Thursday, 11 November 2010

* உலக வல்லரசுகளின் நாணயப் போர்

சீனப் பிரதமர் வென் ஜியாபோ ஆற்றிய உரை ஒன்றில் ஐரோப்பிய அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களுக்கு சீன நாணயம் முக்கிய மறுமதிப்பீடு செய்யவேண்டும் என்ற ஒபாமா பிரச்சாரத்தில் சேர்க்க வேண்டாம் என்று முறையிட்டார். அத்தகைய நாணய மாற்றம் பல சீன ஏற்றுமதியாளர்களைத் திகைப்பில் ஆழ்த்திவிடும் என்று சுட்டிக்காட்டிய அவர், “சீனா அதனுடைய பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டால், அது உலகிற்குப் பேரழிவைத் தரும்” என்று எச்சரித்தார்.

பல ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகபட்சமாக 2 முதல் 3 வரையிலான இலாப சதவிகிதத்தைத்தான் கொண்டுள்ளன. “சிலர் கோரியுள்ளபடி யுவானை 20 முதல் 40 சதவிகிதம் வரை மதிப்புக் கூட்டினால், ஏராளமான சீன ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுவிடும், தொழிலாளர்கள் வேலைகளை இழந்துவிடுவர், நகரத்துக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் கிராமப் புறத்திற்குச் செல்ல நேரிடும். இவை அனைத்தும் சமூகமானது உறுதியான தன்மையில் நீடிக்க இடரைக் கொடுத்துவிடும்” என்று வென் விளக்கினார்.

சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, சீனா மூன்றாவது காலாண்டில் தொடர்ந்து 9.6 சதவிகிதம் வளர்ச்சியை அடைந்தது. இது இரண்டாவது காலாண்டு வளரச்சியான 10.3 சதவிகிதத்தை விடச் சற்றே குறைவாகும்.2009ல் சீனா கிட்டத்தட்ட 50 சதவிகித உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புக் கொடுத்துள்ளது. பல நிறுவனங்களுக்கும் இது பெரிய சந்தையாக இருப்பதற்கான திறனையும் கொண்டுள்ளது.

சீன ஏற்றுமதியாளர்கள் ஒரு குறுகிய இலாப எதிர்பார்ப்பில் தான் செயல்படுகின்றனர். ஏனெனில் அவர்களுடைய பொருட்களின் விலைகள் வெளிநாட்டு பெருநிறுவன வாடிக்கையாளர்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்கள் தேவைகளைப் பிற குறைவூதிய நாடுகளான வியட்நாம் போன்றவற்றிற்கு எளிதில் மாற்றிக் கொள்ள முடியும். அநேகமாக ஒவ்வொரு சீனத் தொழிலிலும் ஏற்கனவே பரந்த முறையில் கூடுதல் திறனுள்ளது.

ஃபொக்ஸ்கான் நடத்தும் பெரும் அடிமை உழைப்பு ஆலைகள் மற்றொரு உதாரணம் ஆகும். இந்நிறுவனம் உலகின் மிகப் பெரிய ஆலைகளில் பெரும் புகழ்படைத்த ஆப்பிள், டெல் மற்றும் சோனி போன்ற நிறுவனங்களுக்காக மின்னணுப் பொருட்களை இணைப் பொருட்களாகச் செய்ய கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. குறைந்த ஊதியம் மற்றும் இராணுவ வகையிலான அடக்குமுறை பணிநிலைமைகளும் இந்த ஆண்டு பொக்ஸ்கானில் இளந் தொழிலாளர்கள் பலர் தொடர்ந்து தற்கொலைகள் செய்ததால் உயர்த்திக் காட்டப்பட்டன.

2008 கடைசியிலும், 2009 முதற் பகுதியிலும் 20 மில்லியன் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் ஏற்றுமதித் தொழில்களில் தங்கள் வேலைகளை இழந்துவிட்டனர். பெய்ஜிங் தன் பொருளாதாரத்தை குறைந்த கடனை அரசாங்க வங்கிகளிலிருந்து கொடுத்ததின் மூலம்தான் உறுதிப்படுத்த முடிந்தது. அதைப்போல் பாரிய உள்கட்டுமான கட்டமைப்புத் திட்டங்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கு உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் அது அமெரிக்க டொலருக்கு எதிராக யுவான் ஒப்புமையில் குறைந்த மதிப்புடையதை உத்தரவாதப் படுத்துவதற்கும் தலையிட்டது.அது சீன ஏற்றுமதிகளுக்கு உதவியது.இந்த நடவடிக்கைகள் சீனப் பொருளாதாரத்தை 10 சதவிகிதமளவு வளரச் செய்துள்ளன.

ஆனால் பெய்ஜிங் எதிர்கொள்ளும் சங்கடங்கள் அதிகரித்துள்ளன. சீனாவிற்கு எதிராக அமெரிக்கப் பிரச்சாரம், நாணய மறுமதிப்பில், பல துறைகளில் இரு சக்திகளுக்கும் இடையே உள்ள பெருகிய போட்டியின் ஒரு பகுதிதான். சீனாவின் பொருளாதார விரிவாக்கத்தை அமெரிக்காவின் உலக நிலைப்பாட்டிற்கு ஒரு சவாலாக அமெரிக்கா நோக்குகிறது. சீனாவை “நாணய முறையை சாதுரியமாக கையாளும் நாடு” என்று முத்திரையிடுவதாக ஒபாமா நிர்வாகம் அச்சுறுத்தியுள்ளது. இது பதிலடி நடவடிக்கைகளுக்கு வகை செய்யும்.

கடந்த வாரம் Fitch Ratings இன்படி உள்ளூர் அரசாங்க முதலீடுகள் சொத்துச் சந்தைகளில் நடந்துள்ளவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால், சீனாவின் பொதுக் கடன் இப்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 32 முதல் 47 சதவிகிதத்தில் உள்ளது. China Security Journal கடந்த வாரம் உள்ளூர் அரசாங்கக் கடன்களில் 1.15 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தில் 26 சதவிகிதம் அறவிடமுடியாமல் போகலாம் என்று எச்சரித்துள்ளது.

சீனாவில் ஊகம் என்பது வாஷிங்டனின் “பணப் புழக்கம் எளிதாக்கப்படும்” கொள்கையினால் எரியூட்டப்படுகிறது. அதுதான் சீனா போன்ற எழுச்சியடைந்துவரும் சந்தைகளில் அமெரிக்க டொலர்களை வெள்ளமாகப் பாயவைக்கிறது. சீனாவின் மக்கள் வங்கியின் கருத்துப்படி 120 பில்லியன் யுவான் ( $18 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) செப்டம்பர் மாதம் “சூடான பணமாக” (hot money-capital which is frequently transferred between financial institutions in an attempt to maximize interest or capital gain) நாட்டில் பாய்ந்தது—இது ஆகஸ்ட் மாத எண்ணிக்கையை விட இருமடங்கு ஆகும்.

ஆனால் பெய்ஜிங்கின் முக்கிய அச்சம் எந்தப் பொருளாதாரச் சரிவும் சமூக மற்றும் அரசியல் அமைதியின்மையைத் தூண்டும் என்பதாகும். ஏற்கனவே மே மற்றும் ஜூன் மாதங்களில் வேலைநிறுத்தங்கள் அதிக ஊதியங்களைக் கோரி கார்த் தொழிலும், மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு ஆலைகளிலும் நடைபெற்றன. இத்தொழிற்துறை நடவடிக்கை ஒப்புமையில் சிறு அளவிலிருந்து பொருளாதாரத் தேவைகளுடன் வரம்பு கட்டிக் கொண்டது. சீனாவின் 400 மில்லியன் தொழிலாளர்கள் மீண்டும் தொழில்துறை, அரசியல் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினால், அதன்பின் வென் எச்சரித்துள்ளதுபோல், அதிர்ச்சி அலை உலக முதலாளித்துவ முறை முழுவதும் உணரப்படும்.

வீரகேசரி இணையத்தில்:- உலக வல்லரசுகளின் நாணயப் போர் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/11/blog-post.html"

9 comments:

ம.தி.சுதா said...

நல்லதொரு அலசல் வாழ்த்துக்கள்....

kajan said...

காலத்திற்கேற்ற புதிய தகவல்களை தந்திருக்கின்றீர்கள்.. வாழ்த்துக்கள்.

Atchuthan Srirangan said...

ம.தி.சுதா உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி....

Atchuthan Srirangan said...

பல புதிய பொருளாதார தகவல்கள் இனி வரும் காலங்களில் உங்கள் ஆதரவு இருந்தால் வரும்..

kajan உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி....

Subankan said...

அருமையான பகிர்வு அச்சு, உங்களை ரொம்பவே மிஸ் பண்ணறோம் :)

Mohamed Faaique said...

///பல புதிய பொருளாதார தகவல்கள் இனி வரும் காலங்களில் உங்கள் ஆதரவு இருந்தால் வரும்///

நிறைய எதிர்பார்க்கிறோம்..

Atchuthan Srirangan said...

//Subankan said...

அருமையான பகிர்வு அச்சு, உங்களை ரொம்பவே மிஸ் பண்ணறோம் :)//


Subankan உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி....

I MISS SRILANKA AND FRIENDS TOO...

Atchuthan Srirangan said...

//Mohamed Faaique said...

///பல புதிய பொருளாதார தகவல்கள் இனி வரும் காலங்களில் உங்கள் ஆதரவு இருந்தால் வரும்///

நிறைய எதிர்பார்க்கிறோம்..//

Mohamed Faaique உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி....

RJ Dyena said...

நீண்ட நாட்களாக இந்த பங்குச் சந்தை பற்றிய விடயங்களை தெளிவாக அறியும் ஆவலில் இருந்த எனக்கு இந்த வலைப்பூ மிகப்பயனுடையதாக உள்ளது
நன்றி அச்சுதன்