Saturday, 5 February 2011

* இலங்கையின் பணவீக்கம் இவ்வாண்டு உயரும்

இலங்கையின் பொருளாதாரம் இவ்வாண்டில் 7 வீதத்தால் வளர்ச்சியடையும். எனினும் பணவீக்கம் 8 வீதமாக உயரும் என சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு துறை, அன்னியச் செலாவணி ஒதுக்கு மற்றும் நாணயமாற்று வீதம் நிலையான தன்மையைப் பெற்று வருகின்றது. இப்போதுதான் இலங்கை சரியான பாதையில் பயணிக்கிறது என ஐ.எம்.எவ் ன் இலங்கைக்கான தூதுவர் கொசி மாதே தெரிவித்துள்ளார்.

கடனளிப்புக்காக இலங்கைப் பொருளாதாரம் 5வது தடவையாக ஐ.எம்.எப் ஆல் மீளாய்வு செய்யப்பட்டது. இதன் முடிவுகளை சமர்பித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையின் பொருளாதார போக்கு திருப்தியளிப்பதாக உள்ளது. எனினும் இவ்வாண்டில் பணவீக்கம் அதிகரிக்கும். இதற்கு சர்வதேச உணவு விலையேற்றம், உள்நாட்டு வெள்ள அழிவுகள் பணவீக்க உயர்வை ஊக்குவிக்கும். எனினும் வெளிநாட்டு பாதிப்புக்கள் மற்றும் உள்நாட்டு மெய்சொத்து சந்தை தொடர்பாக மத்திய வங்கி சிறப்பான கண்கானிப்பினை மேற்கொண்டு வருகிறது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச வருமானம் மிகக் குறைவாக உள்ளது. அத்துடன் வரி மற்றும் முதலீட்டு சீர் திருத்தங்கள் சிறப்பாக உள்ளன. நிதித் துறையும் இப்போது வளர்ச்சிக்கு உதவக் கூடிய நிலையினை அடைந்துள்ளது. இன்னும் 4 - 5 வருடங்களில் தற்போதுள்ள 80% எனும் வரவுசெலவு பற்றாக்குறை நிலையை 60% மாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பேரினப் பொருளாதாரம் சிறப்பாக நகருகின்றது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்தாண்டு 6.5% பணவீக்கம் அமையும் என ஐ.எம்.எப் எதிர்வு கூறியது. ஆனால் 5.9% என குறைவாக பதிவு செய்தது. அத்துடன் ஐ.எம்.எப்பின் நோக்கம் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பல விமர்சனங்கள் இருப்பதாக பொருளியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நன்றி:-உதயன் இணையம்

submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/02/blog-post_05.html"

2 comments:

ARV Loshan said...

ம்ம்.. பரீட்சைகள் எல்லாம் வெற்றியாக முடித்துக் கொண்டு பங்குச் சந்தையில் இறங்கி இருக்கீங்க போல..

Atchuthan Srirangan said...

ஆம்.......மீண்டும் பங்குச் சந்தையில் இறங்கி ஒரு கை பார்த்து விடுவோம்.

லோஷன் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி....