Wednesday 19 May 2010

* இந்தியா போகிறார் வார்ன் பப்ட் (Warren Buffet) ... முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு!

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வார்ன் பப்ட் (Warren Buffet) இந்தியாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

உலகின் பெரிய பணக்காரர்களில் முக்கியமானவர் வார்ன் பப்ட். பெரிய முதலீட்டாளர் இவர். பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம்தான் கோக கோலா கம்பெனியில் கணிசமான அளவு பங்குகளைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கு வெளியே வார்ன் பப்ட் முதலீடு செய்திருப்பது மிகக் குறைவுதான். அப்படிப்பட்டவர் முதல் முறையாக இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருவதாக பெர்க்ஷையர் ஹதாவேயின் செய்திக் குறிப்பு கூறுகிறது. இதுகுறித்து தனது நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக வார்ன் பப்ட்யும் உறுதிப்படுத்தியுள்ளார்.

வரும் மார்ச் மாதம் இந்தியாவுக்கு வருகிறார் வார்ன் பப்ட். இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில், "முதல் முறையாக இந்தியாவில் முதலீடு செய்ய வார்ன் பப்ட் திட்டமிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது இந்தியா. இந்த சூழலில் எந்த அளவு முதலீட்டை இந்தியாவும் அமெரிக்காவும் அனுமதிக்கும் என்று ஆராய்ந்து வருகிறார்..." என்று குறிப்பிட்டுள்ளது.

ஆசியாவில் மூன்று நாடுகளில் மட்டுமே வார்ன் பப்ட் முதலீடு செய்துள்ளார். தென் கொரியாவின் போஸ்கோ, சீனாவின் பிட் மற்றும் இஸ்ரேலில் மட்டுமே இவரது முதலீடுகள் உள்ளன.

இந்தியாவில் இன்ஸுரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்ய பெர்க்சயர் ஹத்வே விரும்புவதாக பப்ட் தெரிவித்துள்ளார்.

பெர்க்சயர் ஹத்வே மறு காப்பீட்டு வர்த்தகத்தை தலைமையேற்று நடத்துபவர் அஜீத் ஜெயின் என்ற இந்தியர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/warren-buffet.html"

No comments: