மாஸ்டர் கார்டு(MasterCard) நிறுவனத்தின் CEO இந்தியாவைச் சேர்ந்த அஜய் பங்கா (Ajay Banga) வரும் ஜூலையில் பொறுப்பேற்க உள்ளார்.
புனே நகரைச் சேர்ந்த Ajay Banga, டெல்லியில் படித்தவர்.Indian Institute of Management, Ahmedabadஉயர் படிப்பு முடித்தவர்.
பொதுவாக இம்மாதிரி சர்வதேச நிறுவனப் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் வெளிநாட்டில் ஒரு பட்டமாவது பெற்றிருப்பார்கள். ஆனால் பங்கா முழுக்க முழுக்க இந்தியாவிலேயே படித்துப் பட்டம் பெற்றவர்.
நெஸ்லே(Nestle) நிறுவனத்தில் தனது கேரியரைத் துவக்கிய Ajay Banga, பின்னர் சிட்டி குரூப்பில் சேர்ந்தார். 2005 வரை சிட்டி குரூப்பில்(Citigroup) தான் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.
மாஸ்டர்கார்டில் தலைவர் மற்றும் CEO பொறுப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் சேர்ந்தார் அஜய் பங்கா.வருகிற ஜூலை 1ம் தேதி, மாஸ்டர்கார்டின் தற்போதைய CEO ராபர்ட் செலாண்டர் பதவி விலகுகிறார். அன்றே Ajay Banga பொறுப்பேற்கிறார்.
CEO பொறுப்பேற்ற பிறகும் மாஸ்டர்கார்டு தலைவர் பதவியில் இவர் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜய் பங்காவின் முன் இப்போதுள்ள ஒரே சவால், தங்களுக்கு சற்று முன்னே பயணிக்கும் விசா கார்டு நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளவேண்டும் என்பதே!
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/mastercard.html"
1 comment:
தகவலுக்கு நன்றி அண்ணா.. நானும் மாஸ்டர் கார்ட் பாவிக்கிறன் ஆனா இதுவரைக்கும் அந்த நிறவனத்தலைவர் யாருன்னு தெரியாது..
நாளைக்கு எவனாவது மாஸ்டர் கார்ட்ட வச்சு பீட்டர் விட்டா.. மாஸ்டர் கார்ட் நிறுவனத் தல யாருன்னு கேட்கலாமுல்ல.. ஹீஹீ...)))
Post a Comment