Monday 28 June 2010

* பிரிட்டனில் வேலையில்லா நிலை 10 சதவிகிதத்திற்கு உயரும் அபாயம்

கன்சர்வேடிவ்-லிபரல் கூட்டணி அரசாங்கம் பொதுச் செலவை குறைப்பதற்கான அதன் திட்டங்களை அறிவித்த சில நாட்களுக்குள்ளேயே,பிரிட்டனில் வேலையில்லா நிலையை 10 சதவிகிதத்திற்கு மேல், அதாவது 3 மில்லியன் உயரக் கூடும் என்ற மதிப்பீட்டைக் கொடுத்து ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது.

The Chartered Institute of Personnel and Development (CIPD) வரவிருக்கும் குறைப்புகளால் 725,000 க்கும மேலான வேலைகள் ஆபத்திற்கு உட்படக்கூடும், பிரிட்டன் முழுவதும் பொதுத் துறையில் 12 சதவிகிதம் அல்லது 6 மில்லியன் தொழிலாளர்கள் இதில் அடங்குவார்கள் என்று கணித்துள்ளது. தற்பொழுது 2.5 மில்லியன் என்று இருக்கும் வேலையின்மை 2012 க்குள் 3 மில்லியனை அடையும், அந்த அளவிலேயே 2015 வரை இருக்கும் என்றும் கூறியுள்ளது.

CPID ஆனது வரிகளை உயர்த்துவது என்பதற்குப் பதிலாக, செலவு குறைப்பதானது வேலை நெருக்கடியை இன்னும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. நிதி மந்திரி ஜோர்ஜ் ஓஸ்போர்ன் நிதியப் பற்றாக்குறையைக் குறைக்கும் விதத்தில் 'சேமிப்புக்களில்' கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தை செலவுகளை குறைப்பதன் மூலம் கொண்டுவர விரும்புகிறார். மிகுதி 20 சதவிகிதம் மட்டுமே வரி உயர்வின் மூலம் அடையப்படும்.

மொத்தத்தில் CIPD, மேலாளர் மற்றும் நிர்வாகப் பகுதியில் தேசிய சுகாதாரப் பணி (NHS)இல் 175,000 பணிகளும், ஆட்சித்துறை, கல்வித்துறைகளில் 200,000 பணிகளும் உள்ளூராட்சிப் பதவிகளில் 350,000 இழக்கப்படும் என்று எதிர்பார்க்கிறது. தேர்தலுக்கு முன்பு, கன்சர்வேடிவ்கள் அதிக செலவு கொடுக்கும் தகவல் தொழில்நுட்பத் திட்டங்களில் குறைப்புக்கள், ஆலோசகர்களின் குறைப்புக்கள் ஆகியவற்றின் மூலமும், முன்னணிப் பணிகளைப் பாதுகாப்பதன் மூலமும் சேமிப்புக்கள் அடையப்படலாம் என்று கூறியிருந்தனர். ஆனால் பதவிக்கு வந்த உடனேயே, பிரதம மந்திரி டேவிட் கெமரோன் பொதுச் செலவுகளில் இருந்து 6.25 பில்லியன் பவுண்டுகள் நிதியைக் குறைத்தார்.


இத்தகைய அளவுகளில் வரவு-செலவுத் திட்டங்களைக் குறைப்பது நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, பொதுத்துறையில் இருந்து வெளியே இருப்பவர்களுக்கும் பேரழிவு விளைவுகளைக் கொடுக்கும். பல பொதுத்துறைப் பணிகளின் மூலம் ஒப்பந்த வேலையைக் கொண்டவர்கள் 1.7 மில்லியன் தொழிலாளர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இவர்கள் குப்பை சேகரித்தல், தூய்மைப்படுத்துதல், ஓய்வு வசதிகளை நிர்வகிப்பவர்கள், பள்ளிகளில் உணவு அளிப்பவர்கள் என்று உள்ளனர். போக்குவரத்துத் துறையில், குறிப்பாக தேசிய ரயில் பணியிலும் பல உள்ளூர் பஸ் சேவைகளும் அரசாங்கத்திடம் இருந்து வரும் அதிக உதவித் தொகைகளைப் பெரிதும் நம்பியுள்ளன.


அரசாங்க ஆதரவு அகற்றப்படுவது என்றால் இத்தொழிலாளர்களில் பலர் ஒப்பந்தங்கள் குறைக்கப்படும்போது உதவி நிதிகள் கொடுக்கப்படுவது இல்லை. ஏற்கனவே இந்த ஆண்டு 1.7 பில்லியன் பவுண்டுகளைக் குறைப்பதில் அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது. அதற்காக அது அளிப்பாளர்களிடமும் மற்ற அமைப்புக்களுடனும் ஒப்பந்தங்கள் பற்றிய மறு பேச்சு, வரவு-செலவுத் திட்ட வார்த்தைகள் நடத்த உள்ளது.இத்தகைய குறைப்புகளால் நேரடி விளைவு தனியார் துறையிலும் உணரப்படும். அங்கு பல நிறுவனங்களும் பொது அதிகாரங்களுடன் வணிகத் தொடர்பை நம்பியுள்ளன. இதன் பொருள் இன்னும் உயர்ந்த வேலையில்லா நிலை என்ற அச்சுறுத்தல் ஆகும்.

வேலையில் இருந்து நீங்கிவிட்ட தொழிலாளர்கள் மிகக் குறைந்த பொதுநல முறையைத்தான் எதிர்கொள்ளுவர். ஆண்டு ஒன்றுக்கு 4 பில்லியன் பவுண்டை அரசாங்கம் பொதுநலத் தரங்களை முடக்குவதன்மூலம் சேமிக்க முயல்கிறது. இதைத்தவிர இன்னும் அதிகமும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் செலவுப் பரிசீலனைக்குள் நலன்கள், வரிகளுக்கு சலுகைகள் ஆகியவற்றையும் உள்ளடக்க அது முடிவெடுத்துள்ளது. இதன் பொருள் ஏற்கனவே மிகக் குறைந்த சமூக ஆதரவுத் தளம் கொண்டுள்ள மிக நலிந்தோர் சமுதாயத்தில் இன்னும் குறைவான நலன்களைத்தான் பெறுவர் என்பதாகும்.

குழந்தைகள் நலன்கள், இயலாதவர்களுக்கான நலன்கள், வேலையின்றி இருப்பவர்கள் ஆகியோரைப் பற்றிக் குறிப்பாக கவனம் செலுத்தப்படுகிறது. அரசாங்கம் உதவி நலன்களைப் பெறுவதற்கான தகுதிகளைக் குறைக்க வழிவகைகளை அரசாங்கம் முடிவெடுத்தாலும், அப்படியே நலன்களின் தரங்களைக் குறைத்துவிடவும் அது முடிவெடுக்கலாம்.

பொதுப் பணிகள், பொதுநலச் செலவுகள் ஆகியவற்றில் குறைப்புக்களைக் கொண்டு வரும் உந்துதலில், அரசாங்கம் பிரிட்டிஷ் தொழில்துறை கூட்டமைப்பு (CBI) உடைய ஆதரவைப் பெற்றுள்ளது. CBI ஆனது நிதி மந்திரி இன்னும் கடுமையான குறைப்புக்களை, இப்பொழுது அறிவித்தவற்றைவிடத் தீவிரமாக அறிவிக்க வேண்டும், அதுதான் வரி உயர்வைத் தவிர்க்கும் என்று கூறியுள்ளது.

CBI வியாழனன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "வணிகக் குழு பற்றாக்கறையைச் சமாளிப்பதற்கு இதுவரை அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கிறது. வரவு-செலவுத் திட்டத்தைப் பயன்படுத்தி இங்கிலாந்தின் நிதிய நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் விதத்தில் செயல்பட்டு, இன்னும் விரைவான விதத்தில் கட்டுமானப் பற்றாக்குறையில் குறைப்பு, இன்னும் கடுமையான பொருளாதார முன்கருத்துக்களை ஏற்றல், செலவுத் திட்டங்களை இன்னும் விரிவாக்குதல் இதற்குத் தேவை" என்று வாதிட்டுள்ளது.

OBR எனப்படும் வரவு-செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகம், பிரிட்டனின் பொருளாதாரம் பற்றிச் "சுதந்திர" கணிப்புக்களை அளித்தல், செலவு முடிவுகள் பற்றி ஆலோசனை கூறல் ஆகியவற்றிற்காக புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது, கடன் வாங்குதல், வளர்ச்சிக் கணிப்புக்கள் பற்றித் திங்களன்று அறிவிப்பை வெளியிடும். இது பிரிட்டனின் பொருளாதார வாய்ப்புக்கள் 2011, அதற்கு அப்பால் கீழிறக்கும். அதைத்தவிர தற்பொழுதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவிகித வளர்ச்சி என்பதும் 2 ஐ ஒட்டிக்குறைக்கப்படும் என்ற ஊகம் வந்துள்ளது. இதையொட்டி ஒப்புமையில் பிரிட்டனின் கடன் அளவு பெருகும்.

ஐரோப்பா முழுவதும் இதே போன்ற திட்டங்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து, அதுவும் இந்த வாரம் 80 பில்லியன் யூரோச் செலவுகள் ஜேர்மனியில் குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, காமரோன் அரசாங்கம் தொழிலாளர் வர்க்கம் அதன் பொறுப்பைக் கொண்டிராத பொருளாதார நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/10.html"

1 comment:

Atchuthan Srirangan said...

VIRAKESARI ONLINE

பிரிட்டனில் வேலையில்லா நிலை 10 சதவிகிதத்திற்கு உயரும் அபாயம்

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=24826