Tuesday, 3 August 2010

* பிரித்தானியர்கள் ஒவ்வொருவரும் £65,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் கடனாளிகள்

பிரித்தானியாவில் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் மொத்த கடன் சுமையை பிரித்துப் பார்க்கும் போது நாட்டில் இருக்கக்கூடிய ஆண், பெண், குழந்தைகள் என ஒவ்வொருவர் மீதும் 65,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் கடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான விபரங்களை தேசிய புள்ளி விபர அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. இதன் படி நாட்டிற்கு இருக்கும் மொத்த கடன் தொகை மட்டும் 4 ட்ரில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் என கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட ரீதியில் ஆய்வாளர்கள் கணித்து கூறிய தொகையை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். சராசரியாக பார்க்கப்போனால் ஒவ்வொரு குடும்பமும் இந்த பெருங்கடனை தீர்க்க ஐந்து வருடம் உழைக்க வேண்டியதிருக்கும்.

வரிப் பாக்கித் தொகைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக ஏற்படும் ஓய்வூதிய இழப்பீடு, அரசு ஓய்வூதிய திட்டங்கள் , தனியார் நிதி நிறுவனங்களில் தொழிலாளர்கள் பெற்றிருக்கும் கடன் தொகை, பொருளாதார சீரழிவால் முடங்கிப் போன வங்கிகளுக்காக செலவழிக்கப்பட்ட தொகைகள் இவை போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டே இந்த இறுதி புள்ளி விபரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய புள்ளி விபர அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசு சொத்துக்களின் மதிப்புக்கள், பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்புக்கள் அனைத்தும் முறைப்படி கணக்கிடப்பட்டு மொத்தமாக வந்த தொகையிலிருந்து கழிக்கப்பட்ட பின்னரே இந்த 4 ட்ரில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் பெறப்பட்டுள்ளது என்றும் புள்ளி விபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது சிட்டி திங் பேங்க் என்ற பொருளாதார ஆய்வு மையம் கடந்த வாரம் வெளியிட்ட 2 ட்ரில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் என்ற மதிப்பை விட இரட்டிப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/65000.html"

1 comment:

Atchuthan Srirangan said...

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=25713