Wednesday, 10 March 2010

* பிரிட்டனில் காசோலைக்கு 2018ல் முற்றுப்புள்ளி

பிரிட்டனில் வரும் 2018ம் ஆண்டு முதல் காசோலை முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும் என இங்கிலாந்து பேமென்ட் கவுன்சில் (PAYMENT COUNCIL) அறிவித்துள்ளது.

பணம் செலுத்தும் முறைகளில் நவீன மற்றும் மேலும் திறன் மிக்க வழிமுறைகளை கையாள ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. தற்போது பெரும்பாலும் பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளே பயன்பாட்டில் உள்ளது.



எனினும் பிரச்னைகள் மிகுந்த காசோலை முறையை ஒழிக்க திட்டமிடப்பட்டது. பிரிட்டனின் நிதித் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய பேமென்ட் கவுன்சில் இதற்கான தீர்மானத்தை ஒருமித்தக் கருத்துடன் நிறைவேற்றியுள்ளது.

இதன்படி, வரும் 2018ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை தான் காசோலைகளுக்கு மதிப்பு. அதன் பிறகு அவை மதிப்பற்றதாக கருதப்படும். 350 ஆண்டு பழமை வாய்ந்த இந்த காசோலை பயன்படுத்தும் முறை அத்துடன் காலாவதியாகி விடும்.

இதுகுறித்து கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி பால் ஸ்மீ கூறுகையில், '21ம் நூற்றாண்டில் வளர்ந்துள்ள தொழில்நுட்ப சூழலில் பேப்பர் மூலம் பணம் செலுத்தும் முறையை விட பல திறன்மிக்க வசதிகள் சாத்தியப்படும்.

பொருளாதாரத் துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு வாய்ப்பு என்றார். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/2018.html"

4 comments:

கன்கொன் || Kangon said...

புதிய தகவல்...
இன்னும் 8 வருடங்கள் உண்டு என்றாலும் ஒரு முறையே இல்லாமல் போவது வித்தியாசமாக உள்ளது...

யோ வொய்ஸ் (யோகா) said...

இலங்கைக்கும் இப்படி வந்தால் செக் மோசடி செய்பவர்கள் எப்படி தப்பிப்பார்கள்?

nadpudan kathal said...

அண்ணா நான் உயர்தரத்தில் படித்த காசோலை இன்னும் எட்டு வ வருடங்களில் வழக்கிழந்து போக போகிறது!!! வேடிக்கையாக இருக்கிறது!

இப்படிதான் நாம் தொழில்நுட்பத்தை காட்டி எம் அடையாளங்களை இழந்து வருகிறோம் அல்லவா?

Bavan said...

//350 ஆண்டு பழமை வாய்ந்த இந்த காசோலை பயன்படுத்தும் முறை அத்துடன் காலாவதியாகி விடும்//

அட...

புதிய தகவல்... இது போன்ற பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தவை அண்ணா... இது போல புதிய விடயங்களை இன்னும் எதிர்பார்க்கிறோம்....;)