Saturday 6 March 2010

* வரிக்குப்பிந்திய இலாபமாக 46% மாபெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ள ஜனசக்தி

உள்ளூர் மற்றும் சர்வதேசரீதியில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், 2009 நிதி ஆண்டில் வரிக்குப்பிந்திய இலாபமாக 46% வளர்ச்சியான ரூ 657 மில்லியனை, இலங்கையின் மூன்றாவது பெரிய காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி PLC பதிவு செய்துள்ளது.

சவாலான சந்தை நிலைமைகளின் மத்தியிலும் விற்பனை வளர்ச்சி, வெற்றிகரமான நிதி முகாமைத்துவம், கடன் வாங்குதலில் பாரிய குறைப்பு மற்றும் நிதி செலவினங்கள் ஆகியவற்றுக்கு நிறுவனம் பாரிய பங்காற்றியதுடன், பற்றாளர் முகாமைத்துவம் தொடர்பிலான வெற்றிகளுக்கும் பங்களிப்பு செய்துள்ளது.

ஜனசக்தி காப்புறுதியின் தலைவர் டப்ளியூ. ரீ. எல்லாவல, "உலக பொருளாதார நெருக்கடியின் விளைவுகள், இலங்கையில் பல நிதி நிறுவனங்களின் வீழ்ச்சியுடன் நம்பிக்கையின்மையை தோற்றுவித்தது. இதனால் காப்புறுதித் துறைகள் நேரடியாக பாதிக்கப்பட்டு, செயற்பாடுகள் 3.7% மாத்திரமே வளர்ச்சி கண்டதுடன், இத்துறைக்கு ஒரு சவாலான காலகட்டமாக இது காணப்பட்டது. இந்த சவாலான பொருளாதார நிலைமைகள், எமது திறமைகளை வெளிக்காட்டி 2009இல் செயற்பாடுகளை முன்னெடுக்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது" எனத் தெரிவித்தார்.

"ஒரு புதுப்பிக்கப்பட்ட உத்வேகம், கடந்த வருட ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட இலக்குகளை அடைவதில் நாம் குறியாய் இருந்தோம். RAM தரப்படுத்தல் மூலம் வழங்கப்பட்ட BBB+ தரப்படுத்தலானது, எமது உறுதியான போட்டித்தன்மைமிக்க நிலைமை, மேம்படுத்தப்படும் காப்பீட்டு பெறுபேறுகள் மற்றும் விஸ்தரிக்கப்பட்ட முதலீட்டு தன்மைகளை வெளிப்படுத்தி எம்மை மேலும் வலுவாக்கியது" என மேலும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட வியாபார சூழல் மற்றும் நுகர்வோரின் குறைந்த வருமானம் ஆகியவை இணைந்ததாக இத்துறையின் சவால் அமைந்திருந்தது. இந்த நிலைமையானது, எமது ஆயுள் காப்புறுதியின் 0.4% வளர்ச்சியில் வெளிப்படுத்தப்பட்ட அதேவேளை, எமது பொதுக் காப்புறுதியானது 8.5% வளர்ச்சியை பெற்றது. மோட்டார் பிரிவற்ற வியாபாரமானது 2008ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17% வளர்ச்சியுடன் ரூ. 1.2 பில்லியனை பெற்ற அதேவேளை, மோட்டார் பிரிவு 5% வளர்ச்சியுடன் ரூ. 3 பில்லியனை பெற்றுக்கொணடது.

நிறுவனத்தின் மொத்த காப்பீட்டு கட்டணங்கள் 6.3% வளர்ச்சியுடன் ரூ. 5.7 பில்லியனை அடைந்த அதேவேளை, வருமானம் 7.7% வளர்ச்சியுடன் ரூ. 5.9 பில்லியனாக காணப்பட்டது. நிறுவனத்தின் மொத்த சொத்துக்கள் ரூ. 10.7 பில்லியனாக இருந்த வேளையில் நிறுவனத்தின் ஆயுள் நிதி ஏறத்தாழ 12% வளர்ச்சியுடன் ரூ. 3.2 பில்லியனை அடைந்தது.

நிறுவனம் இழப்பீட்டு பணம் கோரலாக ரூ. 2.8 பில்லியனை வழங்கியது. இது 2008உடன் ஒப்பிடுகையில் 12% அதிகமாகும். அதன் ஆயுளுக்கான மொத்த கட்டணங்கள் ரூ. 1.43 பில்லியனாக காணப்பட்ட அதேவேளை, பொதுப்பிரிவுக்கான மொத்த கட்டணங்கள் ரூ. 4.2 பில்லியனாக காணப்பட்டது.

"முப்பது வருட உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது தொடக்கம், அதன் பிரதிபலிப்பு கொழும்பு பங்கு பரிவர்தணை மற்றும் தனியார் முதலீடுகளில் எதிரொலிக்கின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கில் விரைவான அபிவிருத்தி மற்றும் அதிகரித்த உல்லாசப்பயணிகளின் வருகை வியாபார உந்துசக்திக்கு நம்பிக்கையாக உள்ளன. நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் தனது பங்கை செயற்படுத்த ஜனசக்தி காப்புறுதி PLC எப்பொழுதும் தயாராக உள்ளது" என தலைவர் முடிவாக தெரிவித்தார்.

ஜனசக்தி காப்புறுதி PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்டர், நிதி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்த, இலங்கை பொருளாதாரத்தையும் பலமாக பாதித்த உலக பொருளாதார நெருக்கடியின் போது நாம் பெற்றுக்கொண்ட இந்த வெற்றியில் எமது செயற்பாடு முக்கிய பங்காற்றுகின்றது எனத் தெரிவித்தார்.

"நாட்டை மூன்று தசாப்தமாக பாதிப்புள்ளாக்கிய யுத்தம் ஓய்ந்துள்ள இந்த வேளையில் பொருளாதார அபிவிருத்தியை நாம் எதிர்பார்க்க முடியும். மத்திய வங்கி வட்டி வீதங்களை அண்மையில் குறைத்துள்ளமை புதிய வாய்ப்புகளை உருவாகியுள்ளது. குறிப்பாக, அரச பிணைகளில் முதலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் முதலீட்டு நிதிகள் தொடர்பில், முறியடிக்கவேண்டிய சவால்களுக்கு மேலதிகமாக இது உள்ளது. ஆகவே, நாம் ஒரு புதிய சவாலுடனான சூழலில் செயற்படுகிறோம். அதன் காரணமாக, எமது செயற்பாட்டு திறனை அதிகரித்து, செலவினங்களை மேலும் கட்டுப்படுத்தி, அதன் நன்மைகளை நுகர்வோருக்கு வழங்க திட்ட்மிடுகின்றோம்".

"2010ஆம் ஆண்டில் பிரதான பிரிவுகளின் வளர்ச்சியை எதிர்பார்த்திருப்பதுடன், பணம் கோரலை கட்டுப்படுத்தி உறுதியான தளத்தில் செலவின கட்டுப்பாட்டை அதிகரிக்க நிறுவனம் நோக்கமாயுள்ளது. 2009ஆம் ஆண்டிற்கான எமது செலவினங்கள், உயர் தளம்பல் நிலையிலும் கூட, 2008ஐ விட சிறிய அளவிலேயே அதிகரித்திருந்தது. செலவின கட்டுப்பாட்டை உணர்ந்து செயற்பட்ட எமது ஊழியர்களுக்கே அதன் கௌரவம். 2009இல் ஊழியர்களின் எண்ணிக்கையை நிலையானதாக வைத்திருந்து இலாபத்தை அதிகரிப்பதில் நாம் வெற்றி பெற்றோம். 2010 எமது கிளைகளை இணைக்கும் ஒரு ஆண்டாக இருக்கும். நாம் இப்பொழுது வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் விஸ்தரித்துள்ளதுடன், எமது கிளைகளின் திறனை மேலும் அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம் என ஷாஃப்டா மேலும் தெரிவித்தார்.

உறுதியான நிதி பலத்துடன், ஜனசக்தி, குறுகிய காலப்பகுதியில் பலதரப்பட்ட சாதனைகளையும் துறைசார் சாதனைகளையும் அடைந்துள்ளது. அரச காப்புறுதி நிறுவனத்தை வாங்கி ஒரு தசாப்த காலப்பகுதியில், இலங்கையின் மூன்றாவது பெரிய காப்புறுதி நிறுவனமாக மாற்றியுள்ள முதலாவதும் ஒரே நிறுவனமுமாக ஜனசக்தி உள்ளது.

தெற்காசிய சந்தையில் நுழைந்துள்ள இலங்கையின் முதலாவது தனியார் காப்புறுதி நிறுவனமாகவும் ஜனசக்தி திகழ்கின்றது. சுனாமி தொடர்பில் அதிகப்படியான இழப்பீட்டு கோரல்களாக ரூ. 5 பில்லியனுக்கு அதிகமாக வழங்கிய நிறுவனமாகவும் இது திகழ்கின்றது.

காப்புறுதி நிறுவனங்களுக்கு மத்தியில் மிகவும் அதிகளவிலான மூலதனத்தைக் கொண்டுள்ள நிறுவனமாக ஜனசக்தி காப்புறுதி உள்ளது. இது சட்டப்படி தேவையான மூலதனத்தைவிட 7.5 மடங்கு அதிகமாக, ரூ. 1.49 பில்லியனைக் கொண்டுள்ளது. ரூ. 10 பில்லியனுக்கு அதிகமான சொத்துக்களை நிறுவனம் கொண்டுள்ளதுடன், இவற்றில் ரூ. 3.5 பில்லியன் அரச பிணைகளில் காணப்படுகின்றது. மிகவும் குறுகிய காலப்பகுதியில் ரூ. 5 பில்லியன் வருடாந்த வருமானத்தை ஜனசக்தி காப்புறுதி அடைந்துள்ளதுடன், நாடு முழுவதும் 100இற்கும் அதிகமான இடங்களில் கிளை வலையமைப்பையும் கொண்டுள்ளது.

குறியீட்டுத் திறமைகளை கௌரவிக்கும் 18ஆவது உலக குறியீட்டு காங்கிரசில், குறியீட்டு தலைமைத்துவத்துக்கான விருது சேவைத் துறை மற்றும் சமூக சந்தைப்படுத்தலுக்கான விருது ஆகிய இரட்டை விருதுகளைப் பெற்றது. பலதரப்பட்ட பிராந்திய குறியீடுகளின் மத்தியில் தனித்து இந்த விருதை பெற்றுள்ளதுடன், இலங்கையின் கரைக்கு அப்பால் நிறுவனத்தின் குறியீட்டு பெறுமதியை பிரதிபலித்துள்ளது.

வியாபாரத்தில் திறமையை வெளிப்படுத்தும் அதேவேளை, நாட்டில் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் வியாபாரங்களை கௌரவிக்கும், தேசிய வியாபார திறமை விருதுகள் 2009இல், இரண்டாவது தொடர்ச்சியான ஆண்டாகவும், காப்புறுதித் துறையில் ஜனசக்தி வெள்ளி விருதை பெற்றுக்கொண்டது.

அண்மையில் நடைபெற்ற எஃபி விருதுகள் (Effie Awards Sri Lanka 2009) நிகழ்வில் நிறுவன கௌரவம் ஃ நிபுணத்துவ சேவைகள் பிரிவில் வெண்கல விருதை வென்றுள்ளதுடன், எஃபி விருது பெற்ற ஒரே காப்புறுதி நிறுவனமாக திகழ்கின்றது. இலங்கையில் உள்ள அதிசிறந்த 50 நிறுவனங்களுள் ஒன்றாக டுஆனுஇனால் பட்டியலிடப்படுள்ளது. இதில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள நிறுவனமாக ஜனசக்தி உள்ளது.

ஜனசக்தியின் விளையாட்டுகளுக்கான அர்ப்பணிப்பு, கிராமிய தடளப் போட்டிகளுக்கு மூன்றாவது தொடர்ச்சியான ஆண்டாகவும் அனுசரணை வழங்கியதில் வெளிப்பட்டதுடன், அதன் பிரதிபலனை தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கண்டுணர முடிந்தது. தேசிய கண் வைத்தியசாலையில் அறிவிப்புகளை நிறுவுதல் போன்ற சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் மற்றும் படகோட்டம், ஸ்குஷ் மற்றும் அதன் விசேட ஆர்வமுள்ள விளையாட்டான ஹொக்கி போன்றவற்றுக்கும் அனுசரணை வழங்குகின்றது. பாதசாரி கடவை, சுனாமி உதவி நிகழ்ச்சித்திட்டங்கள், பாதுகாப்பான குப்பி விளக்கு மற்றும் டெங்கு விழிப்புணர்வு திட்டங்கள் போன்ற பொதுமக்கள் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் நிதியுதவி வழங்குகின்றது. சிறப்பான நிறுவன முகாமைத்துவத்தின் காரணமாக, வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் நாட்டுக்கு கடந்த 15 வருடகாலத்தில் சிறப்பான பெறுமதியை வழங்கும் ஒரு சமூக பொறுப்புணர்வுள்ள நிறுவனமாக ஜனசக்தி நிலைநாட்டியுள்ளது.

ஜனசக்தி காப்புறுதியின் பணிப்பாளர் சபை, வியாபார உலகில் தனித்துவமான நிலையை கொண்டுள்ள நிபுணர்களான, டப்ளியூ. ரீ. எல்லாவல (தலைவர்), சீ. ரீ. ஏ. ஷாஃப்டர் (பிரதித் தலைவர்), பிரகாஷ் ஷாஃப்டர் (முகாமத்துவப் பணிப்பாளர்) ஆகியோரைக் கொண்டுள்ளதுடன், சபையின் ஏனைய உறுப்பினர்களாக, எல். சீ. ஆர். டி விஜேதுங்க, தேசமான்ய டாக்டர் நிஹால் ஜினசேன, ஏர்ட்லி பெரேரா, அனுஷ்யா குமாரசுவாமி, ரமேஷ் ஷாஃப்டர் மற்றும் மஞ்சுளா மெத்யூஸ் ஆகியோரைக் கொண்டுள்ளது.

நன்றி:- வீரகேசரி இணையம் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/46.html"

No comments: