வர்த்தக மோசடியில் ஈடுபட்டதன் குற்றச்சாட்டில் ராஜ் ராஜரட்ணம் என்பவர் அமெரிக்காவின் எவ்.பி.ஜ. புலனாய்வுதுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரபலமான வர்த்தகரென இவர் அடையாளப்படுத்தப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட அமெரிக்க உளவுப்பிரிவினர் (F.B.I) அவரின் வருவாய்க்கான காரணிகளை கண்டறிந்தனர்.
உலகில் அதிகம் அறியப்பட்ட கெலோன் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்தர்கள் வரிசையில் 559ம் இடத்தை தக்கவைத்து கொள்பவருமான ராஜ் ராஜரட்ணம் அவரவது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்குசந்தை மற்றும் நிதிசந்தை கொடுக்கல் வாங்கல்களின்போது மோசடியான முறையில் இலாப மீட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. இவர் 2006-2007ம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற இவ்வாறான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் ஏராளமான பணம் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் DFCC,NDB,Dialog,SLT and Hayleys முதலிடப்பட்டு இருக்கிறது. இலங்கை பங்கு சந்தையில் அதிகம் முதலிட்ட தனி நபர் இவர் தான் எண்டு சில தகவல்களும் உண்டு.
John Keells Holding (JKH) - 9.2%
People Merchant Bank (PMB) - 13%
Commercial Bank (COMB) - 3.2%
நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறையவே ஆதிக்கம் உள்ள இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் முன்னணி வியாபார இதழின்(LMD) முன் அட்டையை அலங்கரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கவர்.
தன்னுடைய முதலீடுகளுக்கு என்றே தனி பங்கு தரகர் நிறுவனம் தொடங்கும் அளவுக்கு ஆதிக்கம் நிறைந்தவர் கைது செய்யப்பட்டு இருப்பது இலங்கை பங்குச்சந்தையை ஒரு உலுக்கு உலுக்கும் என்றே கருதப்படுகிறது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/blog-post_18.html"
No comments:
Post a Comment