அமெரிக்காவில் நிதி மோசடி தொடர்பில்,கைது செய்யப்பட்டுள்ள தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்தின் இலங்கையில் உள்ள டீ எப் சீ சீ வங்கியில் உள்ள பங்குகளை நேற்று(30.11.2009)விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ் ராஜரட்னத்திற்கு சொந்தமான டீ எப் சீ சீ நிறுவனத்தின் 12.2 மில்லியன் பங்குகளே( வழங்கப்பட்ட மூலதனத்தில்-9.09%) இன்று விற்பனை செய்யப்பட்டன. இதன் மொத்த பெறுமதி தெரியவரவில்லை.எனவே இந்த விற்பனை காரணமாக நேற்றைய கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விற்பனை 1 பில்லியனுக்கு மேலாக அதிகரித்து காணப்பட்டது.
ஏற்கனவே, கொமர்சல் வங்கி,சிலோன் லேதர் Products(CLPL)களில் உள்ள ராஜரட்ணத்தின் பங்குகளும் கடந்த வாரத்தில் விற்பனை செய்யப்பட்டன.
ராஜ் ராஜரட்ணத்திற்கு மோசடியில் இருந்து அமெரிக்கா பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பிணையை செலுத்துவதற்காகவே அவர் இலங்கையில் உள்ள பங்குகளை விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/blog-post.html"
No comments:
Post a Comment