Friday 28 February 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 28-02-2014

இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமை  இன்று 1.15 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.15 சதவீதம் (67.50 புள்ளி) உயர்ந்து 5,940.31புள்ளியிலும், S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 1.09 சதவீதம் (34.86 புள்ளி) உயர்ந்து 3,223.66புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 851.64 மில்லியன் ரூபாய்.


வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 43.38 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 242.65 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 286.03 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய சந்தை நடவடிக்கையின் முடிவில் விலை அதிகரிப்பை வெளிப்படுத்திய கம்பனிகள் 153 ஆகவும் , விலை சரிவை வெளிப்படுத்திய கம்பனிகள்46ஆகவும் காணப்பட்டன.


அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 28.02.2014





S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 28.02.2014





இன்று மொத்தமாக 6,254 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 5,818 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 436 ஆகவும் பதிவாகியிருந்தன.

இன்று கைமாறிய மொத்த பங்குகளின் எண்ணிக்கை 33,187,400 ஆகவும், இதில் கைமாறிய உள்நாட்டு பங்குகளின் எண்ணிக்கை 27,057,557 ஆகவும் கைமாறிய வெளிநாட்டு பங்குகளின் எண்ணிக்கை 3,905,838 ஆகவும் பதிவாகியிருந்தன.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/02/28-02-2014.html"

No comments: