Tuesday 23 February 2010

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 23.02.2010


இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 0.08 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.08 சதவீதம் (03.15 புள்ளி) சரிந்து 3,770.40 புள்ளியிலும் , மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.38 சதவீதம் (16.31 புள்ளி) சரிந்து 4,315.20 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 799.6 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 23.02.2010
மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 23.02.2010

Top 5 Gainers

STOCK PRICE CHANGE %
CTEA.N0000 530.00 82.75 18.50
COLO.N0000 62.00 08.00 14.81
SOY.N0000 139.75 17.50 14.31
RGEM.N0000 33.00 04.00 13.79
PHAR.N0000 350.00 35.00 11.11

Top 05 Losers

STOCK PRICE CHANGE %
SUN.N0000 702.00 -118.00 -14.39
SMOT.X0000 122.00 -10.50 -7.92
MULL.N0000 1.20 -0.10 -7.69
RHL.X0000 23.25 -1.75 -7.00
CFT.N0000 30.50 -2.25 -6.87

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 25.5 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 31.8 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 57.3 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/23022010.html"

Monday 22 February 2010

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 22.02.2010


இலங்கை பங்குச்சந்தை திங்கட்கிழமை இன்று 0.13 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.13 சதவீதம் (04.74 புள்ளி) உயர்ந்து 3,773.55 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.27 சதவீதம் (11.53 புள்ளி) சரிந்து 4,331.51 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.01 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 22.02.2010

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 22.02.2010

திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 32.2 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 72.7 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 104.9 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/22022010.html"

* வெற்றியின் சூத்திரம் ( SUCCESS FORMULA)

வெற்றி பெற வேண்டுமென்கிற வேட்கை யாருக்குத்தான் இல்லை. வெற்றிதானே மனிதருக்கெல்லாம் மகிழ்ச்சியை அளிக்கிறது. மானுடர்க்கெல்லாம் மகிழ்ச்சிதானே மண்ணுலக வாழ்கையின் தலையாய நோக்கம்.

மகிழ்ச்சியாய் இருக்கிற மனிதர்களையெல்லாம் கேட்டுப்பார்த்தால் தெரியும் அவர்கள் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள். விரும்பியதை அடைந்தவர்கள்தானே வெற்றி பெற்றவர்கள்.


ஆழ்ந்து சிந்தித்தால் வெற்றியும் மகிழ்ச்சியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவைகள் எப்போதும் இணைந்தே இருப்பவைகள் பிரிக்க முடியாதவைகள்.

சரி, அப்படியென்றால் வெற்றி பெறுவதற்கு என்ன தேவை? கணக்குப்பாடத்தில் கணக்குகளை செய்வதற்கு சூத்திரங்கள் (Formula) இருப்பதுபோல வெற்றியடைவதற்கு ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா? ஒருவேளை அதை நாம் தெரிந்துகொண்டால் வெற்றிக்கனியை சுவைப்பது சுலபமாகிவிடும் அல்லவா? ஆம்! இதோ வெற்றி சூத்திரம்.

வெற்றி என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் Success. இதை ஆங்கிலத்தில் MNEMONICS (First Letter of a list of points to remember) ஆக எடுத்துக்கொண்டால் பின்வரும் செய்திகளை ஒவ்வொரு எழுத்தும் நமக்கு விரித்துரைக்கும்.



SUCCESS என்கிற வெற்றிச் சொல்லின் விளக்கமாக கீழ்க்காணும் கருத்துக்களை தொகுத்து நம் வாழ்க்கையின் வசத்துக்குக் கொண்டு வந்தால் வெற்றி நிச்சயம். வெற்றி பெறுவதற்கு இன்றியமையாத இந்த குணங்களை பெறாமல் வெற்றி பெறுவது எங்ஙனம் நிகழும்?

S - Self Confidence= தன்னம்பிக்கை.

U - Understanding inter personal relationship = மனித உறவுகளை புரிந்து கொண்டு மேம்படுத்திக் கொள்ளுதல்.

C - Communiation Skill = சொல்வன்மை செய்திகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் திறன்.

C - Creativity = படைப்பாற்றல் கற்பனை வளர்த்தை பயன்படுத்தி புதியன உருவாக்குதல்.

E - Energic Attitude = உற்சாகமான மனப்பாங்கு.

S - Superb Memory = மிகச்சிறந்த நினைவாற்றல்.

S - Self Motivation = தன்னைத்தானே செயலூக்கப்படுத்திக் கொள்ளுதல். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/success-formula.html"

Thursday 18 February 2010

* ஒரு சிறிய இடைவெளி….

வணக்கம் நண்பர்களே !!!

சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அடுத்த சில நாட்களுக்கு பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா பதிவினை தொடர இயலவில்லை......

திங்கட்கிழமை (22-02-2010) முதல் வழமைபோல பதிவினை தொடர முயற்சிக்கிறேன். ...

மன்னிக்கவும்

நன்றி !!!

நிர்வாகி submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/blog-post_18.html"

Wednesday 17 February 2010

* இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. ( GSP+ ) வரிச்சலுகை ரத்து

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி. ( GSP+ ) வரிச்சலுகையை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தகவல் பிரஸல்ஸில் உள்ள இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மூலமாக இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் ஆறுமாத காலப் பகுதியில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான குறைபாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜி.எஸ்.பி. ( GSP+ ) திட்டத்தின் கீழ், ஐரோப்பாவுக்கு ஆடைகள், மீன் போன்றவற்றை சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு மட்டும், சுமார் 1.24 பில்லியன் யூரோக்கள் பெறுமான பொருட்கள் இலங்கையிலிருந்து ஐராப்பிய ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மீது இறக்குமதி தீர்வை விதித்திருந்தால் அதன் மூலமாக 78 மில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடைத்திருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த திட்டம் வளர்முக நாடுகளில் நீடிக்கத்தக்க வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று.


தற்போது ஜி.எஸ்.பி. ( GSP+ ) நிறுத்தப்படுவதானது இலங்கையின் புடவைக் கைத்தொழில் துறையை பாரியளவில் பாதிக்கும் என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் தொழில்களை இழக்க நேரிடும்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் உரியவகையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தடை அமுலுக்கு வருகிறது.


submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/gsp_17.html"

Tuesday 16 February 2010

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 16.02.2010

இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 0.71 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.71 சதவீதம் (26.47 புள்ளி) சரிந்து 3,691.04 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.65 சதவீதம் (02.09 புள்ளி) சரிந்து 4,193.75 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 639.6 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 16.02.2010
மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 16.02.2010

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 49.9 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 30.5 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 80.4 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/16022010.html"

* யாழ்ப்பாணத்தில் எச்.எஸ்.பி.சி (H.S.B.C) வங்கிக்கிளை திறப்பு

எச்.எஸ்.பி.சி (H.S.B.C) வங்கி யாழ்ப்பாணத்தில் தனது புதிய கிளையை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள 145 ஆம் இலக்கக் கட்டடத்தில் வைபவ ரீதியாகத் திறந்து வைய்த்தது. இந்த வங்கிக் கிளையை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் திறந்து வைக்கிறார். இதில் பிரிட்டிஷ் தூதர் டாக்டர் பீற்றர் ஹெய்ஸ், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிக்கலஸ் ஆகியோர் விசேட விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.

யாழ் குடாநாட்டில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதாலும், அபிவிருத்தி நடைபெற்று வருவதாலும் பல தனியார், அரச வங்கிக் கிளைகள் கூட புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. இன்று முதலாவது வெளிநாட்டு வங்கியான எச்.எஸ்.பி.சி வங்கி தனது கிளையை திறக்கவுள்ளது.






படங்கள் உதவி:-வீரகேசரி இணையம் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/hsbc.html"

Monday 15 February 2010

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 15.02.2010


இலங்கை பங்குச்சந்தை திங்கட்கிழமை இன்று 0.20 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.20 சதவீதம் (07.54 புள்ளி) உயர்ந்து 3,717.51 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.48 சதவீதம் (20.05 புள்ளி) சரிந்து 4,195.84 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.21 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 15.02.2010
மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 15.02.2010


Top 5 Gainers

STOCK PRICE CHANGE %
SING.N0000 140.00 44.00 45.83
EBCR.N0000 299.25 71.25 31.25
ABAN.N0000 133.00 18.00 15.65
SUN.N0000 831.25 88.75 11.95
BUKI.N0000 3499.50 364.00 11.61

Top 05 Losers

STOCK PRICE CHANGE %
EMCR.N0000 151.00 -69.00 -31.36
SEMB.X0000 1.00 -0.10 -9.09
SPEN.N0000 1230.00 -190.00 -8.14
SUGA.N0000 32.50 -2.75 -7.80
LHL.N0000 73.00 -6.00 -7.59


திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 20.9 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு 284.8 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 263.9 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/15022010.html"

Saturday 13 February 2010

* பயன் உள்ள பதிவா?????

வணக்கம் நண்பர்களே !


இலங்கைப் பங்குச்சந்தை நாளாந்த நடவடிக்கைகளை தொகுத்து
இலங்கை பங்குச்சந்தையின் போக்கு என்ற பதிவாக எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

இலங்கை பங்குச்சந்தையின் போக்குப் பதிவு பயன் உள்ள பதிவா?

உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.

மேலும் இனி பங்குச்சந்தை பற்றி சில காரசாரமான உரையாடல்களுடன் பதிவுகளை எழுத உள்ளேன்.

நன்றி.

நிர்வாகி
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/blog-post_13.html"

* பங்குசந்தையின் நிறம் சிவப்பு-இலங்கை பங்குச்சந்தை நடவடிக்கை- 08-02-2010 முதல் 12-02-2010 வரை



இலங்கை பங்குசந்தை சென்ற வாரம் முதலீட்டாளர்களை ஒரு கலக்கு கலக்கி விட்டது.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் :- 08-02-2010 முதல் 12-02-2010 வரை

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- 08-02-2010 முதல் 12-02-2010 வரை

இப்போது என்ன செய்யலாம்? எந்த பங்குகளை வாங்கலாம், விற்கலாம்? ஒன்றும் செய்யாமல் ஒதுங்கி இருப்பது நல்லது!

நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இலங்கை பங்குச்சந்தை இன்னும் சில தினங்களுக்காவது இப்படி தடுமாறிக் கொண்டிருக்கும் (volatile) என்பது என் யூகம். தினமும் சந்தையின் ஏற்ற தாழ்வுகளை பார்த்து கவலைப்படாதீர்கள். நல்ல பங்குகள் நல்ல விலையில் கிடைத்தால் வாங்குங்கள். நீண்ட கால முதலீட்டாளர்கள் (Long-term investors) தோற்றதில்லை. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/08-02-2010-12-02-2010.html"

Friday 12 February 2010

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 12.02.2010


இலங்கை பங்குச்சந்தை இன்று 0.40 சதவீதம் சரிவை கண்டுள்ளது.


பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.40 சதவீதம் (14.87 புள்ளி) சரிந்து 3,709.97 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.12 சதவீதம் (47.64 புள்ளி) உயர்ந்து 4,215.89 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 974.5 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 12.02.2010

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 12.02.2010

வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 4.7 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 70.7 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 75.4 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/12022010.html"