Monday, 26 July 2010

* புதிய உத்தியை கையாண்டு வேலையை பெற்ற பிரித்தானிய இளைஞர்

எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு தனி தான். " தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள் " என்ற வாசகம் அடங்கிய பலகையுடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலதிபர்கள் அதிகம் பயணிக்கும் சாலையில் நின்ற வேலையில்லா இளைஞர் ஒருவர் நின்ற இடத்திலேயே பணி நியமனத்தை பெற்றுள்ளார்.

இரண்டு வருடங்களாக வேலையின்றி அரசு கொடுக்கும் நன்மைகளைப் பெற்று வாழ்ந்து வந்த பிரித்தானிய இளைஞர் 23 வயதான மார்க் வீல்டன். அரசு அளிக்கும் நன்மைகளிலேயே வாழத் தொடர விரும்பாத இவர் நேற்று புதிய உத்தி ஒன்றை கடைப்பிடித்தார். பலரும் பயணிக்கக் கூடிய சாலையில் " தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள் " என்ற வாசகம் அடங்கிய பலகையுடன் தன்னைத்தானே விளம்பரம் செய்து கொண்டார்.

மிக வேகமான பணி நேரத்தில் அந்த சாலையில் சென்ற அனைத்து வாகன ஓட்டிகளும் இதைக் கவனித்தனர். மழையையும் பொருட்படுத்தாது அந்த இளைஞர் நின்றது அனைவராலும் பார்க்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்த பின் அந்த வழியே வாகனத்தில் சென்ற மரவேலைகள் தொடர்பான நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் மார்க் வீல்டனிடம் நேர்காணல் நடத்தி 20 நிமிடங்களுக்குப் பின் அவருக்கு பணி நியமனமும் அளித்தார். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_26.html"

No comments: