Saturday 6 February 2010

* இலங்கைக்கான ஜி.எஸ்.பி.(GSP+) வரிச்சலுகையை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

இலங்கைக்கான ஆடை ஏற்றுமதி கோட்டா ஜி.எஸ்.பி.(GSP+) சலுகையை ரத்துச்செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் உத்தியோகபூர்வ முன்னெடுப்புகள், இந்த மாத இறுதியில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனினும் இந்த தடை 6 மாதத்திற்கு பின்னரே அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

விசாரணை அறிக்கைகளின்படி GSP+ சலுகையை பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்குகளை இலங்கை நிறைவேற்றவில்லை என தெரியவந்துள்ளதாக ராஜதந்திர தரப்புகள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை கோட்டா சலுகை வறிய நிலையில் உள்ள 16 நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இலங்கைக்கான GSP+ ரத்து தீர்மானம் கடந்த வாரம் எடுக்கப்பட்டது.

இந்தநிலையில் இலங்கைக்கு வர்த்தக சலுகைகளை நிறுத்துவதற்காக கடந்த வாரம் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தை, பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி ஒன்றுகூடும் ஐரோப்பிய நிதியமைச்சர்கள் அங்கீகரிக்கவுள்ளனர்.

அதேநேரம் இந்த முடிவை திரும்பப்பெறுவதற்கு கொழும்புக்கு வாய்ப்பு ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக ராஜதந்திர தரப்புகள் குறிப்பிட்டுள்ளன. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/gsp.html"

3 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

:( an important article on gsp +

balavasakan said...

அதேநேரம் இந்த முடிவை திரும்பப்பெறுவதற்கு கொழும்புக்கு வாய்ப்பு ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக ராஜதந்திர தரப்புகள் குறிப்பிட்டுள்ளன

##இதெல்லாம் சும்மா பீலா... வெறும் பீலா

Suganthan said...

வெற்றி நாயகன் ராஜபக்ஸ இதை பந்தாடி விடுவார்?.....
இதைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை
எல்லாம் வெறும் நாடகம்..
ha..haha......