பலலட்சம் மக்களைப் பார்க்கிறோம். சிலர் மட்டும் எப்படி வெற்றி மேல் வெற்றி அடைகிறார்கள்? அவர்கள் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மனங்கலங்காமல் எப்படிச் செயல்படுகிறார்கள்?
ஒரு மேலதிகாரியாக வேண்டுமன்றால், குறிப்பிட்ட கால அனுபவங்கள், வேலையில் திறமையை வெளிப்படுத்திய நடைமுறைகள் போன்றவற்றை வைத்து நிர்ணயிக்கிறார்கள்.
வெற்றியாளர்கள் எல்லாத்துறைகளிலும் உள்ளார்கள். வாழ்க்கையில் நாம் அவ்வப்போது வெற்றியாளர்களைச் சந்திக்கிறோம். கடந்த காத்தில் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருக்கிறோம்.
வெற்றியாளராக உருவாக தேவையான அடிப்படைப் பண்புகளை சுருக்கமாக, தெளிவாக இங்கு காண்போம். இந்தப் பண்புகளில் 10 அம்சங்களும் அவசியம் தேவை. ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலோ அல்லது குறைந்துவிட்டாலோ அவரின் வெற்றியைப் பெருமளவு பாதிக்கும்.
அவைகள்:
1.உறுதியான தன்னம்பிக்கை:-
எடுத்த காரியத்தை முடிக்கும் மன உறுதி. செயலின் போது வரும் பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கி விடாமல் செயலாற்றும் திறமை வேண்டும்.
2.திட்டமிட்ட குறிக்கோள்:-
எதை அடைய வேண்டும் என்ற தெளிவான எண்ணம்; எவ்வளவு காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கால நிர்ணயம், எப்படி அதை அடைவது என்ற வழிமுறைகள் இவைகளைப் பற்றிய தெளிந்த அறிவு தேவை.
3. ஆர்வம்:-
எரிமலை போன்று கொழுந்து விட்டெறியும் உற்சாகத்துடன் செயலாற்றும் மனப்பான்மை வேண்டும்.
4. தலைமைப் பண்பு:-
தன்னைச் சேர்ந்தவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுத்துதல், அவர்களைச் சரியாக வழி நடத்துதல் வேண்டும். அப்போதுதான் மற்றவர்களின் ஒத்துழைப்பையும் நம்பிக்கையையும் பெற்று தலைவனாக முடியும்.
5. சுயக்கட்டுப்பாடு:-
நல்ல பழக்க வழக்கங்கள்: நெறிமுறைகளில் தவறாமை; உணர்ச்சி வசப்படாமல் செயல் புரியும் மனோபாவம் அவசியம்.
6. பொலிவான தோற்றம்:-
புன்முறுவலுடன் கூடிய முகம், இனிய சொற்கள், உற்சாகமான பார்வை, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உடையணிதல் ஆகியவை முக்கியம்.
7. கவனம் சிதறாத மனப்பான்மை:-
செய்யும் தொழிலில் சொந்த விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கி வைத்து, முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்த வேண்டும்.
8. ஒத்துழைப்பு:-
தனி மனிதன் சாதனையாளராக, தாம் பிறருடன் ஒத்துழைத்து மற்றவர்களையும் தம்முடைய செயல்களுக்கு ஒத்துழைக்க செய்தல் மிக அவசியம்.
9. பொறுமை:-
எதிர்ப்புகளைத் தாங்கும் சகிப்புத் தன்மை, சோதனைகளின் போதும் தொடர்ந்து செயலாற்றும் விடா முயற்சி தேவை.
10. பணத்தை சேமிக்கும் பழக்கம்:-
ஆயிரங்கள் முதல் லட்சக்கணக்கில் சம்பாதிப்பவராயினும், தன் வருமானத்தில் குறைந்த பட்சம் 10 சதம் முதல் 20 சதம் வரையாவது சேமிக்க வேண்டும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/10.html"
4 comments:
அண்ணா இது பங்கு முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் பொருந்தும் என?
எல்லாம் இதுக்கு அந்த பணம் சேமிக்கும் பழக்கத்த விட ஹீஹீ..
அதுக்கு ஏதாவது வழி இருக்கா.
வழக்கம் போல Interesting பதிவு..;)
என் தனிப்பட்ட கருத்து இது. என்ன தான் எங்களுடன் கூட அமைந்தாலும், மனம் நிம்மதியாக இருக்க வேண்டும். நிம்மதியாக இருக்க என்ன செய்வது? (நிம்மதியை கெடுக்கும் விடயங்களில் நாம் தேவையில்லாமல் மாட்டக் கூடாது) இதற்கும் ஒரு பதிவு எழுதுங்கள். நிம்மதி கூட இருந்தால் வெற்றி நிச்சயம்.
முயற்சி செய்து பாக்கிறம்.
ரொம்ப சுலபமா இருக்கே!
Post a Comment