பிரிட்டிஷ் பங்குச் சந்தையை மோசடி செய்த குற்றத்துக்காக வெளிநாடு வாழ் இந்தியர்கள் இருவருக்கு அபராதமும் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஈடுபடத் தடையும் விதித்துள்ளது பிரிட்டன்.
சமீர் பட்டேல் மற்றும் ராபின் சாப்ரா ஆகிய இருவரும் லண்டனில் வசிக்கும் இந்திய முதலீட்டாளர்கள். பிரிட்டிஷ் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இவர்களில் ராபின் சப்ரா, எவால்யுவேஷன் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தில் அனலிஸ்டாக பணியாற்றி வந்தார். அப்போது பங்குச் சந்தை மற்றும் பங்குகள் பற்றிய ரகசிய விவரங்களை தனது நண்பரான சமிர் பட்டேலுக்கு அவ்வப்போது சொல்லி வந்துள்ளார். 3 சீஸன்களில் இதுபோல் செய்து, ஏராளமான லாபத்தைப் பெற்றுள்ளனர் இருவரும்.
இந்த விவரங்களை பிரிட்டிஷ் நிதி சேவை முகமை கண்டுபிடித்து, இருவருக்கும் முறையே £180,541 மற்றும் £ 95,000 பவுண்டுகள் அபராதமாக விதித்துள்ளது.மேலும் சமீர் பட்டேல், ராபின் சத்தா இருவருமே தொடர்ந்து பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடத் தடையும் விதித்துள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/blog-post_19.html"
No comments:
Post a Comment