பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்!
டொயோட்டா நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் 1376 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது.
ஆனால் முழுக்க முழுக்க தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்களே வேண்டும் என அறிவித்துள்ளது.
1994-ம் ஆண்டு பெரும் சரிவுக்குப் பிறகு மீண்டு வந்த டொயோட்டா, படிப்படியாக மீண்டும் பணியாளர்களை நியமித்து பழைய பலத்துக்குத் திரும்பியது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிட்டத்தட்ட அதே நிலைக்கு வந்துள்ளது டொயோட்டா நிறுவனம் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.
கடந்த ஆண்டு நஷ்டத்தைச் சந்தித்த இந்த நிறுவனம், இந்த நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் லாபம் காட்டக் கூடும் என்று தெரிகிறது.
எனவே மீண்டும் புதிய பணியாளர் தேர்வைத் துவங்கியுள்ளது. ஆனால் சாதாரண நிர்வாகப் பிரிவு பணிக்கும் பொறியியல் படிப்பு முடித்தவர்களே வேண்டும் என தகுதி நிர்ணயம் செய்துள்ளது இந்த நிறுவனம்.
2010 நிதியாண்டில் 460 நிர்வாக ஊழியர்களும் (எஞ்ஜினியரிங்), டொயோட்டா பயிற்சி மையத்துக்கு 240 பயிற்றுநர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இனி நிர்வாகப் பணிகளுக்கும் பொறியியல் படித்தவர்களே வேண்டும் என பிற நிறுவனங்களும் கேட்க ஆரம்பித்தால், கலைப்பிரிவில் பயின்ற மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளதாக ஜப்பானின் முன்னணி மனிதவள மேம்பாட்டு நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/clerk.html"
சுமார் 2 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான கடன்களை திருப்பிச் செலுத்த எட்டு ஆண்டுகள் கால அவகாசம் கோருகிறது துபாய் வேர்ல்ட் நிறுவனம்.
துபாய் அரசு பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள துபாய் வேல்ர்டு( நிறுவனம், கடந்தாண்டு திடீரென தனது கடனாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தது.
இதனால் துபாய் ரியல் எஸ்டேட் மார்கெட் அடியோடு சரிந்தது. பங்குச் சந்தையிலும் பதட்டம் நிலவியது,ஏராளமானோர் வேலையிழந்தனர்.
பிரிட்டனின் ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து, ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட், எச்எஸ்பிசி, லாயிட்ஸ் வங்கி குழுமம் உள்ளிட்ட சுமார் 100 வங்கிகளுக்கு 2 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு கடன் செலுத்த வேண்டியிருந்தது.
துபாய் வேர்ல்ட் நிறுவனத்தின் அனைத்துக் கடன்களையும் முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட கெடுவில், ஒரே செட்டில்மெண்ட்டில் முடிக்க துபாய் அரசின் உயர்மட்ட நிர்வாகிகள் முடிவு செய்திருந்ததாக செய்திகள் வெளியாயின.
துபாய் வேர்ல்டின் துணை நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ள அனைத்து முதலீட்டாளர்களையும் அழைத்து இதுகுறித்து அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் ஆலோசனை நடத்தினர்.
துபாய் ஆட்சியாளரின் உறவினரும் துபாய் நிதிக் குழுவின் தலைவருமான ஷேக் அஹ்மத் பின் சயீத் அல் மக்டோம் மற்றும் துணைத் தலைவர் மொஹம்மத் அல் ஷைபனிடோ ஆகியோர் லண்டனில் நடந்த முதலீட்டாளர் கூட்டத்தில் பங்கேற்று, துபாய் வேர்ல்டின் பிரச்சினை குறித்து விவாதித்தனர்.
இந்நிலையில், இக்கடன் தொகையில் சுமார் 2 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டொலர் தொகையை திருப்பிச் செலுத்த எட்டு ஆண்டு அவகாசம் வழங்குமாறு துபாய் வேர்ல்ட் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
இந்த அவகாசம் கிடைத்தால் ஒட்டுமொத்த தொகையையும் முழுமையாக திருப்பிச் செலுத்திவிட முடியும் என துபாய் வேர்ல்ட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_27.html"
புத்தளம் மாம்புரியில்(Mampuri areas of Kalpitya ) காற்றாலை மின்உற்பத்தி நிலையத்தை செனக் தனியார் நிறுவனம்(Senok Wind Power (Pvt) Ltd) நிறுவியுள்ளது.
10 மெகா வோர்ட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. தற்போது 5 காற்றாலை மின்விசிறிகள் பொறுத்தப்பட்டுள்ளதுடன் இன்னும் மூன்று விசிறிகள் அடுத்தமாதம் முடிவடைவதற்குள் பொறுத்தப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் புத்தளம் குருநாகல் வீதியில் அமைந்துள்ள கல்லடி மின்விநியோக நிலையத்துக்கு வழங்கப்பட்டு, அங்கிருந்து விநியோகப் பணிகள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_24.html"
வரவு செலவுத் திட்ட யோசனை எதிர்வரும் மே மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டதன் பின்னர் விரைவில் வரவு செலவுத் திட்ட யோசனை முன்வைக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலின் காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் அரசாங்கம் இந்த வரவு செலவுத் திட்ட யோசனையை முன்வைக்க உள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_23.html"
அறம் செய்ய விரும்பு என்பதுதான் சரி. ஆனால் நல்லது செய்யவும் பணம் தேவையே? நமது சமூகத்தில் பொதுவாக ஏழைகளிடமும் நடுத்தர மக்களிடமும் பணக்காரர்கள் என்றால் ஏதோ கெட்டவர்கள் போலவும், பணம் இருந்தால் மன நிம்மதி போய்விடும் என்றும் சில எண்ணங்கள் உள்ளது. நல்ல வழியில் சம்பாதித்து நல்ல விஷயங்களுக்காக செலவிடப்படும் பணம் ஒரு தனிப்பட்ட மனிதனுக்கும், அவனின் குடும்பத்துக்கும், அவன் சார்ந்த சமூகத்துக்கும் நல்லதே ஆகும்.
நாம் ஏன் பணம் சம்பாதிக்க வேண்டும்? வேறு எவரிடமும் கை ஏந்தாமல் நமது சொந்த தேவைகளையும் குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளவும், சமூகத்துக்காக செலவிடவும் பணம் தேவை. இவ்வாறு ஒவ்வொருவரும் நல்ல முறையில் பணம் சம்பாதித்து சேமித்து வந்தால் அது அந்த நாட்டையே வளமாக்க உதவும்.
எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்? சரி... இப்பொழுது நாம் ஒரு வேலைக்கு செல்கிறோம் அல்லது நாமே சொந்தமாக தொழில் செய்கிறோம். பணம் நமக்கு சம்பளமாகவோ அல்லது வருமானமாகவோ மாதந்தோறும் வருகிறது. அவரவர் வேலைகளுக்கு தகுந்தவாறு மாதம் ரூ. 50,000 மோ, ரூ. 100,000 மோ, ரூ. 200,000 மோ சம்பாதிக்கலாம். யார் பணக்காரர்?.... ரூ. 100,000 வருமானம் பெறுபவரா?.... மாதம் ரூ. 200,000 வருமானம் பெறுபவர் ரூ. 250,000 செலவு செய்தால், அதேப்போல் ரூ. 50,000 வருமானம் பெறுபவர் ரூ. 25,000 மட்டுமே செலவு செய்தால், இப்பொழுது யார் பணக்காரர்?.
ரூ. 50,000 வருமானம் பெறுபவர், தான் செலவு செய்யும் பணம் போக மீதியை என்ன செய்கிறார் என்பதும் முக்கியம். ஒருவர் பணக்காரர் ஆவதை, அவர் சேமிப்பு என்று எதை நினைக்கிறார் என்பதையும், அவர் எவ்வாறு சேமிக்கிறார் என்பதையும் பொறுத்தே அமையும். ரூ. 50,000 வருமானம் பெறுபவர் சிறப்பாக திட்டமிட்டு சிறந்த முறையில் சேமித்தால், முதலீடு செய்தால், அவரே மாற்ற இருவரை விட குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகலாம்.
ஆகவே ஒருவர் பணக்காரர் ஆவதை தீர்மானிப்பது ஒருவரது வருமானம் மட்டும் அல்ல, அவரின் செலவிடும் பழக்கமும், அவரின் சேமிக்கும் பழக்கமுமே ஆகும். சரி, இப்போது, பணத்தை எப்படி செலவிடுவது?... எப்படி சேமிப்பது?...
பொருளாதாரத் துறையில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம் பணத்தின் உண்மையான மதிப்பை அறிந்து கொள்வது தான். காலம் பொன் போன்றது; அதன் மதிப்பை அறியாமல் கால விரயம் செய்பவர்கள் சமுதாயப் பிணி. பணமும், காலமும் தராசில் நிறுக்கப் பட்டால் இரண்டும் ஒரு நிறை, ஒரு எடை.
பங்குகள் வாங்கும் போது விலையைத் தான் பார்க்கிறோமே தவிர, வாங்குகின்ற தொழிலின் மதிப்பைப் பார்ப்பதேயில்லை. 'அதெல்லாம் எப்படிப் பாக்கிறது?' கேள்வி எழலாம். உலகளாவிய நியதி ஒன்று சொல்கிறேன்.
ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம். முதல் முறை வாசிக்கும் போது புரிவதற்குச் சற்று கடினமாக இருக்கலாம். மேற்கொண்டு படித்துவிட்டு, பதிவின் இறுதியில் இன்னோர் தடவை திருப்பி வாசித்தால் புரிவது உறுதி.
அதற்கு முன் தற்போதைய மதிப்பைப் பற்றிய ஒரு சிறு பார்வை.இன்றைய நூறு ரூபாய் நாளைய நூறு ரூபாயை விடப் பெரிது. சுமார் 5% பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், அடுத்த வருடம் கிடைக்கும் ரூ100, இன்றைய ரூ95 க்குச் சமம். இது தான் வருங்காலப் பணத்தின் தற்போதைய மதிப்பு (present value of future cash). ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ரூ100 சம்பாதிக்கிறோம் எனில், அந்த சம்பாத்தியத்தின் தற்போதைய மொத்த மதிப்பு ரூ433.00.
யாராவது உங்களிடம் 100 ரூபாய் கடன் வாங்கி 5 வருடங்களில் திருப்பித்தரேன் என்றால்'' 78.4 ரூபாய்க்கு மேல் தர முடியாது என்று சொல்லிவிட வேண்டும்.(உதாரணத்துக்காக குறிப்பிடுகிறேன்)
சரி, தற்போதைய மதிப்பு (PV - Present value) பற்றிப் பார்த்தோம். ஒரு தொழிலில் முதலீடு செய்யும் போது எப்படி இதை பயன்படுத்துவது என ஒரு எளிய உதாரணம் கொண்டு ஆராயலாம்.
திரு.சங்கர் கார் ஒன்றை, ஓட்டுனர் வைத்து வாடகைக்கு விட்டுச் சம்பாதித்து வருகிறார். ரொம்பப் பழைய காராகையால் இன்னும் மூன்று வருடம் தான் ஓடும். அதற்கு மேல் அதைப் பேரிச்சம் பழத்துக்குத் தான் போடவேண்டும். சும்மா ஜோக்குக்காகச் சொன்னாலும், மூன்று வருடத்தில் விற்றால் ஒன்றரை இலட்சம் கிடைக்கும். அதற்கு மேல் வண்டி ஓடாது என வைத்துக் கொள்வோம். சீசனுக்குத் தகுந்த மாதிரி வருடா வருடம் ஓட்டுனர் சம்பளம், அரசுக்கான வரி இவையெல்லாம் போக கிடைக்கும் இலாபத்தையும் கீழே கொடுத்துள்ளோம். நம் கணக்கில் பணவீக்க வீதம் 5% என்பதாகக் கொள்வோம்.
முதலாம் ஆண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ.60,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ.57,120
இரண்டாமாண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ.50,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ.45,350
மூன்றாமாண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ.60,000 கார் விற்ற காசு = ரூ.150,000 மொத்தப் பணம் = ரூ.210,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ.181,440
மூன்று வருடத்திலும் கிடைக்கும் மொத்தப் பணத்தின் நிகர மதிப்பு = 57,120 + 45,350 + 181,440 = ரூ.283,910.
இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், சங்கரிடம் இருந்து கார் பிசினஸை நீங்கள் வாங்கினால்,ரூ.283,910 மேல் கொடுப்பது புத்திசாலித்தனமல்ல. அதே ஒரு நிறுவனமாக இருந்து அதில் 1000 பங்குகள் இருந்தால், பங்கு ஒன்றுக்கு 284 ரூபாய் தான் அதிகபட்ச விலை. சந்தையில் 400 ரூபாய்க்கு அவை விற்பனையானால், நீங்கள் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை.
இப்பதிவின் ஆரம்பத்தின் சொன்ன உலக நியதியை மீண்டுமொரு முறை வாசிக்கலாமா? "ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம்."
தற்போதைய பணமதிப்புத் தத்துவம் வாழ்வின் எல்லா இடங்களிலும் கையாளப்படலாம். பங்கு முதலீடு, கடன் கொடுத்தல், ஆராய்ச்சியில் அதிகப் படியான பணத்தை விரயமாக்குதல், கடன் வாங்கிப் மேல் படிப்புப் படித்தல், வங்கி வைப்பீட்டுத் திட்டத்தில் பணம் போடுதல் என எல்லாவற்றிலும்..
வளம் பெறுவோம்.
பி.கு:
1. பணவீக்கம் 5% என்பது கணக்கிட எளிதான ஒரு கற்பனை. நிஜ வாழ்வில் இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ அது இருக்கலாம்.
2. சங்கர் கார் தொழிலில் (3 வருடமும்) கிடைக்கும் வருவாய் எளிதாக முன் கூட்டியே நிர்ணயம் செய்தோம். நடைமுறையில் அது சாத்தியமல்ல. ஒரு தொழில் சிறக்குமா சிறக்காதா, எவ்வளவு வருவாய் ஈட்டித் தரும் என்பதெல்லாம் அறுதியிட்டுக் கூற முடியாத விஷயங்கள். பங்குச் சந்தையில் விற்று, வாங்கும் எவரும் தத்தமது எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலேயே விலையை நிர்ணயிப்பார்கள் (இதுவும் ஒரு கற்பனையா??)
3. சுலபமாக கணக்குப் போட ஏதுவாக, கார் வாடகைக்கு விடும் தொழிலின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் எனக் கொண்டோம். மூன்று வருடத்தில் மண்டையைப் போடும் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதில்லை என்பது ஆறுதல்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_19.html"
இலங்கை பங்குச்சந்தை வியாழக்கிழமை இன்று 0.35 சதவீதம் சரிவை கண்டுள்ளது.
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.35 சதவீதம் (13.10 புள்ளி) சரிந்து 3,755.19 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.18 சதவீதம் (07.86 புள்ளி) சரிந்து 4,319.59 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.76 பில்லியன் ரூபாய்.
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 18.02.2010
மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 18.02.2010
வியாழக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 363.2 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 364.8 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 728.0 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/18022010.html"
இலங்கை பங்கு சந்தை புதன்கிழமை இன்று 0.45 சதவீதம் சரிவை கண்டுள்ளது.
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.45 சதவீதம் (17.21 புள்ளி) சரிந்து 3,768.29 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.27 சதவீதம் (11.89 புள்ளி) சரிந்து 4,327.45 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 2.15 பில்லியன் ரூபாய்.
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 17.03.2010
மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 17.03.2010
புதன்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 262.3 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 83.6 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 345.9 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/17032010.html"
இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 1.51 சதவீதம் சரிவை கண்டுள்ளது.
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.51 சதவீதம் (58.05 புள்ளி) சரிந்து 3,785.50 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 2.26 சதவீதம் (100.27 புள்ளி) சரிந்து 4,339.34 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 2.14 பில்லியன் ரூபாய்.
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 16.03.2010
மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 16.03.2010
செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 55.4 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 406.0 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 350.6 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/16032010.html"
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 15.03.2010
மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 15.03.2010
திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 58.7 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 477.8 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 531.5 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/15032010.html"
நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த மைக்ரோசாப்ட் - யாஹூ இடையிலான இணைப்புப் பேச்சுவார்த்தை ஒரு வழியாக சாதகமான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டுதான் முதல் முறையாக யாஹூவை வாங்கும் தன் விருப்பம் மற்றும் அதற்கான தொகை குறித்து அறிவித்தது மைக்ரோசாப்ட். ஆனால் அந்த ஆண்டு விஷயம் சாதகமான முடிவுக்கு வராததால், மீண்டும் 2007ம் ஆண்டு இதுகுறித்த பேச்சில் இறங்கியது. 2008ம் ஆண்டு யாஹூவின் பங்குகளுக்கு 47.5 பில்லியன் டொலர் வரை தர முன்வந்தது மைக்ரோசாப்ட்.
ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை யாஹூ. பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2008ம் ஆண்டு மே மாதம் யாஹூவின் பங்குகள் விலை சரிந்து 33 டாலராகிவிட்டது. நேற்று யாஹூ பங்குகள் விலை மேலும் சரிந்து 16.32 டொலராகிவிட்டது.
இவர்களின் இந்த குழப்பமான நிலை கூகுளுக்கு பெரும் சாதகமாக அமைய, அசைக்க முடியாத பலத்துடன் முதலிடத்துக்கு வந்துவிட்டது கூகுள்.
இப்போது கூகுளை மிஞ்ச வேண்டிய கட்டாயத்திலிருப்பதால், யாஹூவும் மைக்ரோசாப்டும் மீண்டும் புதிய இணைப்பு முயற்சியில் இறங்கியுள்ளன. இதன்படி 10 ஆண்டுகளுக்கு இரு நிறுவனங்களும் கைகோர்த்து இயங்கும். அதன் மூலம் யாஹூ தேடியந்திரத்துக்கு கூடுதல் பலம் கிடைப்பதோடு, கூகுளுக்கு சரியான போட்டியாகவும் அமையும்.
இந்த நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதில் தமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று அமெரிக்க அரசும் அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் கூகுள் தேடியந்திரமே 3-ல் 2 பங்கு பயனாளர்களைக் கொண்டுள்ளது.
ஆனால் யாஹூவுக்கு 7.4 சதவீதமும் சீனாவின் பெய்டு தேடியந்திரத்துக்கு 7 சதவீகிதமும், மைக்ரோசாப்டின் பிங் சர்ச் என்ஜினுக்கு வெறும் 3.2 சதவீகிதமும் மட்டுமே பயனாளர்கள் உள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் அதிக பயன் யாஹூவுக்கே கிடைக்கும் என்று தெரிகிறது. முதல் 5 ஆண்டுகளுக்கு வரும் விளம்பர வருவாயில் 88 சதவீதம் யாஹூவுக்கே கிடைக்கும். தவிர, இந்த ஒப்பந்தத்துக்காக யாஹூவுக்கு 150 மில்லியன் டொலர்களை தருகிறது மைக்ரோசாப்ட். தவணை முறையில் இந்தத் தொகை தரப்படுமாம்.
தவிர, யாஹூவின் 400 பணியாளர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க பயனாளர்கள் யாஹூ தளத்தில் தேடத் துவங்கினால், அது தானாகவே மைக்ரோசாப்ட் தளத்துக்குப் போகும் அளவு வேலைகள் நடந்து வருகின்றன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு யாஹூ முழுமையாக மைக்ரோசாப்ட் கைக்குப் போய்விடும்.
வீட்டுக் கடன் நெருக்கடி உருவானது எப்படி? ஒரு போதும் இறங்காது என நம்பப்பட்ட வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்தது எப்படி? அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கவாறு தயாரிக்கப்பட்ட விவரணப் படம்.
இலங்கை பங்குச்சந்தை இன்று 0.33 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.33 சதவீதம் (12.54 புள்ளி) உயர்ந்து 3,844.84 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.11 சதவீதம் (04.74 புள்ளி) உயர்ந்து 4,432.80 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 2.87 பில்லியன் ரூபாய்.
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 12.03.2010 மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 12.03.2010
வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 1.59 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 94.0 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 1.69 பில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/12032010.html"