Saturday, 6 February 2010

* டொயொட்டோ கம்பெனிக்கு மேலும் ஒரு பின்னடைவு

உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டொயொட்டோ, தமது வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க உதவும் ஆக்ஸிலரேட்டர் பெடல்களில் பிரச்சினைகள் இருந்ததால் எண்பது லட்சம் வாகனங்களை திரும்பபெற எடுத்த முடிவுக்கு பிறகு, அதற்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்று இயற்கை வாயு ஆகியவற்றின் கலப்பில் ஓடும் டொயொட்டோவின் புதிய அறிமுகமாக பிரியஸ் (Toyota Prius) எனும் மாடல் கார்களின் பிரேக்குகளில் பிரச்சினை இருப்பதாக அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

அந்த வகையான காரின் பிரேக் செயற்பாட்டின் வடிவமைப்பை தாங்கள் மாற்றியமைத்துள்ளதாகக் கூறும் டொயொட்டோ, ஏற்கனவே சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களை எப்படி சரி செய்வது என்பது தொடர்பிலான நடவடிக்கைகளும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வாகனங்களை திரும்பப் பெற நேர்ந்தது அந்த நிறுவனத்துக்கு இரண்டு பில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி பார்த்தாலும் டொயொட்டோவிற்கு நிலைமை இப்பொழுது அதை விட பல் மடங்கு மோசமாக உள்ளது. மக்கள் இது தான் வாய்ப்பு என்று நஷ்டயீடு வழக்குகள் போட ஆரம்பித்துவிட்டார்கள். டொயொட்டோவிற்கு முடிவு நெருங்கிவிட்டதா? அல்லது ஒரு பாஸிங் கிளவ்டா?பங்கு சந்தையில் அந்தர் பல்டி அடித்த டொயொட்டோ பங்குகள் வாங்க பலருக்கு வாய்ப்பா? காலம் தான் பதில் சொல்லும்.

தொடர்புள்ள சுட்டிகள் :-

டொயொட்டோ கலங்கம்

டொயொட்டோ மன்னிப்பு கோருகிறது submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/blog-post_06.html"

5 comments:

அண்ணாமலையான் said...

mechanical defects costs them this much loss

புல்லட் said...

நானும் கேள்விப்பட்டேன்.. எட்டு இலட்சம் கார்களாம்..

balavasakan said...

அடப்பாவி!!! 2 மில்லியனா??? நல்ல தகவல் அச்சு!! நன்றி நன்றி

Srirangan Kathiravelu said...

Good info.
Share Price came down around 20%, compare to 3 weeks back,but after the Toyoto President's apology share price went up by arond 4%. Product recall and Compensations are becoming normal nowadays .This situation is clearly a setback for Toyota but they will come back in a style.

யோ வொய்ஸ் (யோகா) said...

another sad news