வருகின்ற வாரம், காளைக்கும் கரடிக்கும் ஏற்படவுள்ள மோதல் ஆக்ரோஷமானதாகவும் பரபரப்பானதாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இப்போதைக்கு காளையின் கை சற்று ஓங்கியிருப்பது போல் தோன்றினாலும், கரடி தனது முழு பலத்தையும் அடுத்த வாரம் காட்டும் என்றே கருதப் படுகிறது.
சட்டென்று குறைந்த பணவீக்கமும், மேலும் வட்டி வீத குறைப்புகள் இருக்கும் என்ற புதிய நம்பிக்கையை உருவாக்கியதும் சென்ற வார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.
உலக சந்தைகள் பலவும் (முக்கியமாக அமெரிக்கா சந்தைகள்) சரிந்த நிலையிலும் நமது பங்குச்சந்தை மேலே சென்றதும்,சந்தையின் சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருவாரியாக முன்னேற்றமடைந்தது சந்தையின் வலுவான மனநிலையையே காட்டுகின்றது.
முந்தைய வாரங்களில் கடுமையாக வீழ்ச்சியுற்ற வங்கித் துறை, உற்பத்தித் துறை, வாகனத் துறை பங்குகள் தீவிர "விற்ற பின் வாங்குதல்" (Short Covering) காரணமாக மேல் சென்றதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்றாலும், வெளிநாட்டு நிறுவனங்கள் பெருவாரியாக பங்குகளை வாங்கியது குறிப்பிடத் தக்கது.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/blog-post_10.html"
No comments:
Post a Comment