பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் 20 நாட்கள் மெகா ஸ்ட்ரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த வேலை நிறுத்தம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு குறித்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் சில வாரங்களுக்கு முன் இருமுறை வேலை நிறுத்தம் நடத்தினர்.இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது பிரிட்டிஷ் ஏர்வேஸ்.
முன்பு நடந்த வேலை நிறுத்ததில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். இதனை கைவிட வேண்டும் என்று கோரியும், நிறுத்தப்பட்டுள்ள பயணச் சலுகை உள்ளிட்ட சம்பள உயர்வுகளை உடனே தரக் கோரியும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்களின் அமைப்பான யுனைட் கோரியுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸில் உள்ள 12000 விமான ஊழியர்களில் 90 சதவிகிதத்தினர் இந்த யுனைட்டின் அங்கத்தினர்களே.
20 நாள் ஸ்ட்ரைக்குக்கான தேதிகளையும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
மே 18-22, மே 24-28, மே 30-ஜூன் 3 மற்றும் ஜூன் 5-9 என நான்கு கட்டங்களாக இந்த ஸ்ட்ரைக்கை நடத்த உள்ளனர் ஊழியர்கள்.
ஏற்கெனவே ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். இப்போது இந்த மெகா வேலை நிறுத்தம் நடந்தால், நஷ்டம் தாங்க முடியாத அளவுக்குப் போய்விடும் என்பதால், பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது நிர்வாகம்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/20.html"
No comments:
Post a Comment