Wednesday, 2 June 2010

* இலங்கையில் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது

இலங்கையில் வாகனங் களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தாலும், மின்சார உபகரணங்களின் மேலதிக வரி 15 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு நேற்று முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. வரிக் கட்டமைப்பை இலகுபடுத்தவும் பரந்துபட்டதுமாக்கும் நடவடிக்கையாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுங்க வரியின் மீதான 15 சதவீத மேலதிக வரியை நீக்கியுள்ளார்.

அத்துடன் பெரும்பாலான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர வகைகள் மீதான 2.5 சதவீத இறக்குமதி வரியும் நீக்கப்பட்டுள்ளது. அதேவேளை சுங்கவரி, 0, 6, 15, 30 என்ற நான்கு கட்ட வரிக் கட்டமைப்பில் இலகுபடுத்தப்பட்டுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் அறிக்கையொன்று கூறுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதனால் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் ஒரு நடவடிக்கையாக இது அமைவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் வாகனங்கள் மீதான இறக்குமதி வரி 50 சத வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச பிரபல்யம் பெற்ற விற்பனை பெயர்களை தாங்கியுள்ள பொருட்களுக்கு இலங்கையை கவர்ச்சிகரமான விற்பனை மையமாக உருவாக்கும் நோக்கில் தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள், கமராக்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களின் ஒட்டுமொத்த வரி 10 சத வீதத்துக்கும் குறைவாக கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய பொருட்களுக்கு துறைமுக வரி மற்றும் நாட்டை நிர்மாணிக்கும் வரி ஆகியவை மட்டுமே விதிக்கப்படும். பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் மேலதிக வரி ஆகியவை இந்த பொருட் களுக்கு விதிக்கப்படமாட்டா.

உள்ளூர் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் திரிபு வரி குறைக்கப்பட்டுள்ளது. முறையற்ற இறக்குமதி போட்டித் தன்மையில் இருந்து பாதுகாப்பு தேவைகளை உள்ளூர் நடவடிக்கைகளை குறிப்பிட்ட இறக்குமதி பாதித்தால் மட்டுமே இந்த வரி தொடர்ந்து செலுத்த ப்பட வேண்டியிருக்கும். மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர வகைகள் இறக்குமதியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இவற்றின் மீதான வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொருட் குவிப்புக்கு எதிரான சட்டம், லேபல் இடுதல் தொடர்பான சட்டம், தரமான பொருட்களை இறக்குமதி செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் சூழல் மாசடைவதை குறைப்பதற்கும் உள் ளூரில் மேற்கொள்ளப்படும் கைத்தொழில் களை பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசாங்கமானது இலகுவான வரிக் கட்டமைப்பை நோக்கிச் செல்லும் நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கு இறக்குமதி நிலையில் விசேட பொருட்கள் வரிக்கு மட்டுமே உரித்தாகும். இது சிறிய வர்த்தகர்களுக்கான நிர்வாக நடைமுறைகளை பெரிதும் குறைக்கும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/50.html"

No comments: