Tuesday 3 August 2010

* அமெரிக்காவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் அளவுக்கு வளர்ச்சி வேகம் இல்லை

அமெரிக்காவில் தொடர்ந்து வரும் வேலையின்மைக்குக் காரணம் அங்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய வளர்ச்சி இல்லாததே என்று கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 9.5 சதவீதமாக குறைந்துள்ளது என்றாலும், இதற்குக் காரணம், வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது அல்ல என்றும், வேலை வாய்ப்புக் கோரி பதிவு செய்திருந்த 5 இலட்சம் பேர் வேலை தேடும் முயற்சியைக் கைவிட்டுவிட்டதே என்று கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் மட்டும் புதிதாக 83,000 பேருக்கு பணி வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் வேலையின்மையைப் போக்க வேண்டுமெனில் பல லட்சக்கணக்கான பணி வாய்ப்புகள் ஒவ்வொரு மாதமும் உருவாக வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை.வீட்டுக் கடன் சிக்கலால் பாதிப்பிற்குள்ளான பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அமெரிக்க அரசு செய்த உதவிகள் பெரிய அளவிற்கு வளர்ச்சியை உறுதி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

பொருளாதாரப் பின்னடைவி்ற்குப் பிறகு இரண்டாவது ஆண்டின் இரண்டாவது அரையாண்டு துவங்கியுள்ள நிலையில், அமெரிக்க அரசு செய்த ஊக்கமளிப்பு நிதியுதவிகளின் தாக்கம் குறையத் துவங்கியுள்ளது அந்நாட்டில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/blog-post.html"

No comments: