Monday 24 May 2010

*இந்தியாவுக்கு தனது முக்கியமான செயல்பாடுகளை பிரிட்டனிலிருந்து மாற்றியது Barclays

பிரிட்டனில் புதிய கன்சர்வேடிவ் அரசு பதவியேற்ற கையோடு, வங்கித் துறை கட்டுப்பாடுகள் மற்றும் வரி விதிப்பை தீவிரமாக்கியுள்ளது. இதனால் பிரிட்டனின் பிரபலமான பார்க்லேஸ்( Barclays) வங்கி, தனது செயல்பாடுகளை இந்தியாவுக்கு மாற்றிக் கொள்ளத் துவங்கியுள்ளது.

முதல் கட்டமாக, பிரிட்டனின் நார்த்தாம்ப்டன் நகர அலுவலகத்திலிருந்து 140 முக்கியப் பணிகளை இந்தியாவுக்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது பார்க்லேஸ்.

இதுகுறித்து பார்க்லேஸ் வங்கியின் CEO ஜான் வார்லி கூறுகையில், "பிரிட்டனில், குறிப்பாக லண்டனில் அதிகரிக்கும் வரி விதிப்புகள் மற்றும் நெருக்கடிகள் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.இத்தகைய வரிவிதிப்புகள் லண்டனை கடும் பாதிப்புக்குள்ளாக்கும்.

இந்தியா எங்களுக்கு வசதியான நாடாக உள்ளது.ஏற்கெனவே இந்தியர்களுக்கு சேவையைத் தொடங்கியுள்ளோம். பல நாடுகளில் NRI பிரிவைக் கூடத் துவக்கியுள்ளோம்.

இந்தியாவில் எமது நடவடிக்கையை அதிகரிக்கக் காரணம் சிக்கனம்தான் என்றாலும், இந்தியாவையே இனி சர்வதேச சேவை மையமாக்க மாற்ற விரும்புகிறோம்", என்றார். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/barclays.html"

2 comments:

balavasakan said...

barclays ஒரு வங்கி எண்டு எனக்கு இன்னிக்கு தான் தெரியும் நன்றி அச்சு சார்...ஹி..ஹி..

Atchuthan Srirangan said...

என்ன நக்கலா??

பாலா உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி...