பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் செலவீனக் குறைப்புக்களும்
,வேலையிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.
காவல்துறையில் அதிகப்படியான செலவீனக் குறைப்பு இங்கிலாந்திலும் வேல்ஸிலும் குற்றங்கள் அதிகம் பெருகவே வழி வகுக்கும் எனத் தலைமை காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசு துறைகளையும் போலவே காவல்துறைக்கு நிதி அளித்து வரும் உள்துறையிலும் 25 சதவீத செலவீனக் குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
காவல் துறையில் அதிகாரிகளும், காவலர்களும் பணியாற்றும் விதத்தை மாற்றியமைப்பதன் மூலம் 12 சதவீத நிதியை சேமிக்க முடியும் என்றும் 25 சதவீத குறைப்பு என்பது மிகவும் அதிகப்படியானதால் காவலர்கள் திறமையுடன் பணியாற்ற முடியாத சூழல்கள் ஏற்படுவதோடு குற்றங்கள் பெருகும் என எச்சரித்துள்ளார் சர் டெனிஸ் ஒ கொன்னோர்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயம் என்பதால் அரசும் , உள்துறை அமைச்சகமும் இணைந்து காவல்துறையில் செலவை குறைப்பதை பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_23.html"
No comments:
Post a Comment