பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் ஸ்பெயினின் ஐபீரியா நிறுவனமும் இணைகின்றன.
இதன் மூலம் உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் - ஐபீரியா உருவெடுத்துள்ளது.
இந்த இணைப்புக்கான முயற்சி கடந்த ஆண்டே துவங்கிவிட்டது. அனைத்து நடைமுறைகளும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இணைப்பின் மூலம் 400 மில்லியன் யூரோ சேமிக்கப்படும் என்றும், இது பங்குதாரர்கள், பயணிகள் மற்றும் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் திட்டம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இந்த இணைப்புக்குப் பின் புதிதாக நிறுவனம் உருவாக்கப்படாது என்றும், ஏற்கெனவே உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஐபீரியா அவற்றின் சொந்தப் பெயரிலேயே இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த இணைப்புக்குப் பிறகு 408 விமானங்களுடன் 200 விமான நிலையங்களில் 58 மில்லியன் பயணிகளுடன் இயங்கும் பெரிய விமான போக்குவரத்து நிறுவனமாக இது திகழும்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்குகிறது. மேலும் நிறுவனத்தின் ஊழியர்கள் வேறு தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நேரத்தில் இந்த இணைப்பு பெரும் இழப்பிலிருந்து காக்கும் என நம்புகிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/blog-post_21.html"
No comments:
Post a Comment