பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்!
Tuesday, 13 April 2010
* துபாயில் வாடகை 5 சதவீதம் வீழ்ச்சி
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் துபாயில் வாடகை 5 சதவிகித அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
கிளட்டன்ஸ் என்ற துபாய் நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், 2008-ம் ஆண்டிலிருந்து துபாய் ரியல் எஸ்டேட் மார்க்கெட் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகவும், இதன் அளவு 45 சதவிகிதத்தை எட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வணிக மற்றும் குடியிருப்பு வாடகைகளில் 5 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கிளட்டன் தெரவித்துள்ளது.
அதேபோல, நிலம் மற்றும் கட்டடங்கள் விற்பனையிலும் 2.9 சதவிகித வீழ்ச்சி காணப்படுகிறதாம். இரண்டாம் காலாண்டில் மேலும் பல புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்பதால் இந்த நிலை இன்னும் மோசமாகும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/5.html"
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment