Tuesday, 15 June 2010

* புதிய ஐபோன்-4G ஜூன் 24 முதல் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது வெற்றிகரமான ஐபோனின் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் 40 சதவீத வருவாய் ஐபோன் விற்பனை மூலம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "ஐபோன்"கள் 2007ல் சந்தைக்கு வந்தன. இதுவரை 5 கோடி போன்கள் விற்பனையாகியுள்ள நிலையில், தற்போது மேலும் பல புதிய அம்சங்களுடன் அதன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" மாடல் சந்தைக்கு வந்துள்ளது.

ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சகல வசதிகளையும் கொண்டதாகத் திகழ்கிறது. OS 4 எனும் இயங்குதளத்தில் அதிவேகமாக இயங்கும் திறன் கொண்ட இந்த புதிய செல்போனில், Video Calling, Retina high-resolution display, 5 மெகா பிக்ஸல் கேமரா, லெட் ஃப்ளாஷ், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு வசதி, வை-ஃபி என ஏராளமான வசதிகளை உள்ளடக்கியது இந்த புதிய செல்போன்.

முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையதளத்தை பயன்படுத்தவும் முடியும்.

ஜூன் 24 முதல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனை செய்ய உள்ளது.

ஜூன் 15 முதல் இந்த ஐபோன்-4 க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே ஐபோன் வைத்திருப்பவர்கள், புதிய சாஃப்ட்வேர்களை ஐ ட்யூன் தளத்தில் வரும் ஜூன் 21 முதல் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.

சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா உள்பட 21 நாடுகளில் ஜூலையில் விற்பனைக்கு வருகிறது ஐபோன். இந்தியா உள்ளிட்ட 88 நாடுகளில் வரும் செப்டம்பரில்தான் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/4g-24.html"

No comments: