Saturday 30 January 2010

* சாதிக்கும் தாகத்தோடு இருங்கள், அறிவுப் பசியோடு இருங்கள் !


ஆப்பிள் கொம்பியூற்றரை கண்டு பிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ்(Steve Jobs) !

ஆப்பிள் கொம்பியூற்றரைக் உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ்சின் வாழ்க்கை ஒவ்வொரு மனிதரும் அறிந்திருக்க வேண்டிய கதையாகும். நம்பியவர்கள் ஏமாற்றுவதும், நயவஞ்சகர்கள் கூடிச் சதி செய்வதுமான உலகில் எதற்கும் கலங்காது தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இந்தத் தொழில் மேதையின் வாழ்வு, ஒவ்வொரு மனிதருக்கும் மிக அவசியமானதாகும்.

பரம ஏழையாகப் பிறந்த இவரை வளர்க்க முடியாத நிலையில் தாய் இன்னொருவருக்கு தத்துக் கொடுத்தார். அப்படிக் கொடுக்கும்போது அந்தத் தாய் பணத்தைக் கேட்கவில்லை, தன்னுடைய மகனை பல்கலைக்கழகத்தில் படிக்கவைத்து பட்டமும் பெற யார் உதவுவார்களோ அவர்களுக்கே தனது பிள்ளையை தத்தாக தருவேன் என்று தெரிவித்தார்.

அதற்கு உடன்பட்டு அவரை தத்தெடுத்த வளர்ப்புப் பெற்றோரும் பல்கலைக்கழகம் வரை அவரை படிப்பிக்க வைத்தார்கள். அதற்கு அப்பால் அவர்களால் முடியாமல் போனது. அதை அறிந்த ஸ்டீவ் ஜாப்ஸ் தானாக படிப்பை நிறுத்தினார். பட்டினியை தீர்க்க தினமும் ஏழு மைல் தூரம் நடந்து சென்று அங்குள்ள ஹரே கிருஷ்ணா மடத்தில் ஒரு வேளை உணவு சாப்பிட்டு தனது பசியைப் போக்கினார். நண்பர்களின் அறையில் தங்கி வெற்றுப் போத்தல்களை பொறுக்கி விற்று, படிப்பைத் தொடர்ந்தார். நீ வாழும் ஒவ்வொரு நாளையும் இன்றுதான் உனது வாழ்வின் கடைசிநாள் என்று நினைத்து வாழ் என்று எண்ணி வாழ்ந்தார். இதுதான் அவர் வாழ்வின் ஆதாரசுருதியாகும்.

பாதி நாட்கள் பட்டினி கிடந்தாலும் கூட, அவர் மனதில் எரிந்த அக்கினி ஓய்ந்துவிடவில்லை. கலிகிராபி என்ற கணினி எழுத்து வடிமைப்பை கண்டு பிடிக்க அல்லும் பகலும் போராடிக் கொண்டிருந்தார். பத்து வருடங்களாக போராடி மக்கின்ரொஸ் கம்ப்யூட்டரை வடிவமைத்தார். இவருடைய முறையை பின்பற்றி உருவாக்கப்பட்டதுதான் பின்னாளில் வந்த மக்கிரோ சொப்ரின் விண்டோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டு பிடிப்பு கைக்கு எட்டியதும் தனது 20 வது வயதில் நண்பரான லாஸ் என்பவருடன் இணைந்து சிறிய பட்டறையாக ஆரம்பித்த ஆப்பிள் கணினித் தொழிற்சாலை 10 வருடங்களில் நாலாயிரம் தொழிலாளரைக் கொண்ட இரண்டு மில்லியான் டாலர் பெறுமதியான பாரிய தொழிற்சாலையாக உருப்பெற்றது.

நிறுவனம் வளர வளர அவருக்கும் அவரது நண்பருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. கடைசியில் நிர்வாகத்தில் இருந்த சுயநலவாதிகளை எல்லாம் வளைத்துப் போட்ட நண்பர், ஆப்பிள் கணினியை கண்டு பிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ்சை ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே தூக்கி வீசினார். பாம்புக்கு பால் வார்த்ததற்கான பரிசு ஸ்டீவ் ஜாப்ஸ்சிற்குக் கிடைத்தது.

தனது 20 வது வயதில் ஆரம்பித்த நிறுவனம் 30 வது வயதில் பறிபோக மறுபடியும் ஆரம்ப நிலைக்கே வந்து சேர்ந்தார். மற்றவர்களாக இருந்தால் அடியோடு உடைந்தே போயிருப்பார்கள். இரவு பகலாக பாடுபட்டு உருவாக்கிய நிறுவனத்தை கைப்பற்றிய நயவஞ்சக நண்பர்களையும், அவர்களுடைய இழி செயலையும் அவர் நினைத்து கவலைப்படவில்லை.


புதிய வேகத்துடன் யாருமே உருவாக்காத நெக்ஸ்ற் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கினார். இது சாதாரண நிறுவனமல்ல, இன்று நாம் பார்க்கும் அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்க இதுவே அடிப்படையாக அமைந்தது. புதிய கண்டு பிடிப்பால் ஆப்பிள் நிறுவனத்தை விட உயர்ந்த நிலைக்கு சென்ற அவருடைய நெக்ஸ்ற் நிறுவனத்தை கடைசியில் ஆப்பிள் நிறுவனமே வாங்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ் தான் ஆரம்பித்த நிறுவனத்திற்கு மறுபடியும் வெற்றியாளராக திரும்பினார். அடுத்தடுத்து ஆப்பிள் கணினிகளின் உற்பத்தியில் அபார சாதனைகளை படைத்தார்.

பின்நாளில் தான் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றியும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அது கசப்பான நிகழ்வாக இருந்தாலும் அனிமேஷனை உருவாக்கும் இடத்திற்கு தான் வளர அதுவே உதவியது என்று கூறி அமைதி கண்டார்.

இதற்குப் பிறகு அவருக்கு கணையத்தில் புற்று நோய் வந்தது. வாழும் ஒவ்வொரு நாளும் கடைசிநாளே என்று வாழ்ந்த அவர் மனவுறுதி தளர்ந்துவிடவில்லை, புற்று நோய்க்கும் பயந்துவிடவில்லை, தொடர்ந்து, உழைத்தார்.

அவரின் மன உறுதிக்கு முன்னால் நிற்க முடியாது புற்று நோயும் மண்டியிட்டு ஓடியது. ஓர் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவரைப் பிடித்த புற்று நோயும் விலகிப் போனது. மீண்டும் யாரும் நம்ப முடியாதபடி எழுந்து நின்றார். தன்னை நெருங்கிய எல்லாச் சோதனைகளையும் எதிர்கொண்டு வாழ்வில் அரிய சாதனைகள் படைத்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது பின்வருமாறு கூறினார்.

- இனியவர்களே உங்கள் வாழ்க்கை குறுகியது, அதை நினைனவிற் கொள்ளுங்கள் வீணாக்காதீர்கள். இது உங்கள் வாழ்க்கை. எனவே நீங்கள் அடுத்தவர் வாழ்க்கையை வாழ்ந்தும், அடுத்தவர் சிந்தனையை சிந்தித்தும் வீணாக்கிவிடாதீர்கள். பிறர் கருத்துக்களின் பேராசையில் உங்கள் உள்ளத்து உணர்வுகள் கூறும் வார்த்தைகளை கவனமாகக் கேட்க மறந்துவிடாதீர்கள். உங்கள் இதயமும், உள்ளுணர்வும் கூறுகிறபடி கேட்டு வாழுங்கள். சாதிக்கும் தாகத்தோடு இருங்கள், அறிவுப் பசியோடு இருங்கள் ! – என்றார்.

ஸ்டீவ் ஜாப்ஸின் சொற்பொழிவு- Stay Hungry. Stay Foolish.



பொதுவாக அறிவுரை பலரிடமிருந்தும் கிடைக்கலாம். ஆனால் சாதித்தவர்களின் அறிவுரைகள் விலைமதிப்பற்றவையாகும். அவற்றைப் பின்பற்றினால் அடைய முடியாத சிகரங்கள் இல்லவே இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய அற்புத மனிதர்.


ஆண்டு சம்பளம் 1 டொலர் பெறும் நிறுவனத்தின் தலைவர்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_10.html"

Friday 29 January 2010

* புதிய நிறுவனத்தில் இணையும் பொழுது நினைவில் கொள்ளவேண்டிய விடயங்கள்

எனக்கு தெரிந்த வகையில் சில விஷயங்களை இங்கு நான் பட்டியலிட்டு உள்ளேன்.


  1. நிறுவனத்தின் புகழ் ( Brand Image).

  2. நிறுவனத்தின் தலைமை (Reputation of the Management).

  3. நிதி நலன் ( Financial Health).

  4. துறை மற்றும் நிறுவனத்தின் பழங்கால வளர்ச்சி மற்றும் எதிர்கால வாய்ப்புகள் (Past growth of the Industry and the Company as well as the future prospects).

  5. நிறுவனத்தின் மனித வள கொள்கைகள் (H R policies on career development)

  6. பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் நிறுவனமாக இருந்தால், பங்கு விலை ஏற்ற இறக்கங்கள். (Stock Price movement as it is a leading indicator)

  7. ஊதிய உயர்வு (இதை கடைசியாக வைத்ததன் நோக்கம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்)

இந்த தகவல்களைப் பெறுவது இந்த இன்டர்நெட் யுகத்தில் பெரிய விஷயமில்லை.

மேலும், நேரடித் தேர்வில், உங்களுக்கு அளிக்கப்படும் வாய்மொழி உத்தரவாதங்களை நம்பாதீர்கள்.அனைத்தும் எழுத்து வடிவில் (Black & White) இருப்பது நல்லது.காரணம், சில பல சமயங்களில், உங்களுக்கு உத்தரவாதம் அளித்தவரை, நீங்கள் மீண்டும் பார்க்கவே முடியாது.

மேலும், ஒப்பந்த விஷயங்களிலும் கவனமாக இருங்கள்.Package என்பது அனைத்து வகையான நிறுவன செலவுகளைக் குறிப்பது.உங்களுக்கு, கையில் என்ன வரும் என்பதில் தெளிவாக இருங்கள்.



எனவே ஒரு நிறுவனத்தைப் பற்றி, முடிந்த வரை தெரிந்த பிறகு, இணைவது நல்லது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_29.html"

Thursday 28 January 2010

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 28.01.2010


இலங்கை பங்குச்சந்தை வியாழக்கிழமை இன்று 1.25 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.25 சதவீதம் (45.03 புள்ளி) உயர்ந்து 3,636.41 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.38 சதவீதம் (56.84 புள்ளி) உயர்ந்து 4,181.79 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.92 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 28.01.2010

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 24.12.2010

வியாழக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 414.2 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 160.8 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 575.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/28012010.html"

Wednesday 27 January 2010

* இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலும் - பங்குசந்தையும்-02


இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

யுத்த வெற்றி,அரசு ஊழியர் சம்பள உயர்வு, விவசாய கடன் தள்ளுபடி போன்ற திட்டங்கள் மக்களிடம் பெற்ற வரவேற்பே மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

ஆனால் அரசு இப்போதிருக்கும் நிதி நிலையில் சலுகைகளையும் புதிய முதலீட்டு திட்டங்களையும் அறிவிக்க முடியுமா என்பது சந்தேகமான ஒன்றுதான். அப்படி ஒரு வேளை சலுகைகளை அரசு வழங்கினாலும் அது வேறு சில சட்டைப் பைகளில் இருந்து எடுக்கப் பட்டதாகவே இருக்கும். மொத்தத்தில் புதிய வரிகள் அல்லது வரி அதிகரிப்பு ஏதும் இல்லாமல் இருந்தாலே நாமெல்லாரும் அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது இப்போதைய அரசின் நிதி நிலை.

நாளை(28-01-2010) நமது பங்குச்சந்தையில் தவிர்க்க முடியாதபடி பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன.சர்வதேச முதலீட்டாளர்களின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்பது கணிப்பது கடினம்.

இப்போதைய நிலையில் பங்கு சந்தைகள் (ஏற்கனவே) நல்ல வளர்ச்சியை கண்டு விட்டன. உலக பொருளாதாரத்தின் போக்கு குறித்து இன்னும் சரிவர புரியாத நிலையில் குறுகிய கால அடிப்படையில் சந்தையின் போக்கினை கணிப்பது கடினம். அதே சமயம் நீண்ட கால அடிப்படையில் இலங்கைப் பங்குச்சந்தை நல்ல முன்னேற்றத்தைக் காணும் என்பதில் சந்தேகமில்லை.

முதலீட்டாளர்கள் எப்போதும் போல, பங்கு விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் சமயத்தில் மட்டும் பங்குகளை சேகரிப்பது நல்லது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலும் - பங்குசந்தையும்-01

முற்றும்............
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/02_27.html"

Tuesday 26 January 2010

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 26.01.2010


இலங்கை பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 1.04 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

இன்றைய பங்குச்சந்தை நடவடிக்கைகள் நண்பகல் 12.00 மணியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.04 சதவீதம் (36.93 புள்ளி) உயர்ந்து 3,519.94 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.43 சதவீதம் (58.05 புள்ளி) உயர்ந்து 4,124.95 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 883.2 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 26.01.2010

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 26.01.2010

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 126.1 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 125.1 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 251.2 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/26012010.html"

Monday 25 January 2010

* இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலும் - பங்குசந்தையும்

தலைப்பைப் பாத்து ஏதாவது காரசாரமான அரசியல் பதிவுன்னு நினைச்சி வந்திருந்திருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள்.

இலங்கை பங்குசந்தையை பொருத்த வரை, இப்போதைக்கு ஜனாதிபதித் தேர்தல் முக்கிய விஷயமாக பங்கு வர்த்தகர்களின் மன நிலையை பாதித்திருக்கின்றது. இந்த விஷயத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பொருத்தே நமது பங்குச்சந்தையில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிகழ்த்தப் போகின்றன.

தற்பொழுது சர்வதேச முதலீட்டாளர்களின் பார்வை இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் பக்கம் திரும்பியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், முதலீடுகளை மேற்கொள்வதற்கான சிறப்பான இடமாக இலங்கை பரிணமித்துள்ளது.இதற்கிடையில் தற்போது காணப்படுகின்ற சில நடமாட்ட தடைகளையும் சர்வதேச முதலீட்டாளர்களின் தேவைக்கருதி அரசாங்கம் தளர்த்த வேண்டும்.

இலங்கையின் பங்குசந்தை சர்வதேச அளவில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி, 2009ம் ஆண்டில் 112 சதவீத வளர்ச்சிப் போக்கை காட்டியதாகவும் காணப்பட்டது.


இதுவரை சொன்னது, மொத்த பங்கு சந்தையில் ஏற்படும் பொதுவான மாற்றங்களைப் பற்றியது மட்டுமே. தனிப்பட்ட பங்குகளில் ஏற்படும் மாற்றங்கள், அந்தந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமைகின்றன.

குறுகியகால பங்குலாபங்களை(சலுகைகளை) விடுத்து மூலதன லாபத்துக்கு (நீண்ட காலத் திட்டங்கள்) எவை என நன்றாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

உலக அதிசயங்களில் ஒன்றாக இடம் பிடிக்க வல்ல நமது ஜனாதிபதித் தேர்தலில் சுவாரஸ்யத்திற்கும் என்றும் பஞ்சமில்லை. சுவாரஸ்யங்களை கண்டு ரசிக்கும் அதே வேளையில் வாக்களிக்கும் கடமையை மறந்து விட வேண்டாம். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_25.html"

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 25.01.2010


இலங்கை பங்குச்சந்தை திங்கட்கிழமை இன்று 0.64 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.64 சதவீதம் (22.72 புள்ளி) உயர்ந்து 3,554.45 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.55 சதவீதம் (22.07 புள்ளி) உயர்ந்து 4,066.90 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.50 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 25.01.2010

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 25.01.2010

திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 490.1 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 157.7 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 647.8 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/25012010.html"

Sunday 24 January 2010

* முதலீட்டாளர்களின் விழிப்புணர்வுக்காக பதிவு...

வணக்கம் நண்பர்களே ,

கடந்த சில வாரங்களாக இலங்கை பங்குச்சந்தை உயர்வுகளில் வர்தகமாகி வருவது தாங்கள் அறிந்ததே.இருந்த போதிலும் சந்தைகளின் தற்காலிக வளர்ச்சி சற்று அதிகப்படியானது என்பதினை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் .


ஒரு நாளில் முடிவடைந்த புள்ளிகளில் இருந்து அடுத்த நாள் அதிகரித்து முடிந்துள்ளன.அதே போல சந்தைகளில் முதலீட்டாளர்களின் மன போக்கினையும் சற்று மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது அனைவரின் கவனத்தினையும் வாங்குவதன் பக்கமாக திருப்ப முயற்சிக்கப்படுவதாக கருதுகிறேன் .

இந்நிலையில் சந்தைகள் மேலும் மேலும் உயர்வினை அடைவது சற்று எனக்கு
சந்தேகத்தினை வலுக்கிறது . காரணம் இவ்வாறு ஏற்ப்படும் உயர்வுகள் சமயத்தில் சந்தைகளில் பெரிய தாக்கத்தினை ( சரிவினை ) உண்டாக்கலாம் .

சந்தைகளின் போக்கில் சென்று உடன் லாபத்தினை உறுதி செய்யுங்கள் .

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள்:-ஐனவரி 2009 முதல் ஐனவரி 2010 வரை.


அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள்:- நவம்பர் 2009 முதல் ஐனவரி 2010 வரை.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள்:- 18-01-2010 முதல் 22-01-2010 வரை.

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- ஐனவரி 2009 முதல் ஐனவரி 2010 வரை.

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- நவம்பர் 2009 முதல் ஐனவரி 2010 வரை.

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- 18-01-2010 முதல் 22-01-2010 வரை.

(முதலீட்டாளர்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே)

உங்களின் கருத்துக்களை, ஆலோசனைகள, அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறேன். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_24.html"

Saturday 23 January 2010

* பங்குச்சந்தையில் பெரும்பாலோனோர் பணத்தை இழப்பது ஏன்?

இந்த பதிவில் புதிதாக ஒன்றும் இல்லை ஏற்கனவே பெரும்பாலானவை முன்னைய பதிவுகளில் சொல்லப்பட்டவைதான்.



பணத்தை இழப்பதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம் என்றாலும் முக்கியமான மூன்று:-

1. பேராசை



2. நிதானமின்மை




3. அதிகப்படியான ரிஸ்க் எடுத்தல்



பங்குச்சந்தையில் பல்வேறு முறைகளில் பங்குவர்த்தகம் செய்ய முடிந்தாலும்,எவை உங்களுக்கு நன்கு தெரியுமோ அவை மட்டுமே செய்ய வேண்டும்.

நல்ல பங்குகளை சந்தை சரிவை பயன்படுத்தி வாங்குங்கள்.



நீங்கள் வைத்திருக்கும் பங்கை பற்றிய தகவல்களை நிறைய படியுங்கள். அதிர்ஷ்டத்தை நம்பி சந்தைக்கு வராதீர்கள்.

சந்தையில் பணம் சம்பாதிப்பது மிக கடினம் ஆனால் பணத்தை விடுவது மிக எளிது. சந்தையில் வர்த்தகம் செய்யும் எவருக்கும் இந்த உண்மை கண்டிப்பாக தெரியும்.

உங்களுக்கென ஒரு வழிவகை வகுத்துக்கொண்டு (make a set of rules) அதை கண்டிப்பாக பின்பற்றினால் வெற்றி நிச்சயம். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_23.html"

Friday 22 January 2010

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 22.01.2010

இலங்கை பங்குச்சந்தை இன்று 0.34 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.34 சதவீதம் (12.02 புள்ளி) உயர்ந்து 3,531.73 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.10 சதவீதம் (03.93 புள்ளி) உயர்ந்து 4,044.83 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.68 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 22.01.2010

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 22.01.2010

வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 462.6 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 124.3 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 586.9 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/22012010.html"

* யாழ்ப்பாணத்தில் இலங்கைப் பங்குச் சந்தைக் கிளை திறக்கத் திட்டம்

வடக்கு,கிழக்குப் பகுதியில் உள்ள முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக யாழ்ப்பாணத்தில் இலங்கை பங்குச்சந்தையின் கிளை அலுவலகம் ஒன்றைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் விவசாய வளம் மிகுதியாக இருக்கின்றது. எனவே அதைச் சார்ந்த உயிரியல் வேதியல், உரம் உள்ளிட்ட தொழிற்துறைக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், இதன் அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்களை, குறிப்பாக இந்திய முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.

இம்முயற்சியின் ஓர் அங்கமாகத் தற்போது யாழ்ப்பாணத்தில் இலங்கை பங்குச் சந்தையின் கிளையை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளன.

அலுவலகக் கட்டிடத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பங்குச் சந்தை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இம்மாத இறுதிக்குள் கிளை அலுவலகத்துக்கான கட்டிடம் தயாராகி விடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பெப்ரவரி மாத தொடக்கத்தில் கிளை அலுவலகம் திறக்கப்பட்டுவிடும் என இலங்கை பங்குச்சந்தை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_22.html"

Thursday 21 January 2010

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 21.01.2010


இலங்கை பங்குச்சந்தை வியாழக்கிழமை இன்று 0.36 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.36 சதவீதம் (12.70 புள்ளி) சரிந்து 3,519.71 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.74 சதவீதம் (30.18 புள்ளி) சரிந்து 4,040.90 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 727.2 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 21.01.2010

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 21.01.2010

வியாழக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 85.1 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 35.8 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 120.9 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/21012010.html"

Wednesday 20 January 2010

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 20.01.2010


இலங்கை பங்குச்சந்தை புதன்கிழமை இன்று 1.41 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.41 சதவீதம் (49.11 புள்ளி) உயர்ந்து 3,532.41 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.51 சதவீதம் (60.57 புள்ளி) உயர்ந்து 4,071.08 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.20 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 20.01.2010

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 20.01.2010

புதன்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 374.0 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 102.4 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 476.4 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/20012010.html"

* அமெரிக்காவில் ஒரே நாளில் 3 வங்கிகளுக்கு மூடு விழா......

ஒரு பக்கம் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாக அமெரிக்க நிதித் துறை கூறினாலும்,வங்கிகள் மூடு விழா தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது.அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் ரியல் எஸ்டேட் துறைக்கு அடுத்து, மிக மோசமான பாதிப்புக்கு உள்ளானது வங்கித் துறைதான்.

2010ம் ஆண்டின் தொடக்கத்திலேயே அமெரிக்க வங்கித் துறையில் 4 வங்கிகள் மூடப்பட்டன.ஜனவரி 15ம் தேதி அன்று மட்டும் பார்ன்ஸ் பேங்கிங் கம்பெனி(Barnes Banking Company), செயின்ட் ஸ்டீபன் வங்கி(St Stephen State Bank), டவுன் கம்யூனிட்டி வங்கி(Town Community Bank & Trust) உள்ளிட்ட மூன்று வங்கிகள் மூடப் பட்டன. கடந்த வாரம் வாஷிங்டனைச் சேர்ந்த ஹாரிசன் வங்கி (Horizon Bank) திவாலானது.

அமெரிக்க காப்பீட்டுத் துறையால் உத்தரவாதமளிக்கப்பட்ட மொத்த வங்கிகள் 8000.இந்த 3 வங்கிகள் திவாலானதால் 296.3 மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க காப்பீட்டுத் துறை அறிவித்துள்ளது.

2009-ம் ஆண்டில் மட்டும் 140க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு மேல் மூடு விழா கண்டுள்ளன. 2008-ல் 20 வங்கிகளும், 2007-ல் மூன்று வங்கிகளும் மூடப்பட்டன.

அமெரிக்கா:ஒரேநாளில் 3 வங்கிகளுக்கு மூடு விழா-வீரகேசரி submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/3.html"

Tuesday 19 January 2010

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 19.01.2010

இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 0.97 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.28 சதவீதம் (45.25 புள்ளி) சரிந்து 3,483.30 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.56 சதவீதம் (63.51 புள்ளி) சரிந்து 4,010.51 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 739.4 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 19.01.2010

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 19.01.2010

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 24.3 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 75.3 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 51.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/19012010.html"

Monday 18 January 2010

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 18.01.2010

இலங்கை பங்கு சந்தை திங்கட்கிழமை இன்று 0.97 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.97 சதவீதம் (34.59 புள்ளி) சரிந்து 3,528.55 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.62 சதவீதம் (25.26 புள்ளி) சரிந்து 4,074.02 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.73 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 18.01.2010

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 18.01.2010

திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 138.2 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 138.9 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 277.1 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/18012010.html"

* சிறுவனாகிய என்னை பெரியவனாக்கிய ''பதிவு''

ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகம் துபாய்க்கு மாற்றப்படுமா? - இந்த தலைப்பில் நான் பதிவை எழுதினேன். பதிவு இணைய தளத்திலும் இந்த கட்டுரையை காணலாம்.

நான் எழுதிய கட்டுரை,ஒரு வார்த்தை கூட மாறாமல்......... WOW!!! THAT IS MIRACLE



என் கட்டுரைக்கு விளம்பரம் போட்டதற்கு நன்றி... ஆனால் என் பெயரை அதில் குறிப்பிட மறந்துவிட்டீர்களே........

கடைசியா ஒரு கேள்வி: எப்படி தான் அடுத்தவன் போர்வையில் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் குளிர்காய்கிறார்கள்? submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_18.html"

Sunday 17 January 2010

* ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகம் துபாய்க்கு மாற்றப்படுமா?

2015ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து துபாய்க்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஐக்கியநாடுகள் சபைக்கு தலைமையகம் அமைப்பதற்கான இடம் தர தயார் என துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .ஏற்கனவே இந்த வாய்ப்பு சிங்கப்பூருக்கு இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் செயல்பட அமெரிக்காவுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அதனை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் உலக நாடுகளின் தலைமையகமான ஐக்கியநாடுகள் சபைக்கு உலக நாடுகள் அனைத்திற்கும் எளிதில் செல்வதற்கான இடமாக இருக்க வேண்டுமென்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு ஐ.நா அதிகாரிகளை அழைத்துள்ள துபாய் அரசு தலைமையகத்தை துபாயில் அமைப்பதால் ஏற்படும் சாதகங்களை குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த தயாரென்றும் கூறியுள்ளது.

பூகோள அமைப்பில் துபாய்க்கு நிறைய சிறப்புகள் உண்டு. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் எளிதாக சென்றடையக் கூடிய நகரம், உலகத்திலேயே மாநாடு நடத்துவதற்கான இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. சர்வதேச தரத்திலான அடிப்படை வசதி வாய்ப்புகள் நிறைந்த இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. கடல்வழி, விமான வழி, சாலை வழி போக்குவரத்து வாய்ப்புகள் ஐக்கியநாட்டு சபை போன்ற எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் அமைப்பிற்கு ஏற்ற இடமாக துபாய் கருத்தில் கொள்ளப்படுகிறது.

உலக சமாதானத்திற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஐ.நா நடத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகத்தான் ஐ.நா வின் தலைமையகத்தை துபாய்க்கு கொண்டுவருவதற்கான முயற்சி என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் அதிகமான தொடர் பங்களிப்பை உறுதிச்செய்யும் விதமாக ஐ.நா தலைமையகத்தின் இடம் மாற்றம் தங்களுக்கு உதவும் என துபாய் அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் ஐ.நா சபை அமெரிக்காவில் இருப்பதால் செலவுகள் அதிகரித்து அது அமெரிக்கா குடிமகன்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த செய்தி அறிக்கையிலும் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா நாடுகளில் அதிக வசதிகள் உள்ள துபாய்தான் எதிர்காலத்தில் உலகத்தின் தலைமையகமாக சிறந்தது என்றும் "யுனைட்டட் நேசன்ஸ் சிட்டி" துபாய் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்:-

Move The U.N. To Duba- Forbes

Debt-laden Dubai offers to host U.N. headquarters - Reuters submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_16.html"