Wednesday 9 December 2009

* என்னோட 100 வது பதிப்பு

நான் வலைப்பதிவு எழுதத் தொடங்கி மூன்று மாதங்களாகிறது. எழுதலாமா, வேண்டாமா என்ற பலமான யோசனைக்குப் பின், சரி ஆனது ஆகட்டும் என்று முடிவு செய்து இந்தப் பதிவினைத் தொடங்கினேன்.


கல்லூரியில் படிக்கும் பொழுது, எனது இரு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பிரதி கொண்டுவர முடிவு செய்தோம். சில வாரங்கள் யோசித்து எழுதி, நகலிட்டு சிலப் பிரதிகளை நண்பர்களிடையே விநியோகித்தோம். அதற்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைப் பார்த்து, போதுமடா சாமி என்று ஒரே இதழுடன் முடித்துக் கொண்டோம்.

கடந்த காலங்களை அசைப் போட்டுக் கொண்டே தான் வலைப்பதிவைத் தொடங்கினேன். தற்பொழுது குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஆர்வமுள்ளத் துறையைப் பற்றி எழுதுவதே எளிதாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் பங்குச் சந்தையைப் பற்றி எழுதினேன். எழுதத் தொடங்கிய பொழுது வரவேற்பு ஆரவாரமாக இருந்தாலும், பின் பின்னூட்டங்கள் குறைந்துப் போனது. பின்னூட்டம் ஊக்க சக்தியளிக்கும் டானிக் போன்றது. ஒரு பின்னூட்டம் கிடைத்தால் கூட மனதில் ஒரு சிறு சந்தோஷம் ஏற்படும். பின்னூட்டங்கள் கிடைக்காதப் பொழுது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கும். ஆனால் இப்பொழுதுதெல்லாம் பின்னூட்டங்கள் கிடைக்காமல் போனால் வருத்தம் ஏற்படுவதில்லை. பழகிப் போய் விட்டது.

நமக்கு ஏன் பின்னூட்டங்கள் வருவதில்லை என்று யோசிக்கும் பொழுது நாம் எத்தனைப் பதிவுகளுக்கு பின்னூட்டம் கொடுத்துள்ளோம் என்று நினைத்துப் பார்ப்பேன். நான் பலப் பதிவுகளைப் படித்து ரசித்திருக்கிறேன். ஆனால் பின்னூட்டம் கொடுத்தது கிடையாது. நம்மைப் போலத் தானே பிறரும் இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்வேன். குடும்பம், படிப்பு என்று பல வேலைகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தைத் தான் வலைப்பதிவிற்காகச் செலவிடுவேன். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில், பின்னூட்டங்களைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஒவ்வொரு பதிவாகப் படித்துக் கொண்டே சென்று விடுவேன். என்னைப் போலவே நிறையப் பேர் இருக்கக் கூடும்.

இந்த மனநிலைக்கு நாம் பழகிக் கொண்டால் நம்முடைய இயற்கையான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கும் என்றே நான் நினைக்கிறேன். பின்னூட்டங்களுக்காக எழுதும் பொழுது எழுத்தில் ஒரு செயற்கைத் தனம் தெரிகிறது. பின்னூட்டங்களைப் பெற வேண்டும் என்று எழுதப்படும் சிலப் பதிவுகளில் இந்த செயற்கைத்தனம் அப்பட்டமாகத் தெரியும். இதைப் போலவே முகமூடி அணிந்து எழுதப்படும் சில வலைப்பதிவுகள் ரசிக்கத்தக்கவையாகவே இருக்கிறது. நிஜத்தில் எழுதமுடியாமால் நிழலாக எழுதும் பொழுது கிடைக்கும் சுதந்திரம் அந்த எழுத்தில் பிரதிபலிக்கும். ஆனால் அதே சுதந்திரம் சில நேரங்களில் எல்லை மீறி அருவருப்பாகவும் இருக்கிறது.

வலைப்பதிவுகள் பெருகிக் கொண்டே இருக்கிறது. நிறையப் பதிவுகள் தனித்தன்மையுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது ஆரோக்கியமானச் சூழல் தான். எழுத வேண்டும் என்ற ஆவல் பலருக்கு இருக்கிறது. யார் சிறப்பாக எழுதுகிறார்கள் என்று தனிப்பட்டியலிட நான் விரும்பவில்லை. ஒவ்வொருவரின் எழுத்தும் ஒவ்வொரு பாணியில் சிறப்பாகவே இருக்கிறது.

இந்த இடுகை என்னோட 100 வது இடுகை. அப்படி, இப்படி என்று நானும் நூறாவது இடுகைகள் போட்டாச்சு. உங்கள் அனைவரின் அன்பாலும்,பாசத்தாலும் 100 வரை போட்டாச்சு...




நான் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்பதைக் காட்டுகிறது.........






உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/100.html"

31 comments:

வால்பையன் said...

சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்!

பின்னூட்டங்கள் குறைய காரணம் உங்களது அனைத்தும் துறை சார்ந்த பதிவு, துறைக்கு சம்பந்தமில்லாதவர்கள் சூப்பர், அருமை என்று பின்னூட்டமிடுவதற்கு பதில், ஒண்ணுமே சொல்லாமல் போகலாம்!

மேலும் பதிவுலகம் கண்ணாடி மாதிரி நாம என்ன கொடுக்குறமோ அது தான் திரும்பி கிடைக்கும், நாம யாருக்குமே பின்னூடம் போடாம , நமக்கு மட்டும் குறைஞ்சிருச்சுன்னு வருத்தப்படுறது தப்பு!

அந்த எதிர்பார்ப்பு அனைவருக்கும் தானே இருக்கும்!(ஊக்கம்)

Admin said...

வாழ்த்துக்கள்.... இன்னும் நிறையவே

எழுதுங்கள்...

நீங்கள் எழுதுவது பலருக்கு பயன் படுகிறது. நிறையப்பேர் பார்க்கிறார்கள் அதுவும் ஒரு திருப்திதானே.

Admin said...

வால் சொல்வதும் சரிதான்...

maruthamooran said...

சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்!

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் சதத்திற்கு.. அப்புறம் பின்னூட்டத்தை பற்றியெல்லாம் கவலை படாதீர்கள்.. நிச்சயம் உங்கள் எழுத்து நன்றாக இருந்தால் தானாகவே ரீச் ஆகும் எழுதுங்கள் எழுதுங்கள்.. மேலும் எழுதுங்கள்.

கலையரசன் said...

மேலும் இரட்டை சதம் அடிக்க வாழ்த்துக்கள் தோழரே!!

Bavan said...

சதமடித்ததுக்க வாழ்த்துக்கள்
கோடிகள் அடிக்க வாழ்த்துக்கள்...ஹிஹி

KANA VARO said...

சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்!

Subha said...

congrats Atchu...you have done a great job.keep going on.and wish you all the best for your upcoming publishes.

Srirangan Kathiravelu said...

Well done.Congratulation.

வேந்தன் said...

சதமடித்ததற்கு வாழ்த்துக்கள். :))

Subankan said...

சதமடித்ததற்கு வாழ்த்துக்கள் நண்பா, உங்கள் பதிவுகள் துறைசார்ந்து இருப்பதால்தான் பின்னூட்டங்கள் குறைகிறதே தவிர உங்கள் பதிவுகளால் பயன்பெறுவோர் அதிகம். நானும்தான். தொடர்ந்து எழுதுங்கள்.

புல்லட் said...

தம்பி! நீ என்னடாப்பா பின்னூட்டம் வரேல்ல எண்டு கவலைப்படுறாய்.. நான் நாள் தோறும் தவறாம பாக்கிறது உன்ட வலைப்பதிவதான்.. ஆரம்பத்தில சிதம்பர சக்கரத்தை பாத்தமாதிரி இருந்தாலும் இப்பப்ப வாசிக்க நல்லாருக்கு.. உன்ட பதிவை எத்தினை பேர் கொப்பி அடிக்கிறாங்க எண்ட பாக்க விளங்கேல்லயொ? உன்ட எவ்வளவு பெமசெண்டு.. நீ உதை பற்றி யோசிக்காம எழுது..

இலங்கையிண்ட வர்த்தக பதிவர் நீ மட்டும்தான் இப்ப.. நான் அடிக்கடி பின்னூட்டமிடாததற்கு காரணம் , எனக்கு கணக்கியல் அவ்வளவு தெரியாது.. ஆகுவே வாற பின்னட்டததை பற்றி கணக்கெடுக்காமல் எழுது..

Unknown said...

சதத்திற்கு வாழ்த்துக்கள்...

தொடர்ந்து எழுதுங்கள்.
பின்னூட்டங்கள் பற்றி கவலைப்படாதீர்கள். பின்னூட்டமிடும் தகுதி எங்களுக்கில்லாதபடியால் தான் பின்னூட்டமிட முடியாதுள்ளது.

உங்கள் பதிவுகளை மற்றவர்கள் எடுத்துப் பயன்படுத்தும் போது உங்கள் பதிவுகளின் தரத்தை யோசித்துப் பாருங்கள்...

தொடர்ந்து கலக்குங்கள்.....

thuva said...

don't feel like this bro............

day by day u r followers and viewers are increasing that's the success of u r blog:-)

Anonymous said...

Bro I've been following your posts for a while now through facebook. They are very useful and have helped me understand the sri lankan market.

looking forward to seeing more posts.

-follower from Canada

Atchuthan Srirangan said...

உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...


வால் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//வாழ்த்துக்கள்.... இன்னும் நிறையவே

எழுதுங்கள்... //


உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...

சந்ரு உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//வால் சொல்வதும் சரிதான்...//

சந்ரு அப்ப தல சொல்வது......

ஹி...ஹி...

Atchuthan Srirangan said...

//சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்!//

உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...


மருதமூரான் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//வாழ்த்துக்கள் சதத்திற்கு.. அப்புறம் பின்னூட்டத்தை பற்றியெல்லாம் கவலை படாதீர்கள்.. நிச்சயம் உங்கள் எழுத்து நன்றாக இருந்தால் தானாகவே ரீச் ஆகும் எழுதுங்கள் எழுதுங்கள்.. மேலும் எழுதுங்கள்.///

உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...


Cable Sankar உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//மேலும் இரட்டை சதம் அடிக்க வாழ்த்துக்கள் தோழரே!!//

உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...

கலையரசன் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//சதமடித்ததுக்க வாழ்த்துக்கள்
கோடிகள் அடிக்க வாழ்த்துக்கள்...ஹிஹி//


உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...

Bavan உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி

Atchuthan Srirangan said...

//சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்!//

உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...

VARO உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி

Atchuthan Srirangan said...

//congrats Atchu...you have done a great job.keep going on.and wish you all the best for your upcoming publishes.//

Thanks Subha........i need ur suport to face upcoming challenges


Subha உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//Well done.Congratulation.//

உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...

Srirangan உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//சதமடித்ததற்கு வாழ்த்துக்கள். :))
//

உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...


வேந்தன் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//சதமடித்ததற்கு வாழ்த்துக்கள் நண்பா,//

உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...


Subankan உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி

Atchuthan Srirangan said...

//உன்ட பதிவை எத்தினை பேர் கொப்பி அடிக்கிறாங்க எண்ட பாக்க விளங்கேல்லயொ? உன்ட எவ்வளவு பெமசெண்டு.. நீ உதை பற்றி யோசிக்காம எழுது..//

உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...

புல்லட் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//சதத்திற்கு வாழ்த்துக்கள்...//

உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...

கனககோபி உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Unknown said...

well done