Monday, 19 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 19.10.2009

உலகில் அதிகம் அறியப்பட்ட கெலோன் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்தர்கள் வரிசையில் 559ம் இடத்தை தக்கவைத்து கொள்பவருமான ராஜ் ராஜரட்ணத்தின் கைதினை அடுத்து இலங்கை பங்கு சந்தை திங்கட்கிழமை இன்று 1.56 சதவீதம் சரிவை கண்டுள்ளது.சந்தை நடவடிக்கை - 19.10-2009

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.56 சதவீதம் (49.00 புள்ளி)சரிந்து 3,082.91 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.93 சதவீதம் (68.60 புள்ளி)சரிந்து 3,478.33 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 885.2 மில்லியன் ரூபாய்.

திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 2.8 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 99.9 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 97.1 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/19102009.html"

3 comments:

வந்தியத்தேவன் said...

பங்குச் சந்தை விடயங்களைப் பற்றி பெரிதாக அறிந்திராத என்னைப் போன்றவர்களுக்குப் பயனுள்ள பதிவுகள். ராஜரத்தினம் கைதினால் எப்படி இலங்கைப் பங்கு வர்த்தகம் பாதிக்கப்படுகிறது?

Lanka Biz Blog said...

அவர் சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டியபோதும், அந்நிறுவனங்கள் அழைத்தபோதும் ஆக பதவியேற்க மறுத்திருந்தார். இவர் கைது மூலம் வெளிநாட்டு முதலீடுகள் (அதாவ்து இவரின் முதலீடுகள்) பாதிக்கப்படும் என கருதுகிறார்கள்.

பூச்சரம் said...

Join பூச்சரம் - இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

http://poosaram.blogspot.com/