இலண்டனிலும் வேறு பல நகரங்களிலும் ஐபேட்(iPad) வாங்குவதற்காக பல மணி நேரம் முன்னதாகவே வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். இலண்டனில் இன்று காலை 8 மணிக்குத் திறந்த ஆப்பிள் கடைக்கு நேற்று நண்பகலில் இருந்தே மக்கள் வரிசையாகக் காத்திருக்கக்த் தொடங்கிவிட்டனர்.
பிரபல நகச்சுவை நடிகர் Stephen Fry முன்கூட்டியே பதிவு செய்து ஒரு ஐபேட் வாங்கினார். ஏற்கனவே அமெரிக்காவில் ஒன்றை அவர் வாங்கியிருந்தார். இப்போது மீண்டும் வேறு ஒரு மாதிரி ஐபேட் வாங்கியுள்ளார். இதை என்ன செய்யப் போகிறீர்கள் என்று நிரூபர்கள் கேட்டதிற்கு நான் இதைக் கொண்டு போய் தடவப் போகிறேன் என்றார். ஆம் தொடு திரைத் தொழில் நுட்பம் தடவுவதன் மூலம் இயங்கும். அதை அவர் அப்படி நகைச் சுவையாகச் சொன்னார்.
ஐ-பொட், ஐ-போன், ஐபேட் ஆகியவற்றை வெற்றீகரமாகச் சந்தைப் படுத்தியதால் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பெரும் பெறுமதி மதிப்புயர்வைப் பெற்றுள்ளன. கடந்த் 10 ஆண்டுகளில் அவற்றின் மதிப்பு 10 மடங்கு உயர்ந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளின் மொத்த மதிப்பு இப்போது $222bn (£152.5bn) ஆக உயர்ந்துள்ளது. இதனால்தொழில்நுட்ப நிறுவனங்களின் பெறுமதி வரிசையில் இதுவரை முதலாம் இடத்தில் இருந்த மைக்ரோசொfர் இப்போது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப் பட்டு ஆப்பிள் முதலாம் இடத்தை அடைந்துள்ளது. மைக்ரோசொfரின் சந்தை மதிப்பு $219bn (£150.5 bn).
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/ipad.html"
2 comments:
எனக்கும் ஒன்று வாங்கி வையுங்க அண்ணே..
கடுப்ப கிளப்பாதிங்க பாஸ் ipod வாங்கவே வக்கில்ல இதில பேட் ஆப்பிள் கொம்பனில இடி விழ சும்மா இருக்கமாட்டங்களா இவங்கள் பாவம் மைக்கிரோசொப்ற் என்ன புதுசா செய்தாலும் இலவசமா தந்துடுது ஹீஹீ நாங்க களவெடுத்திடுவோமில்ல...
:(...
ஐபேட் ஒன்னு களவெடுக்க முடியுமா பாஸ்...
Post a Comment