Friday, 28 May 2010

* இலண்டனில் இன்று ஐபேட் (iPad) விற்பனை கோலாகலமாக ஆரம்பம்

இலண்டனிலும் வேறு பல நகரங்களிலும் ஐபேட்(iPad) வாங்குவதற்காக பல மணி நேரம் முன்னதாகவே வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். இலண்டனில் இன்று காலை 8 மணிக்குத் திறந்த ஆப்பிள் கடைக்கு நேற்று நண்பகலில் இருந்தே மக்கள் வரிசையாகக் காத்திருக்கக்த் தொடங்கிவிட்டனர்.

பிரபல நகச்சுவை நடிகர் Stephen Fry முன்கூட்டியே பதிவு செய்து ஒரு ஐபேட் வாங்கினார். ஏற்கனவே அமெரிக்காவில் ஒன்றை அவர் வாங்கியிருந்தார். இப்போது மீண்டும் வேறு ஒரு மாதிரி ஐபேட் வாங்கியுள்ளார். இதை என்ன செய்யப் போகிறீர்கள் என்று நிரூபர்கள் கேட்டதிற்கு நான் இதைக் கொண்டு போய் தடவப் போகிறேன் என்றார். ஆம் தொடு திரைத் தொழில் நுட்பம் தடவுவதன் மூலம் இயங்கும். அதை அவர் அப்படி நகைச் சுவையாகச் சொன்னார்.


ஐ-பொட், ஐ-போன், ஐபேட் ஆகியவற்றை வெற்றீகரமாகச் சந்தைப் படுத்தியதால் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பெரும் பெறுமதி மதிப்புயர்வைப் பெற்றுள்ளன. கடந்த் 10 ஆண்டுகளில் அவற்றின் மதிப்பு 10 மடங்கு உயர்ந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளின் மொத்த மதிப்பு இப்போது $222bn (£152.5bn) ஆக உயர்ந்துள்ளது. இதனால்தொழில்நுட்ப நிறுவனங்களின் பெறுமதி வரிசையில் இதுவரை முதலாம் இடத்தில் இருந்த மைக்ரோசொfர் இப்போது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப் பட்டு ஆப்பிள் முதலாம் இடத்தை அடைந்துள்ளது. மைக்ரோசொfரின் சந்தை மதிப்பு $219bn (£150.5 bn). submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/ipad.html"

* துபாய் வேர்ல்டை கடன் நெருக்கடியிலிருந்து காப்பாற்ற புதிய உடன்பாடு

கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துபாய் வேர்ல்டு நிறுவனத்துக்கு கைகொடுக்கும் விதத்தில் ஒரு புதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி இந்த நிறுவனத்தின் மொத்தக் கடன்தொகையான 23.5 பில்லியனில் 14.4 பில்லியன் டாலரை இரண்டு தவணைகளாகப் பெற்றுக்கொள்ள கடன்கொடுத்த நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

5 ஆண்டுகள் மற்றும் 8 ஆண்டு தவணைகளில் இந்த கடன் தொகை செலுத்தப்படும்.

மீதியுள்ள 8.9 பில்லியன் டாலர் கடனை, துபாய் அரசே செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம், உடனடியாக இந்த பெரும் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்து தப்பித்துள்ளது துபாய் வேர்ல்டு.

துபாய் வேர்ல்டு நிறுவனத்தின் கடன் நெருக்கடியால் உலக சந்தையே பெரும் சரிவுக்குள்ளானது நினைவிருக்கலாம். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/blog-post_28.html"

Thursday, 27 May 2010

* நல்லா ரசிச்சிட்டு ஓட்டு போடுங்கையா!

நண்பர் சதீஸ் சென்ற வருடம் பதிவுலகம் திரையுலக கலைஞர்களுக்கு விருது வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு அந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே போல இவ்வருடமும் திரையுலகுக்கு விருது வழங்கும் விழாவை சிறப்பாக நடாத்த எண்ணி இது பற்றி ஒரு பதிவு இட்டுள்ளார்.

அப் பதிவு இதோ


வணக்கம் மக்கள்ஸ்,

மீண்டும் ஒரு தடவை ஒரு பிரமாண்டமான அறிவிப்புடன் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. கடந்த வருடம் என்(SSHATHIESH in பார்வை) வலைப்பூவில் தனியாக சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக உங்கள் வாக்குகள் மூலம் அபிமானம் பெற்றவர்களை தெரிவு செய்து மகிழ்ந்தேன். நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து தங்கள் அபிமானிகளை தெரிவு செய்தனர். அதன் பின் அண்மையில் தான் அதை தமிலிஷில் பிரசுரிக்க உங்கள் அமோக ஆதரவுடன் பிரபல இடுகையாகியது. விளையாட்டாக நான் ஆரம்பித்த ஒரு விடயம் உங்கள் பலரின் அபிமானம் பெற இம்முறை அதை கொஞ்சம் விரிவாக்கி சிலர் சேர்ந்து செய்யலாமா என்ற எண்ணம் தோன்றவே சில பதிவர்களுடன் இதை கலந்துரையாடினேன்.

கலந்துரையாடலில் கிடைத்த ஊக்கம் தொடர்ந்து இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொண்டுள்ள பதிவர் கான்கொன், எரியாத சுவடுகள் பவன், என் உளறல்கள் வந்தியத்தேவன் மாமா, ஐந்தறைப்பெட்டி சுபாங்கன், நா எழுதும் கெளவ்பாய் மது அண்ணா ஆகியோரின் ஒத்துழைப்புடனும் இன்னும் சில பதிவுலக நண்பர்களுடனும் இணைந்து இந்த முயற்சியை ஆரம்பிக்கின்றோம். வழக்கமாக நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு தரும் நீங்கள் நிச்சயம் இந்த முயற்சிக்கும் கை கொடுப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இங்கே எங்கள் குழுவில் சேராது வெளியில் இருந்து ஆதரவு தர சில பதிவர்கள் தயாராக இருக்கும் நிலையில் ஒரு சில திரட்டிகளும் இதற்கு நல்ல சமிக்கை காட்டியுள்ளன. எனவே திரட்டிகளின் பங்கும் இங்கே மிகப்பெரிய பங்காக இருக்கும் என நம்புகின்றோம். எனவே அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவிப்பதோடு சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோரிடமும் இதற்கு ஆதரவு கேட்கின்றோம். பதிவுலகம் இன்று மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது. பல நிறுவனங்கள்,அமைப்புக்கள் திரை உலகிற்கு விருது வழங்கி வரும் நிலையில் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பதிவுலகில் வரும் காலத்தில் பிரமாண்ட விழாக்களுடன் இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. எனவே பூனைக்கு மணியைக் கட்டுவது யார்? நாங்கள் கட்டி இருக்கின்றோம்.

இந்த விருதுகளை நாம் வழங்க யார் என கேட்கலாம். சாதாரண ரசிகர்கள் தான் நாங்கள். ஆனால் பதிவர்கள் என்னும் மிகப்பெரிய சக்திகள். இது ஒரு குறிபிட்ட பிரதேசத்துக்கோ அல்லது குறிப்பிட்ட நாட்டுக்கோ அல்லது கண்டத்துக்கோ உரியதல்ல. நம் பதிவர்கள் எல்லோரும் இதன் பங்காளிகள். எனவே எங்களுக்குள் போட்டியாளர்களுக்காக தெரிவுகளுக்கான விவாதம்(நலன் விரும்பிகளும் பங்கு பெறுகின்றனர்) நடை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நீங்களும் எங்களுடன் தாராளமாக கை கோர்க்கலாம். இடம் காலம் மறந்து பதிவர்கள் என்ற ஒரு குடையின் கீழ ஒன்றாவோம். சாதிப்போம்.

இவ்வகையான புதிய முயற்சிகளுக்கு பங்குச்சந்தை - ஸ்ரீலங்காவின் ஆதரவு என்றும் உண்டு.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/blog-post_27.html"

* அமெரிக்காவில் 5 மாதங்களில் 73 வங்கிகள் மூடப்பட்டுள்ளன

அமெரிக்காவில் பொருளாதார சீர்குலைவு இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. கடந்த ஐந்து மாதங்களில் 73 வங்கிகள் அங்கு மூடப்பட்டுள்ளன. மேலும் பல வங்கிகள் வரும் நாட்களில் திவாலாகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மாதத்திற்கு சராசரியாக 14 அமெரிக்க வங்கிகள் திவாலாகி வருகின்றனவாம். உலக அளவில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டதிலிருந்து இதுவரை அமெரிக்காவில் 775 வங்கிகள் திவாலாகி மூடப்பட்டுள்ளனவாம்.

இந்த நிலை மேலும் தொடரும், மேலும் பல வங்கிகள் சீர்குலையும் என அமெரிக்க பெடர் டெபாசிட் இன்சூரன்ஸ் கழகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் 73 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அனைத்துமே நடுத்தர மற்றும் சிறிய வங்கிகள்.

மே மாதம் மட்டும் 9 வங்கிகளை அமெரிக்காவில் மூடியுள்ளனர். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/5-73.html"

Monday, 24 May 2010

*இந்தியாவுக்கு தனது முக்கியமான செயல்பாடுகளை பிரிட்டனிலிருந்து மாற்றியது Barclays

பிரிட்டனில் புதிய கன்சர்வேடிவ் அரசு பதவியேற்ற கையோடு, வங்கித் துறை கட்டுப்பாடுகள் மற்றும் வரி விதிப்பை தீவிரமாக்கியுள்ளது. இதனால் பிரிட்டனின் பிரபலமான பார்க்லேஸ்( Barclays) வங்கி, தனது செயல்பாடுகளை இந்தியாவுக்கு மாற்றிக் கொள்ளத் துவங்கியுள்ளது.

முதல் கட்டமாக, பிரிட்டனின் நார்த்தாம்ப்டன் நகர அலுவலகத்திலிருந்து 140 முக்கியப் பணிகளை இந்தியாவுக்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது பார்க்லேஸ்.

இதுகுறித்து பார்க்லேஸ் வங்கியின் CEO ஜான் வார்லி கூறுகையில், "பிரிட்டனில், குறிப்பாக லண்டனில் அதிகரிக்கும் வரி விதிப்புகள் மற்றும் நெருக்கடிகள் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.இத்தகைய வரிவிதிப்புகள் லண்டனை கடும் பாதிப்புக்குள்ளாக்கும்.

இந்தியா எங்களுக்கு வசதியான நாடாக உள்ளது.ஏற்கெனவே இந்தியர்களுக்கு சேவையைத் தொடங்கியுள்ளோம். பல நாடுகளில் NRI பிரிவைக் கூடத் துவக்கியுள்ளோம்.

இந்தியாவில் எமது நடவடிக்கையை அதிகரிக்கக் காரணம் சிக்கனம்தான் என்றாலும், இந்தியாவையே இனி சர்வதேச சேவை மையமாக்க மாற்ற விரும்புகிறோம்", என்றார். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/barclays.html"

Friday, 21 May 2010

* ATM தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் மரணம்

வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும் முறையை மகா எளிமையாக்கியுள்ள ஏடிஎம் மெஷினைக் கண்டுபிடித்தவரான ஜான் ஷெப்பர்ட் பேரோன்(John Shepherd-Barron) ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 84.

இந்த ஷெப்பர்ட் தான் உலகின் முதலாவது ATM இயந்திரத்தைக் கண்டுபிடித்தவராவார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் இவர் அங்குள்ள ரைமோர் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததாக அவரது இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்யும் அலிஸ்டைர் ரின்ட் கூறினார்.

60ம் ஆண்டுகளில் ஒருமுறை தான் கணக்கு வைத்திருந்த வங்கிக்குப் போயிருந்தார் ஷெப்பர்ட். ஆனால் வங்கி பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதையடுத்து தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை உருவாக்குவேன் என்று அறிவித்தார் ஷெப்பர்ட். சொன்னதோடு நிற்காமல் அந்த இயத்திரத்தையும் கண்டுபிடித்தார். தானியங்கி சாக்லேட் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த பணம் தரும் ATM இயந்திரத்தை அவர் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து 2007ல் பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், எனது பணத்தையே என்னால் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தானியங்கி சாக்லேட் தரும் இயந்திரத்தைப் பார்த்தேன். அதை அடிப்படையாக வைத்து இந்த ATM இயந்திரத்தை உருவாக்கினேன் என்றார்.

ஷெப்பர்ட் கண்டுபிடித்த முதலாவது தானியங்கி பணம் தரும் இயந்திரம், வடக்கு லண்டன் புறநகர்ப் பகுதியில், பர்க்லேஸ் வங்கிகிளையில் 1967ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி நிறுவப்பட்டது. இதுதான் உலகின் முதலாவது ATM இயந்திரமாகும்.

அப்போது பிளாஸ்டிக் டெபிட் கார்ட் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து ஷெப்பர்ட் கண்டுபிடித்த மெஷினில், வேதிப் பொருள் தடவப்பட்ட சிறப்பு கார்டுகள் பயன்படுத்தப்பட்டன.

மேலும் இதை பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்களுக்கு ஆறு இலக்கம் கொண்ட அடையாள எண்களை உருவாக்கினார் ஷெப்பர்ட். ஆனால் ஆறு எண்ணாக இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு சிரமமாக இருக்கும் என ஷெப்பர்டின் மனைவி கரோலின் தெரிவித்ததால் அதை நான்கு இலக்க எண்ணாக மாற்றினார் ஷெப்பர்ட்.

சமையலறையில் வைத்து இதுகுறித்து நான் எனது மனைவியுடன் விவாதித்தேன். அப்போது அவர், என்னால் நான்கு இலக்க எண்களைத்தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்றார். இதையடுத்தே நான்கு இலக்க எண்களை நான் உருவாக்கினேன் என்றார் ஷெப்பர்ட்.

தற்போது உலக அளவில் 10.7 லட்சம் ATM இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. இதற்குப் பிள்ளையார் சுழி போட்ட ஷெப்பர்ட் தற்போது மரணமடைந்துள்ளார்.

ஷெப்பர்டுக்கு மனைவி, 3 மகன்கள், 6 பேரப்பிள்ளைகள் உள்ளனர் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/atm.html"

Wednesday, 19 May 2010

* இந்தியா போகிறார் வார்ன் பப்ட் (Warren Buffet) ... முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு!

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வார்ன் பப்ட் (Warren Buffet) இந்தியாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

உலகின் பெரிய பணக்காரர்களில் முக்கியமானவர் வார்ன் பப்ட். பெரிய முதலீட்டாளர் இவர். பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம்தான் கோக கோலா கம்பெனியில் கணிசமான அளவு பங்குகளைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கு வெளியே வார்ன் பப்ட் முதலீடு செய்திருப்பது மிகக் குறைவுதான். அப்படிப்பட்டவர் முதல் முறையாக இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருவதாக பெர்க்ஷையர் ஹதாவேயின் செய்திக் குறிப்பு கூறுகிறது. இதுகுறித்து தனது நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக வார்ன் பப்ட்யும் உறுதிப்படுத்தியுள்ளார்.

வரும் மார்ச் மாதம் இந்தியாவுக்கு வருகிறார் வார்ன் பப்ட். இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில், "முதல் முறையாக இந்தியாவில் முதலீடு செய்ய வார்ன் பப்ட் திட்டமிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது இந்தியா. இந்த சூழலில் எந்த அளவு முதலீட்டை இந்தியாவும் அமெரிக்காவும் அனுமதிக்கும் என்று ஆராய்ந்து வருகிறார்..." என்று குறிப்பிட்டுள்ளது.

ஆசியாவில் மூன்று நாடுகளில் மட்டுமே வார்ன் பப்ட் முதலீடு செய்துள்ளார். தென் கொரியாவின் போஸ்கோ, சீனாவின் பிட் மற்றும் இஸ்ரேலில் மட்டுமே இவரது முதலீடுகள் உள்ளன.

இந்தியாவில் இன்ஸுரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்ய பெர்க்சயர் ஹத்வே விரும்புவதாக பப்ட் தெரிவித்துள்ளார்.

பெர்க்சயர் ஹத்வே மறு காப்பீட்டு வர்த்தகத்தை தலைமையேற்று நடத்துபவர் அஜீத் ஜெயின் என்ற இந்தியர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/warren-buffet.html"

Monday, 17 May 2010

* ஒரே மாதத்தில் அமெரிக்காவில் 290,000 வேலைவாய்ப்புக்கள்

வேலைவாய்ப்பு விஷயத்தில் மீண்டும் தன் பழைய பரபரப்புக்குத் திரும்புகிறது அமெரிக்கா .

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே 290,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

கடந்த நான்காண்டுகளில் ஆறுதலளிக்கும் முதல் செய்தி இதுவே என அமெரிக்கர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் வேலையின்மையின் அளவும் இரட்டை இலக்கத்திலிருந்து 9.9 சதவீதம் என ஒற்றை இலக்கத்துக்கு இறங்கி வந்துள்ளது.

உற்பத்தித் துறை, மருத்துவத் துறை என பல துறைகளில் இதுவரை 805,000 பேர் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளனர். கடந்த பிப்ரவரியில் 120,000 பேருக்கு வேலை அளிக்கப்பட்டது.

விரைவில் அமெரிக்க காங்கிரஸுக்கு தேர்தல் வரவிருப்பதால், வரும் மாதங்களில் அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் குறியாக உள்ளது ஒபாமா நிர்வாகம்.

அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பினாலும், நிறுவனங்கள் வேலைக்கு ஆளெடுப்பதில் தயக்கம் காட்டின. இப்போது நிலைமை நம்பிக்கை தரும் அளவுக்கு மேம்பட்டுள்ளதால், மீண்டும் அதிக அளவு ஆட்களை எடுக்க ஆரம்பித்துள்ளன. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/290000.html"

Wednesday, 12 May 2010

* பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களின் 20 நாள் 'மெகா வேலை நிறுத்தம்'

பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் 20 நாட்கள் மெகா ஸ்ட்ரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த வேலை நிறுத்தம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு குறித்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் சில வாரங்களுக்கு முன் இருமுறை வேலை நிறுத்தம் நடத்தினர்.இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது பிரிட்டிஷ் ஏர்வேஸ்.

முன்பு நடந்த வேலை நிறுத்ததில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். இதனை கைவிட வேண்டும் என்று கோரியும், நிறுத்தப்பட்டுள்ள பயணச் சலுகை உள்ளிட்ட சம்பள உயர்வுகளை உடனே தரக் கோரியும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்களின் அமைப்பான யுனைட் கோரியுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸில் உள்ள 12000 விமான ஊழியர்களில் 90 சதவிகிதத்தினர் இந்த யுனைட்டின் அங்கத்தினர்களே.


20 நாள் ஸ்ட்ரைக்குக்கான தேதிகளையும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

மே 18-22, மே 24-28, மே 30-ஜூன் 3 மற்றும் ஜூன் 5-9 என நான்கு கட்டங்களாக இந்த ஸ்ட்ரைக்கை நடத்த உள்ளனர் ஊழியர்கள்.

ஏற்கெனவே ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். இப்போது இந்த மெகா வேலை நிறுத்தம் நடந்தால், நஷ்டம் தாங்க முடியாத அளவுக்குப் போய்விடும் என்பதால், பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது நிர்வாகம். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/20.html"

Thursday, 6 May 2010

* MasterCard நிறுவனத் தலைவராக இந்தியாவின் அஜய் பங்கா!

மாஸ்டர் கார்டு(MasterCard) நிறுவனத்தின் CEO இந்தியாவைச் சேர்ந்த அஜய் பங்கா (Ajay Banga) வரும் ஜூலையில் பொறுப்பேற்க உள்ளார்.

புனே நகரைச் சேர்ந்த Ajay Banga, டெல்லியில் படித்தவர்.Indian Institute of Management, Ahmedabadஉயர் படிப்பு முடித்தவர்.

பொதுவாக இம்மாதிரி சர்வதேச நிறுவனப் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் வெளிநாட்டில் ஒரு பட்டமாவது பெற்றிருப்பார்கள். ஆனால் பங்கா முழுக்க முழுக்க இந்தியாவிலேயே படித்துப் பட்டம் பெற்றவர்.

நெஸ்லே(Nestle) நிறுவனத்தில் தனது கேரியரைத் துவக்கிய Ajay Banga, பின்னர் சிட்டி குரூப்பில் சேர்ந்தார். 2005 வரை சிட்டி குரூப்பில்(Citigroup) தான் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.

மாஸ்டர்கார்டில் தலைவர் மற்றும் CEO பொறுப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் சேர்ந்தார் அஜய் பங்கா.வருகிற ஜூலை 1ம் தேதி, மாஸ்டர்கார்டின் தற்போதைய CEO ராபர்ட் செலாண்டர் பதவி விலகுகிறார். அன்றே Ajay Banga பொறுப்பேற்கிறார்.

CEO பொறுப்பேற்ற பிறகும் மாஸ்டர்கார்டு தலைவர் பதவியில் இவர் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் பங்காவின் முன் இப்போதுள்ள ஒரே சவால், தங்களுக்கு சற்று முன்னே பயணிக்கும் விசா கார்டு நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளவேண்டும் என்பதே! submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/mastercard.html"

Wednesday, 5 May 2010

* 1 மில்லியன் ஐபேட்( i Pad) விற்று ஆப்பிள் சாதனை!

1 மில்லியன் ஐபேட்களை (கையடக்க கம்ப்யூட்டர்) விற்று சாதனை படைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

28 நாட்களி்ல் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனை இது.

ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் தயாரித்த ஐபாட்(i Pod) கருவி இந்த விற்பனை அளவை எட்ட 74 நாட்கள் தேவைப்பட்டன. ஆனால் இதில் மூன்றில் ஒரு பங்கு கால அளவுக்குள் 1 மில்லியன் ஐபேட்களை விற்றுள்ளது ஆப்பிள் என்கிறார் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

அரை அங்குல தடிமன் மற்றும் 1.5 பவுண்ட் எடை மட்டுமே கொண்ட ஐபேட்களுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கம்ப்யூட்டருக்கான அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் 12 மில்லியன் அளவுக்கு டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன. 1.5 மில்லியன் இ புத்தகங்கள் ( E-Books)விற்பனையாகியுள்ளன. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/1-i-pad.html"

Tuesday, 4 May 2010

* வர்த்தக உலா பகுதியில் என் கட்டுரை

இந்த வார வீரகேசரியில்(02-05-2010) வர்த்தக உலா பகுதியில் என் கட்டுரை பிரசுரமாகியுள்ளது!

மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய Apple

விபரங்களுக்கு படத்தை சொடுக்கி பெரிதாக்குங்கள்

என் தளத்தில் :-மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய ஆப்பிள்!
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/blog-post.html"