Monday 5 July 2010

* ஆசிய சந்தையில் மசகுஎண்ணெயின் விலை குறைந்தது

அமெரிக்க பங்குச் சந்தை சரிவைத் தொடர்ந்து மசகுஎண்ணெயின் விலை ஆசிய சந்தையில் மேலும் சரிந்துள்ளது.ஆசிய சந்தையில் மசகுஎண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 75 டொலருக்கும் கீழ் குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் மசகுஎண்ணெய்க்கான தேவையில் ஏற்பட்ட பெரும் சரிவுதான் இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் டோக்கியோ, நியூயார்க் பங்குச் சந்தைகளில் சரிவு காணப்படுவதாலும் சர்வதேச சந்தையில் மசகுஎண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த நிலை நீண்ட நாள் நீடிக்காது என்றும், இந்தியா, சீனா போன்ற நாடுகளின் மசகுஎண்ணெய் தேவை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்ப்பதால், நம்பிக்கையுடன் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

லங்கா சிறி இணையத்தளத்தில் (உலகச்செய்திகள்):- ஆசிய சந்தையில் மசகுஎண்ணெயின் விலை குறைந்தது submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post.html"

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

கச்சா எண்ணெய் தானே சரியான தமிழ் வார்த்தை, அது என்ன மசகு எண்ணெய்