பொருளாதார மந்த நிலை காரணமாக, நிதிபிரச்னையை சமாளிக்க முடியாமல் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் 90 வங்கிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெரும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. அது, உலக அளவில் பொருளாதார மந்த நிலை யையும் ஏற்படுத்தியது.
நிதிப் பிரச்னையை சமாளிக்க முடியாமல், ஏராளாமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் நஷ் டத்தில் இயங்கி வருகின்றன; பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இதன் காரணமாக, அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்துள்ளது. அரசு ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்தபோதும், நிதி ஆதாரமின்றி வங்கிகள் மூடப்படுகின்றன.கடந்த மாதம் மட்டும் அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 9.5 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. நிதிப் பிரச்னை, வேலையிழப்பு போன்ற காரணங்களால் வங்கிகளும் தள்ளாடத் துவங்கிவிட்டன.
மிகப் பெரிய வங்கிகள் தவிர, நடுத்தர மற்றும் மூன்றாம் நிலை வங்கிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஹோம் நேஷனல் வங்கி, பே நேஷனல் வங்கி, ஐடியல் பெடரல் சேமிப்பு வங்கி போன்றவை கடந்த மாதத்தில் பெரும் நஷ்டத்தில் இயங்கின. கடந்த ஏழு மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் 90 வங்கிகள் மூடப் பட்டுள்ளன. சராசரியாக ஒரு மாதத்துக்கு 13 வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. பொருளாதார மந்த நிலை சீராகும் பட்சத்தில் தான், அமெரிக்காவில் வங்கிகளின் நடவடிக்கை இயல்பு நிலைக்கு திரும்பும். வங்கிகளின் நடைமுறைகளில் ஏற்பட்ட பாதிப்பு இந்த மூடலுக்கு காரணம் என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/7-90.html"
No comments:
Post a Comment