Friday, 16 July 2010

* அமெரிக்காவில் வீடு விற்பனை கடும் சரிவு

இந்த ஆண்டு மே மாதத்தில் அமெரிக்காவில் வீடுகள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீடுகள், ரியல் எஸ்டேட் விற்பனை மோசமடைந்துள்ளது.ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 33 சதவீதம் (கிட்டத்தட்ட 4.46 லட்சம் வீடுகள்) சரிவாகும்.

மே மாதத்தில் 3 லட்சம் வீடுகளே விற்பனையாகியுள்ளன.சென்ற ஆண்டு மே மாதத்தில் 3.69 லட்சம் வீடுகள் விற்பனையாகின. அதனுடன் ஒப்பிடுகையில் சரிவு 19 சதவீதம் ஆகும்.

வீடுகள் விற்பனையில் ஏற்படும் சரிவு பொருளாதார தேக்க நிலையை குறிப்பிடும் அம்சம் என்பதால் அமெரிக்கா இன்னும் பொருளாதார மந்த நிலையிலிருந்து முழு அளவில் மீளவில்லை என்பது தெளிவாகிறது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/blog-post_16.html"

No comments: