
நியுயோர்க் நகரில் வோல்ஸ்ரிட்(Wall Street) என அறியப்படும் உலகின் பொருளாதாரத்தையே தீர்மானிக்கும் இடத்தில், புகழ்பெற்ற அமெரிக்க பங்குச் சந்தையில் அதிசய இளைஞன் என அறியப்படட்டவர் (wonder boy of wall street) ராஜ் ராஜரட்ணம்.
பங்கு பத்திர மோசடி, நிதி ரீதியான சூழ்ச்சி, என்பன அவருக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க பெடரல் யூரி சபையில் 16-12-2009 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
அவருக்கு எதிராக 17 குற்றச்சாட்டுகளை முன்வைத்து 36 பக்கங்களுடனான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்க நீதிமன்றமொன்றின் முன்னிலையில் விசாரிக்கப்படும் பாரிய நிதி மோசடி வழக்காக இந்த வழக்கு கருதப்படுகிறது.
எனினும் தற்போது 100 மில்லியன் டொலர் பிணையில் வந்துள்ள ராஜ் தனது பங்குதரர்களுக்கு விடுந்த வேண்டுகோள்களையும் மீறி அதிகமானோர் நிதியத்தில் இருந்து பணத்தை மீளப்பெற்றதனால் இவரின் கல்லன் குருப் நிதியத்தை மூடத்தீர்மானித்திருப்பதாக தெரியவந்துள்ளது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/blog-post_17.html"
2 comments:
நல்ல தகவல் பகிர்வு. முடிந்தால் இந்த வழக்கு தொடர்பாகவும் insider trading தொடர்பாகவும் எழுதவும்.
என்னது கல்லன் குரூப்பா? என்ன இழவு பெயரடா அது?
நல்ல தகவல் அச்சு.. வோல் ஸ்ட்ரீட் பொய் நம்ம தமிழன் ஒருத்தன் பெயரெடுக்கிறான்னு பாத்தா அவன் கதையும் இப்பிடியா முடியணும்..
தொடர்ந்து எழுதுங்கள்..
Post a Comment