Tuesday 6 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 06.10.2009

இலங்கை பங்குச்சந்தை இன்று 0.95 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.95 சதவீதம் (29.32 புள்ளி) உயர்ந்து 3,127.56 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.10 சதவீதம் (38.61 புள்ளி) உயர்ந்து 3,547.38 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.18 பில்லியன் ரூபாய்.

இன்று பங்கு வர்த்தகத்தின் முடிவில் Market capitalization 1,003.1 பில்லியன் ரூபாய், இலங்கை பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக 1,000 பில்லியன் இலக்கைத் தாண்டியுள்ள சந்தர்ப்பமாகும்.

இன்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அவர்கள் பங்கு பரிவர்த்தனை நிலையத்துக்கு திடீர் விஐயம் மேற்கொண்டார்.

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 82.5 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 146.5 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 64.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/06102009.html"

2 comments:

ஆதித்தன் said...

யுத்தமுடிவின் பின்னர் இலங்கையின் பங்குச்சந்தை நல்ல வளர்ச்சியை காண்பிக்கிறதா?

நல்ல பணி நண்பரே! தொடர்ந்து எழுதுக!

Atchuthan Srirangan said...

2009ம் ஆண்டில்

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 100.8 சதவீ வளர்ச்சி

மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 108.1 சதவீ வளர்ச்சி