Wednesday, 17 February 2010

* இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. ( GSP+ ) வரிச்சலுகை ரத்து

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி. ( GSP+ ) வரிச்சலுகையை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தகவல் பிரஸல்ஸில் உள்ள இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மூலமாக இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் ஆறுமாத காலப் பகுதியில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான குறைபாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜி.எஸ்.பி. ( GSP+ ) திட்டத்தின் கீழ், ஐரோப்பாவுக்கு ஆடைகள், மீன் போன்றவற்றை சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு மட்டும், சுமார் 1.24 பில்லியன் யூரோக்கள் பெறுமான பொருட்கள் இலங்கையிலிருந்து ஐராப்பிய ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மீது இறக்குமதி தீர்வை விதித்திருந்தால் அதன் மூலமாக 78 மில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடைத்திருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த திட்டம் வளர்முக நாடுகளில் நீடிக்கத்தக்க வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று.


தற்போது ஜி.எஸ்.பி. ( GSP+ ) நிறுத்தப்படுவதானது இலங்கையின் புடவைக் கைத்தொழில் துறையை பாரியளவில் பாதிக்கும் என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் தொழில்களை இழக்க நேரிடும்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் உரியவகையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தடை அமுலுக்கு வருகிறது.


submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/gsp_17.html"

3 comments:

archchana said...

இன்னும் என்னென்ன தடையிருக்கோ அத்தனையும் அமுல் படுத்தவேண்டும்.
(நாம் பெற்ற துன்பம் பெறுக ....ளும்)

Atchuthan Srirangan said...

// archchana said...

இன்னும் என்னென்ன தடையிருக்கோ அத்தனையும் அமுல் படுத்தவேண்டும்.
(நாம் பெற்ற துன்பம் பெறுக ....ளும்)//


அர்ச்சனா ஏன் இந்த கொலை வெறி ????

அர்ச்சனா உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

ஜோதிஜி said...

அர்ச்சனா சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. திருப்பூரில் பாதி பேர்கள் அங்கே போய் உட்கார்ந்து டேரா போட்டதும், சிங்களர்களை திருப்பூருக்கு கொண்டு வந்து அமர்த்த அவர்களும் மிகத் தெளிவாக உள்ளே இருக்கும் பெரும்பான்மையான தமிழர்களை வேலையை விட்டு நீக்கும் அளவிற்கு தைரியம் பெற்றவர்களுக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் எப்படியாவதும் ஏதோ ஒரு வகையில் தண்டணை கொடுக்க வேண்டும் என்பதை ஏற்றுமதியாளராக, தமிழர்களை அழிந்து கொண்டுருக்கும் இனமாக மாற்றிய சார்பாளர்களை வேறு எப்படி திருத்த முடியும்?