இந்தியாவில் சென்னையைப் பிரதான தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கி யாழ்ப்பாணத்தில் அதன் கிளை ஒன்றை நிறுவ உள்ளது.ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த இந்தியன் வங்கி இயல்பற்ற சூழ்நிலை காரணமாக தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டது
இலங்கையில் இடம்பெற்று முடிந்த உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த அகதிகளுக்கான இந்தியாவின் உதவிகள் இவ்வங்கிக் கிளை மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிய வருகின்றது.
இதேவேளை, ஏற்கனவே கொழும்பில் கிளையை கொண்டுள்ள இந்தியன் வங்கியின் கிளைகளை அடுத்த இரண்டு வருட காலத்தில் இலங்கையின் ஏனைய இடங்களிலும் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஸின் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கிளை தொடங்கப்பட்ட பிறகு கண்டியில் மேலும் ஒரு கிளை தொடங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே போல இந்தோனேசியாவில் மேலும் ஒரு பிரதிநிதி அலுவலகம் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/blog-post_10.html"
No comments:
Post a Comment