Saturday, 3 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 02.10.2009

இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமை அன்று உயர்வைக் கண்டுள்ளது. இங்கு முதலீடு செய்பவர்கள் குறுங்காலத்தில் காளைச் சந்தையில் இலாபம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், வருங்கால காலாண்டுக்கான முடிவுகள் நீண்டகாலத்தை நோக்கி நகரும்.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.68 சதவீதம் (20.41 புள்ளி) உயர்ந்து 3,018.01 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.25 சதவீதம் (42.00 புள்ளி) உயர்ந்து 3,394.86 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.07 பில்லியன் ரூபாய்.

வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 33.0 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 199.0 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 232.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி 100.8 சதவீதம் எனவும், மிலங்கா விலைச்சுட்டி 108.1 சதவீதம் எனவும் அதிகரிப்பை காட்டியுள்ளது.

Bloomberg Newswire கருத்தின் படி கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் நடவடிக்கையானது ஆசியாவின் மிகச் சிறந்த சந்தையாகவும், உலக தரப்படுத்தலில் நான்காம் இடத்திலும் உள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். உங்கள் பின்னுட்டல்கள் எதிர்பாக்கப்படுகிறது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/02102009.html"

2 comments:

புல்லட் said...

should invest then , :-)

regards Pig :-)

Anonymous said...

எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
பிடித்திருந்தால் பின்தொடருங்கள்.