பிரித்தானியாவில் வருடத்திற்கு 21,000 பவுண்டுகளுக்கும் குறைவான ஊதியம் பெற்றுகொண்டு பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களின் சம்பள உயர்வு இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
21,000 பவுண்டுகளுக்கும் குறைவான ஊதியம் பெறுபவர்களுக்கு அவர்களை பாதுகாக்கும் விதமாக 250 பவுண்டுகள் சம்பள உயர்வாக அளிக்கப்படும் என அமைச்சர்கள் முன்பு சுட்டிக் காட்டியிருந்தனர். இது போன்று சம்பளம் நிறுத்தி வைக்கப்படுவதன் விளைவாக பலர் தங்கள் வேலையை இழப்பது தடுக்கப்படுமென அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
பொதுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப தான் ஊதியம் அளிக்கப்படுகிறதே தவிர அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவில்லை என சில தொழிலாளர் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
குறைவான ஊதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு இந்த இரண்டு வருடங்களில் குழந்தைகளுக்கான தொகை அதிகம் கொடுப்பதன் மூலமாக உதவப்படும் என்றும் அரசுக் கருவூல தலைமை செயலர் டன்னி அலெக்சாண்டர் மேலும் கூறியுள்ளார்.
லங்கா சிறி இணையத்தளத்தில் (உலகச்செய்திகள்):-பிரித்தானியாவில் பொதுத்துறையில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களின் ஊதியம் 2 வருடங்களுக்கு நிறுத்தி வைப்பு
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/2.html"
No comments:
Post a Comment