பாதுகாப்பு குறைபாடுகளுக்காக டொயோட்டா மோட்டார் நிறுவனத்துக்கு 16.4 மில்லியன் டொலர் அபராதம் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா, தனது கார்களில் பெரும் பாதுகாப்பு குறைபாடு இருப்பது தெரிந்தும் அதை வாடிக்கையாளர்களுக்கு விற்றுள்ளதாக அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
அதற்கேற்ப, தான் உற்பத்தி செய்து விற்ற 23 லட்சம் கார்களை சமீபத்தில் திரும்பப் பெறுவதாக அறிவித்தது டொயோட்டா. மேலும் இந்தக் கார்களில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதையும் ஒப்புக் கொண்டது.
இதைத் தொடர்ந்து குறைபாடுள்ள கார்களை விற்பனை செய்ததற்காக டொயோட்டா நிறுவனத்துக்கு 16.4 மில்லியன் டொலர் அபராதம் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உலகில் ஒரு கார் உற்பத்தி நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அபராதம் இதுவே. இதற்கு முன் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 1 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/164.html"
2 comments:
ஆகா..அச்சு சார் என்ன டெம்பிளேட்டு பிரமாதமா இருக்கு பொறுங்க பதிவ வாச்சிட்டு வாறன்...!!
அபிடியா பாவம் டொயாட்டா அடிமேல அடி அடிக்கிறாங்கள்..!!
Post a Comment