Tuesday, 20 July 2010

* பிரித்தானியாவில் வங்கிகளாக செயல்பட உள்ள தபாலகங்கள்

பிரித்தானியாவின் இயந்திரமயமான வாழ்க்கைக்கு இடையே வங்கிகளுக்கு சென்றால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தபால் நிலையங்களும் இனிமேல் சிறிய வங்கிகளாக செயல்படும் என்ற அரசின் அறிவிப்பு மக்களுக்கு சிறிது நிம்மதியை கொடுத்துள்ளது.

பிரித்தானியாவில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் எவரும் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் தங்கள் அடிப்படை கொடுக்கல் வாங்கல் தேவைகளுக்கு தபால் நிலையங்களையும் பயன்படுத்தலாம் என பிரித்தானிய அரசு இன்று அறிவித்துள்ளது.வங்கியிலிருந்து பணம் எடுப்பது, பாக்கித்தொகையை சரிபார்ப்பது, காசோலைகளுக்கு பணம் செலுத்துவது உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் இதில் அடங்கும். நடப்பு கணக்கு வைத்திருக்கும் அனைவருமே நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களையும் பயன்படுத்தலாம் என தபால் விவகார அமைச்சர் எட்வர்ட் டவே தெரிவித்தார்.

அதிகப்படியான மக்கள் தபால் நிலையங்களை பயன்படுத்தும் போது தபால் நிலையங்களின் சேவைகளும் அதிகரிப்பதுடன் மக்களின் நேர விரயமும் இதனால் குறையும் என நம்புவதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார். இந்த முறையை நாட்டில் உள்ள பிரபல வங்கிகள் வரவேற்றுள்ளன. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_20.html"