள். அது என்ன நிறுவனம். என்ன உற்பத்திச் செய்கிறது.அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், டிப்சை அப்படியே பின்பற்றி வாங்குவோம். அந்த நிறுவனம் நல்ல நிறுவனமாகவே இருக்கலாம். ஆனால் ஆய்வு செய்யாமல் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்யலாமா ?

சிக்கலான கணக்குகளைப் போடாமல் எளிதாக ஆராய முடியும். நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஆய்வு தான் என்று என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்தேன். அது ஆராய்ச்சியின் ஆரம்ப நிலை தான். நம்முடைய ஆராய்ச்சியின் அடுத்த நிலை அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்ப்பது தான்.



நேரம் கிடைக்கும் போது நல்ல நிறுவனப்பங்குகளின் குணங்கள்-02 தொடரும் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/1.html"

Saturday 3 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 02.10.2009

இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமை அன்று உயர்வைக் கண்டுள்ளது. இங்கு முதலீடு செய்பவர்கள் குறுங்காலத்தில் காளைச் சந்தையில் இலாபம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், வருங்கால காலாண்டுக்கான முடிவுகள் நீண்டகாலத்தை நோக்கி நகரும்.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.68 சதவீதம் (20.41 புள்ளி) உயர்ந்து 3,018.01 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.25 சதவீதம் (42.00 புள்ளி) உயர்ந்து 3,394.86 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.07 பில்லியன் ரூபாய்.

வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 33.0 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 199.0 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 232.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி 100.8 சதவீதம் எனவும், மிலங்கா விலைச்சுட்டி 108.1 சதவீதம் எனவும் அதிகரிப்பை காட்டியுள்ளது.

Bloomberg Newswire கருத்தின் படி கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் நடவடிக்கையானது ஆசியாவின் மிகச் சிறந்த சந்தையாகவும், உலக தரப்படுத்தலில் நான்காம் இடத்திலும் உள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். உங்கள் பின்னுட்டல்கள் எதிர்பாக்கப்படுகிறது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/02102009.html"

Thursday 1 October 2009

* பங்குச் சந்தையில்-BBP-காளை(B) - கரடி(B) - பன்றி(P)

பங்குச் சந்தையில் நான் கற்றுக் கொண்ட முதல் வார்த்தை Bull Market - காளைச் சந்தை. இதைக் கற்றுக்கொண்ட வார்த்தை என்பதை விட விநோதமாக தெரிந்த ஒரு உருவத்தை என்ன என்று தோண்ட ஆரம்பித்த பொழுது புரிந்து கொண்ட அர்த்தம் எனக்கொள்ளலாம்.

அப்பொழுது தெரிந்துகொண்ட விபரங்கள்தான் பங்குச் சந்தை மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

காளைச் சந்தை என்பது பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக உள்ள சூழ்நிலையைக் குறிப்பது. பங்குக் குறியீடுகள் உயர்வதும், பங்கு விலைகள் உயர்ந்து கொண்டே இருப்பதும் காளைச் சந்தையில் தான்.பங்குக் குறியீடுகள் வீழ்ச்சி அடைவதையும், பங்கு விலைகள் சரிவடைவதையும் கரடிச் சந்தை என்று சொல்வார்கள். கரடிச் சந்தையை விட்டு முழுதாக விலகாமல் நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கிப் போடுவது நல்லது.

காளை, கரடி என இருவேறு சந்தைகள் இருக்கின்றன என்று எண்ண வேண்டாம். ஒரே சந்தைதான். அன்றைய நிலவரத்தை வைத்து, காளை என்றும் கரடி என்றும் வர்ணிப்பார்கள்.

அப்படியானால், பன்றி என்பது?

“Bulls make money, bears make money, but pigs just get slaughtered!”

பங்குச் சந்தையைப் பற்றி தெரிந்தவர்கள், காளைச் சந்தையிலும் பணம் பார்க்கலாம், கரடிச் சந்தையிலும் பணம் பார்க்கலாம். ஆனால் பங்குச் சந்தைப் பற்றித் தெரியாமல் மனம் போன போக்கில் அடுத்தவர் பேச்சைக் கேட்டு முதலீடு செய்துவிட்டுப் பிறகு லபோ திபோ என அடித்துக்கொள்பவர்கள் பன்றிகளைப் போன்றவர்கள். அவர்கள் பங்குச் சந்தையில் மோசமாக செத்துப் போவார்களாம்.



என் கனவில் அடிக்கடி பன்றிகள் தோன்றுவது ஏன் என்று புரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்?
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/blog-post.html"