ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கையடக்க கம்ப்யூட்டரான ஐபேட் விற்பனைக்கு வந்து 2 மாதங்களிலே 2 மில்லியன் ஐபேட்களை விற்று சாதனை படைத்துள்ளது.
இந்த வேகத்தில் ஐபேட்கள் விற்பனை தொடர்ந்தால், விற்பனை அளவு எங்கோ போய்விடும் என்கிறார்கள் எலெக்ட்ரானிக் சந்தை வல்லுநர்கள். ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் தயாரித்த ஐபாட்(i Pod),ஐபோன் (i Phone) முதல் 2 மாதங்களில் முறையே 125,000,820,000 விற்பனை ஆனது என்கிறார் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 8.13 மில்லியன் ஐபேட்கள் உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபேட்களுக்கு கிடைத்துள்ள பிரவேற்பைத் தொடர்ந்து டெல், சோனி, ஹெச்பி போன்ற நிறுவனங்களும் ஐபேட் போன்ற டேப்லட் பிசிக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/2-2.html"
No comments:
Post a Comment