Thursday, 27 May 2010

* அமெரிக்காவில் 5 மாதங்களில் 73 வங்கிகள் மூடப்பட்டுள்ளன

அமெரிக்காவில் பொருளாதார சீர்குலைவு இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. கடந்த ஐந்து மாதங்களில் 73 வங்கிகள் அங்கு மூடப்பட்டுள்ளன. மேலும் பல வங்கிகள் வரும் நாட்களில் திவாலாகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மாதத்திற்கு சராசரியாக 14 அமெரிக்க வங்கிகள் திவாலாகி வருகின்றனவாம். உலக அளவில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டதிலிருந்து இதுவரை அமெரிக்காவில் 775 வங்கிகள் திவாலாகி மூடப்பட்டுள்ளனவாம்.

இந்த நிலை மேலும் தொடரும், மேலும் பல வங்கிகள் சீர்குலையும் என அமெரிக்க பெடர் டெபாசிட் இன்சூரன்ஸ் கழகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் 73 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அனைத்துமே நடுத்தர மற்றும் சிறிய வங்கிகள்.

மே மாதம் மட்டும் 9 வங்கிகளை அமெரிக்காவில் மூடியுள்ளனர். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/5-73.html"

Monday, 24 May 2010

*இந்தியாவுக்கு தனது முக்கியமான செயல்பாடுகளை பிரிட்டனிலிருந்து மாற்றியது Barclays

பிரிட்டனில் புதிய கன்சர்வேடிவ் அரசு பதவியேற்ற கையோடு, வங்கித் துறை கட்டுப்பாடுகள் மற்றும் வரி விதிப்பை தீவிரமாக்கியுள்ளது. இதனால் பிரிட்டனின் பிரபலமான பார்க்லேஸ்( Barclays) வங்கி, தனது செயல்பாடுகளை இந்தியாவுக்கு மாற்றிக் கொள்ளத் துவங்கியுள்ளது.

முதல் கட்டமாக, பிரிட்டனின் நார்த்தாம்ப்டன் நகர அலுவலகத்திலிருந்து 140 முக்கியப் பணிகளை இந்தியாவுக்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது பார்க்லேஸ்.

இதுகுறித்து பார்க்லேஸ் வங்கியின் CEO ஜான் வார்லி கூறுகையில், "பிரிட்டனில், குறிப்பாக லண்டனில் அதிகரிக்கும் வரி விதிப்புகள் மற்றும் நெருக்கடிகள் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.இத்தகைய வரிவிதிப்புகள் லண்டனை கடும் பாதிப்புக்குள்ளாக்கும்.

இந்தியா எங்களுக்கு வசதியான நாடாக உள்ளது.ஏற்கெனவே இந்தியர்களுக்கு சேவையைத் தொடங்கியுள்ளோம். பல நாடுகளில் NRI பிரிவைக் கூடத் துவக்கியுள்ளோம்.

இந்தியாவில் எமது நடவடிக்கையை அதிகரிக்கக் காரணம் சிக்கனம்தான் என்றாலும், இந்தியாவையே இனி சர்வதேச சேவை மையமாக்க மாற்ற விரும்புகிறோம்", என்றார். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/barclays.html"

Friday, 21 May 2010

* ATM தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் மரணம்

வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும் முறையை மகா எளிமையாக்கியுள்ள ஏடிஎம் மெஷினைக் கண்டுபிடித்தவரான ஜான் ஷெப்பர்ட் பேரோன்(John Shepherd-Barron) ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 84.

இந்த ஷெப்பர்ட் தான் உலகின் முதலாவது ATM இயந்திரத்தைக் கண்டுபிடித்தவராவார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் இவர் அங்குள்ள ரைமோர் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததாக அவரது இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்யும் அலிஸ்டைர் ரின்ட் கூறினார்.

60ம் ஆண்டுகளில் ஒருமுறை தான் கணக்கு வைத்திருந்த வங்கிக்குப் போயிருந்தார் ஷெப்பர்ட். ஆனால் வங்கி பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதையடுத்து தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை உருவாக்குவேன் என்று அறிவித்தார் ஷெப்பர்ட். சொன்னதோடு நிற்காமல் அந்த இயத்திரத்தையும் கண்டுபிடித்தார். தானியங்கி சாக்லேட் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த பணம் தரும் ATM இயந்திரத்தை அவர் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து 2007ல் பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், எனது பணத்தையே என்னால் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தானியங்கி சாக்லேட் தரும் இயந்திரத்தைப் பார்த்தேன். அதை அடிப்படையாக வைத்து இந்த ATM இயந்திரத்தை உருவாக்கினேன் என்றார்.

ஷெப்பர்ட் கண்டுபிடித்த முதலாவது தானியங்கி பணம் தரும் இயந்திரம், வடக்கு லண்டன் புறநகர்ப் பகுதியில், பர்க்லேஸ் வங்கிகிளையில் 1967ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி நிறுவப்பட்டது. இதுதான் உலகின் முதலாவது ATM இயந்திரமாகும்.

அப்போது பிளாஸ்டிக் டெபிட் கார்ட் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து ஷெப்பர்ட் கண்டுபிடித்த மெஷினில், வேதிப் பொருள் தடவப்பட்ட சிறப்பு கார்டுகள் பயன்படுத்தப்பட்டன.

மேலும் இதை பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்களுக்கு ஆறு இலக்கம் கொண்ட அடையாள எண்களை உருவாக்கினார் ஷெப்பர்ட். ஆனால் ஆறு எண்ணாக இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு சிரமமாக இருக்கும் என ஷெப்பர்டின் மனைவி கரோலின் தெரிவித்ததால் அதை நான்கு இலக்க எண்ணாக மாற்றினார் ஷெப்பர்ட்.

சமையலறையில் வைத்து இதுகுறித்து நான் எனது மனைவியுடன் விவாதித்தேன். அப்போது அவர், என்னால் நான்கு இலக்க எண்களைத்தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்றார். இதையடுத்தே நான்கு இலக்க எண்களை நான் உருவாக்கினேன் என்றார் ஷெப்பர்ட்.

தற்போது உலக அளவில் 10.7 லட்சம் ATM இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. இதற்குப் பிள்ளையார் சுழி போட்ட ஷெப்பர்ட் தற்போது மரணமடைந்துள்ளார்.

ஷெப்பர்டுக்கு மனைவி, 3 மகன்கள், 6 பேரப்பிள்ளைகள் உள்ளனர் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/atm.html"