Thursday 8 July 2010

* நிதி பற்றாக்குறையை குறைக்க G 20 நாடுகள் கூட்டத்தில் முடிவு

உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவில் இருந்து நிறுவனங்களைக் காப்பாற்ற அளிக்கப்பட்ட நிதிகளைத் திரும்பப் பெற்று 3 ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறையை பாதியாகக் குறைக்க G 20 நாடுகள் மாநாடு ஒப்புக் கொண்டுள்ளது.

பொருளாதாரப் பின்னடைவால் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொண்ட நிறுவனங்களைக் காப்பாற்ற அளிக்கப்பட்ட நிதியை குறுகிய காலத்தில் திரும்பப்பெற்றால் அது மீண்டும் சிக்கலை உருவாக்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையிலும், நிதி நிலையை மேம்படுத்த பற்றாக்குறையை பாதியாகக் குறைக்க வளர்ந்த நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பற்றாக்குறையை பாதியாகக் குறைப்பது தொடர்பான இந்த உறுதி மொழி ஜி 20 நாடுகள் மாநாட்டின் இறுதி அறிக்கையில் அளிக்கப்படும். மூன்றாண்டுகளில் நிதிப் பற்றாக்குறைத்து அதன் மூலம் கடன் சிக்கலால் ஏற்பட்ட நிதி நிலை சமமின்மையை சீர்படுத்துவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

லங்கா சிறி இணையத்தளத்தில் (உலகச்செய்திகள்):- நிதி பற்றாக்குறையை குறைக்க G 20 நாடுகள் கூட்டத்தில் முடிவு submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/g-20.html"

No comments: