இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமை இன்று 0.10 சதவீதம் சரிவை கண்டுள்ளது
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.10 சதவீதம் (3.22 புள்ளி)சரிந்து 3,131.91 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.26 சதவீதம் (9.08 புள்ளி)சரிந்து 3,546.93 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 836.7 மில்லியன் ரூபாய்.
வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 10.7 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 184.3 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 195.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/16102009.html"
No comments:
Post a Comment