Thursday 16 December 2010

* இலங்கையில் இரண்டாயிரம் ரூபா நோட்டுகள் நிறுத்தம்! ஐயாயிரம் ரூபா நோட்டுக்கள் அச்சிடப்படவுள்ளன

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஐயாயிரம் ரூபா நோட்டுகள் அச்சிடப்படவுள்ளன. அதேநேரம் தற்போது புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபா நோட்டுக்களை அச்சிடுவது நிறுத்தப்படவுள்ளன. இந்த தகவலை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கையின் நாளாந்தம் ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. அதேநேரம் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்திற்கொண்டு குறைந்த பொருட்களை கொள்வனவு செய்ய கூடிய பணத்தை காவி செல்வது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் என்ற காரணத்துக்காகவே ஐயாயிரம் ரூபா அச்சிடப்பட்டு, இரண்டாயிரம் ரூபா நோட்டுகள் நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் வைர விழாவை முன்னிட்டு ஐயாயிரம் ரூபா பெறுமதியான நாணயக் குற்றியொன்றை வெளியிட மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

1950.08.28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி 2010.08.28 ஆம் திகதியன்று 60 ஆண்டுகளைப் பூர்த்திசெய்தமையைக் குறிக்கும் வகையிலேயே இந்த நாணயக் குற்றி வெளியிடப்படுகின்றது.

பல வர்ணங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டுள்ள இந்த நாணயக் குற்றியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் மரம் ஒன்றின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அதன் பெறுமதி குறிக்கப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட் அளவில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளதால் ஐயாயிரம் ரூபா பெறுமதியான இந்த நாணயக் குற்றி ஏழாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதான காரியாலயத்திலும் மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள அதன் கிளை அலுவலகங்களிலும் இந்த நாணயக் குற்றியைப் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய வங்கி அறிவிததுள்ளது.

நன்றி :-தமிழ்வின் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/blog-post_16.html"

Wednesday 15 December 2010

* இலங்கையில் 5ஆயிரம் ரூபா நாணயக்குற்றி அறிமுகம்













இலங்கை மத்திய வங்கியின் வைரவிழாவை முன்னிட்டு ஐயாயிரம் ரூபா பெறுமதியான நாணயக் குற்றியொன்றை வெளியிட மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

பல வர்ணங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டுள்ள இந்த நாணயக் குற்றியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் மரம் உன்றின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அதன் பெறுமதி குறிக்கப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட் அளவில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளதால் ஐயாயிரம் ரூபா பெறுமதியான இந்த நாணயக் குற்றி ஏழாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி:- வீரகேசரி இணையம் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/5.html"

Wednesday 8 December 2010

* அமெரிக்க நிறுவனங்கள் பொருளாதார விழ்ச்சியில் இருந்து மீள்கின்றனவா?


அமெரிக்க நிறுவனங்களின் மேலதிகாரிகள் மற்றும் நிதித்துறை நிர்வாகிகள் செல்வக்கொழிப்பிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் பத்து மில்லியனுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பொருளாதார மந்த நிலைக்கு முகம் கொடுத்துக்கொண்டுவரும் நிலையில் இவர்கள் மிக உயர்ந்த கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

2009ம் ஆண்டு அமெரிக்காவின் 450 பெரிய நிறுவனங்களின் நிர்வாகிகள் பெற்ற வருடாந்த கொடுப்பனவுகள் 11% அதிகரித்திருப்பதாக The Wall Street Journal வெளியிட்ட புதியதொரு கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாய், சராசரியான ஊதியம் (சம்பளங்கள், கொடுப்பனவுகள், பங்குகள் மற்றும் பிற ஊக்கச் சலுகைகள் ஆகியவை உட்பட) 3 சதவீதம் உயர்ந்து 2009ல் 7.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

நிறுவனங்களின் இலாபம் முந்தைய வருடத்தை விட இருமடங்காய் அதிகரித்திருந்ததன் விளைவே இந்த அதிகரித்த ஊதியங்கள். இதனால் மொத்தமாய் பங்குதாரருக்கான வருடாந்த வருவாய் 29% அதிகரித்திருந்தது.கடந்த இருவருட காலங்களில் நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கை குறைப்பு,மற்றும் ஊதியங்கள் மற்றும் நல உதவிகள் குறைப்பு என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன.முழு-நேரத் தொழிலாளர்களை விடுத்து வறுமை நிலை ஊதியங்களைப் பெறும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு பணியமர்த்தி கொஞ்சம் கொஞ்சமாய் உற்பத்தித் திறனை உயர்த்திக் கொண்டன.

சென்ற வருடத்தில் பெரும் ஊதியங்களை தட்டிச் சென்றிருக்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியல் பின்வருமாறு:

1. Gregory B.Maffei - Liberty Media Corp - இவர் சென்ற ஆண்டில் 87.1 மில்லியன் டொலர் தொகையை மொத்தமாய் ஊதியமாய் பெற்றுள்ளார் - இது அவரது 2008 தொகையைக் காட்டிலும் நான்கு மடங்கு.

2.Larry Ellison - Oracle's Founder - இவர் 68.6 மில்லியன் டொலர்களை பெற்றிருந்தார்.

3.Ray r.Irani - Occidental Petroleum Corp - இவர் பெற்ற தொகை 52.2 மில்லியன் டொலர்கள்.

4.Carol Bartz -Yahoo - இவர் 44.6 மில்லியன் டொலர்கள் பெற்றிருந்தார்.

5.Leslie Moonves - CBS - இவர் 39 மில்லியன் டொலர்கள் பெற்றிருந்தார்.

S&P 500 குறியீடு இந்த ஆண்டில் இதுவரை 7.5 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், 2010ல் மேல்நிலை நிர்வாகிகள் இன்னும் கூடுதல் ஊதியங்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்களும் வருவாய் எதிர்பார்ப்புகளை விஞ்சுகின்றன, பங்கு விலைகள் அதிகரிக்கின்றன, செயல்திறன் நன்றாக உள்ளது.ஆயினும், இந்த வருட இறுதியில் வோல் ஸ்ட்ரீட் தனது கொடுப்பனவுகளை அளிக்கும்போது நிதி மேலாளர்களும் (Hedge fund) தனியார் பங்கு வர்த்தகர்களும் பெறவிருக்கும் விசித்திரமான பெரும் தொகைகளுடன் ஒப்பிட்டால் ஊடகத் துறை, எரிசக்தித் துறை மற்றும் இணைய நிறுவனங்களின் தலைவர்கள் பெறக்கூடிய தொகை குறைவாகவே இருக்கிறது. Goldman Sachs, Morgan Stanley, Citigroup, Bank of America and JPMorgan Chase ஆகியவை தங்களது வருட-இறுதி கொடுப்பனவுகளுக்காக 89.54 பில்லியன் டொலர் தொகையை ஒதுக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தை உருக்குலைவின் விளிம்பிற்குக் கொண்டுவந்த நிதி முறிவின் வெறும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பெருநிறுவனங்கள் மற்றும் நிதிச் சந்தைகளின் “போட்டித்திறனையும்” ”இலாபமீட்டுநிலையையும்” பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது என்று வாதிட்டுக் கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் முதலாளித்துவ அரசாங்கங்கள் சிக்கனத்தையும், செலவுக் குறைப்பையும் கோருகின்றன.தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கைத் தரங்கள் நிரந்தரமாக குறைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளாதவரை வேலைக்கு அமர்த்தப் போவதில்லை என்பதை பணமூட்டைகளின் மீது அமர்ந்திருக்கும் அமெரிக்க பெருநிறுவனங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

பொருளாதாரத்தை சமநிலைக்குக் கொண்டுவர யாருக்காவது ஊதிய வெட்டு அவசியம் என்றால், அது நிச்சயமாக கொழுத்த சம்பளத்தைப் பெறும் முதலீட்டு வங்கியாளர்கள்,மற்றும் பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் ஆகியோருக்குத் தான் அவசியம் என்று இதைப் படிக்கும் உங்களில் பலரும் நினைப்பீர்கள் என்று நிச்சயமாக எனக்குத் தெரியும். அப்படித்தான் சோசலிச சொர்க்கத்தில் விடயங்கள் நடக்கும், ஆனால் நியாயமானது என்பதைக் காட்டிலும் செயல்திறனை உருவாக்குவதில் மிகவும் மேம்பட்டவையான சந்தைப் பொருளாதாரங்களில் அப்படி நடக்காது.

உண்மையில், முதலாளித்துவம் இம்முறையில் தான் வேலை செய்கிறது, ஆனால் அதற்கும் “செயல்திறனுக்கும்” சம்பந்தமில்லை. கண்ணியமான இருப்பிடம், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு சீரமைப்புகள் ஆகிய சமூகத்தின் மிக அடிப்படையான தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் விடப்படும் நிலையில் மில்லியன் கணக்கான மக்களை வேலையின்மைக்கும் வறுமைக்கும் சபிப்பதில் என்ன செயல்திறன் கொட்டிக் கிடக்கிறது?

”மிகை நுகர்வு” பற்றிய எல்லா பேச்சுக்களிலும், ஆளும் வர்க்கத்தின் நுகர்வைக் குறைப்பதைப் பற்றி ஒருபோதும் ஆலோசிக்கப்பட்டதில்லை. அவர்களது முதலாளித்துவ அமைப்பு முறையும் குற்றவியல் நடவடிக்கைகளும்தான் உலக மக்களில் பெரும்பான்மையானோர் எதிர்கொள்ளும் திக்கற்ற நிலைமைகளுக்கு பொறுப்பானவை ஆகும்.

வீரகேசரி இணையத்தில்:- அமெரிக்க நிறுவனங்கள் பொருளாதார விழ்ச்சியில் இருந்து மீள்கின்றனவா? submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/blog-post.html"

Monday 6 December 2010

* பிரித்தானியாவில் 7லட்சம் பேர் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம்

ஒரு பக்கம் அரசின் 40 சதவீத செலவீனக் குறைப்பு நடவடிக்கை மற்றொரு பக்கம் சிறுவர்களுக்கான நன்மைகள் ரத்து ஆகியவற்றால் ஆட்டங்கண்டுள்ள பிரித்தானியர்களில் பலர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதற்கொண்டு அதிகப்படியான வரி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் பிரித்தானியக் குடும்பங்களின் பொருளாதார நிலை மேலதிக பின்னடைவைச் சந்திக்கும் என்பது உறுதி என்பதையும் நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கே போராட வேண்டிய நிலை ஏற்பட்டு விடலாம் எனவும் நிபுணர் தரப்பு எச்சரித்துள்ளது.

தற்போதைய சூழலில் பிரித்தானியாவில் 43,875 பவுண்ஸ் வருமானமீட்டுபவர்கள் தான் அதிகப்படியான வரி செலுத்துபவர்களாக மதிப்பிடப்படுகிறார்கள். இந்த வரம்பு அடுத்த வருடம் முதற்கொண்டு 42,475 பவுண்ஸ் என குறைக்கப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கானோர் இந்தப் பட்டியலில் சேர்ந்து விடுவர் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/7.html"